ஓர் அழகான எழுத்து முயற்சி.

ஈழக்காட்சிகள்

10 comments
இரத்தவெறி பிடித்த
மனித மிருகத்திடம்
சிக்கியதொரு கூட்டம்
வீரர்களின் உறுப்புகள்
தெறித்து சிதறுகின்றன
பதுங்கு குழிகளெங்கும்
இரத்தஆறுகள் ஓடுகின்றன
எதிர்படும் உயிர்களெல்லாம்
மரணபயத்தில் அலறுகின்றன
அதோ அங்கே
உடல்கள் தரம் பிரிக்கப்பட்டு
தலைகள் கொய்யப்படுகின்றன
தேர்ந்தெடுக்கப்பட்ட பிணங்கள்
நிர்வாணமாகி காமப்பசிக்கு உணவாகின்றன
சுமையான சதைப்பிண்டங்கள்
குப்பையென வீசப்படுகின்றன
அதோ அங்கே
ஒருவன் உயிருடன் உள்ளான்
போகிற போக்கில் பொழுதுபோக்காக
கத்தியால் கழுத்து துண்டிக்கப்படுகிறது
தொடர்கிறது வேட்டை
விடிய விடிய இரத்தபலி
குவிகிறது சடலங்கள்
அழகான காட்சிகள்
நன்றாக வேடிக்கை பார்த்தோம்
இரவு உணவை முடித்துவிட்டு
நிம்மதியாக உறங்களாம்
அந்த வெறிபிடித்த மிருகமோ
புத்தனை பிரார்த்தனை செய்கிறது
தன் பாவங்களை போக்க!
நாமோ மெளனமாக வேடிக்கை பார்க்கிறோம்
மெளனம் கலைவீரோ தோழர்களே!!

Ads

Ticketamerica.com has football nfl tickets for the atlanta falcons and the buffalo bills as well as the houston texans seating charts home and away games too.

buffalo bills tickets
houston texans tickets
atlanta falcons tickets

10 comments :

  1. வந்தேன் வாசித்தேன் சகோதரா...வலைக்கு வந்து கருத்திட்டமைக்கு மிக நன்றி மீண்டும் வருகிறேன்.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. //குவிகிறது சடலங்கள்
    அழகான காட்சிகள்
    நன்றாக வேடிக்கை பார்த்தோம்//

    ஆயிரமாயிரம் ஆண்டு வரலாற்று பெருமைகள் பேசுவதையே பெரும்பேராய் நினைக்கும் ஈன இனம் நம்மினம்,சேகர்.

    ReplyDelete
  3. //நாமோ மெளனமாக வேடிக்கை பார்க்கிறோம்//இல்லையே.கவிதை எழுதி உசுப்பிக் கொண்டல்லவா இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. மிக உணர்ச்சிகரமாக இருக்கிறது

    ReplyDelete
  5. கவிதையும், படமும் என்னை மிகவும் பாதித்துவிட்டன. சானல் 4 போல. இவ்வளவு குரூராமாகவா நம் சொந்தங்கள் அழிக்கப்படுகின்றனர்? இது என்ன கத்தரிக்காய் குவியல் போல பிணங்கள்? இந்நிலை மாற என்ன செய்வது? நானும் இதைக் குறித்து ஒரு கவிதை எழுதலாம் என்று நினைக்கிறேன். விரைவில் செய்கிறேன். மனம் பாதித்த பதிவு. தொடருங்கள் சகோ.

    ReplyDelete
  6. மனதில் தீ வளர்த்தபடிதான் இருக்கிறோம்.ஆறவிடவேண்டாம் நீங்களும்.என்றாலும் முடியவில்லை !

    ReplyDelete
  7. படங்களும், கவிதையும் கண்ண்ணீரை வரவைக்குது. என்று தீரும் இந்த அவலம்?

    ReplyDelete
  8. ஸ்வீட் கவிதை உன் அன்பு
    நெருப்பாக இருத்தாலும் நேசிப்பேன்
    நான் எரிந்து சாம்பல் ஆகும் வரை நினைப்பேன்
    இப்படிதான் இருக்கணும்

    இப்படிக்கு ...
    அன்பு ...பாசம்

    ReplyDelete
  9. இருளில் வழி கேட்க
    எழுந்து வந்தேன்
    உன்
    கண்களின் வெளிசத்தை
    நீ
    காட் டிய பிறகுதான்
    திசைகளே தெரியாமல் திகைக்கிறேன்...
    ராதா

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..