ஓர் அழகான எழுத்து முயற்சி.

வறுமையின் மதிய உணவு

17 comments
வறுமையின் மதிய உணவு
வறுமையின் மதிய உணவு
உயிரை உருக்கும் நண்பகல்
நீண்ட தகிக்கும் தார்சாலை - அதன்
இடது ஓரத்தில்
மரத்தின் நிழலில்
மெலிந்த தேகம்
வெள்ளைச் சட்டை
கருத்தமுகம் - அதில்
அறுபதை தாண்டிய வறுமையின்
வெற்றிக் கொண்டாட்டம்
சட்டியில் பழையசோறு
ஒரு கையில் மிளகாய்
மறுகையில் உணவென
பசியாறிக் கொண்டிருந்தது
அந்த வயோதிக வயிறு
உட்கார விரிப்பில்லை
குடிக்க நீரில்லை
சாலையின் இரைச்சல்
புழுதியின் நடுவே
சற்றும் சலனமில்லாமல்
தன் வாழ்க்கையை
கடந்து கொண்டிருந்தது
அந்த மெளனம்.

17 comments :

  1. படமும் பதிவும் மனம் சங்கடப் படுத்திப் போகிறது
    வேதனையைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    வேறென்ன சொல்ல ?

    ReplyDelete
  2. படமும் பதிவும் கண்டேன்-தீ
    பற்றிய வேதனைக் கொண்டேன்
    இடமிலை ஏழைகள் வாழ-என்றே
    எழுதினீர் இங்கே தோழ

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. ஐயா அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. படமே வலிக்கிறது.வறுமை கொடுமை !

    ReplyDelete
  4. இது கொடுமையிலும் கொடுமை...

    மாற வேண்டும் அனைத்தும்....

    வலிகளோடு கூடிய கவிதை அருமை...

    ReplyDelete
  5. அதிலும் இளமையில் வறுமை
    மிகக் கொடிது அவ்வையார் சொன்னது போல் .
    நன்று.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  6. வறுமை வாழ்வின் மிக கொடுமை யாருக்கும் வரக்கூடாது இந்நிலை..... மிக அருமையான கவி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  7. மனதை தொடும் வரிகள்... அந்த படத்தை பார்க்கும் போது மனதில் இனம் புரியாத சோகம் எழுகிறது நண்பா

    ReplyDelete
  8. வலி மிகும் வரிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  9. வேதனை மிகுந்த யதார்த்தம்.நன்று கவிதை

    ReplyDelete
  10. முதுமையில் வறுமையின் கொடுமையை உங்கள் கவிதை உணர்த்துகிறது! இளமையில் வறுமையின் கொடுமையை அந்த படம் உனர்த்துகிரது!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  11. வறுமைக்கு வாழ்கை பட்ட மனிதர்களின்
    வலிகள் பதிந்த வரிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..