அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

ஜல்லிக்கட்டு - புரட்சி மலராது - புரட்சி வெடிக்கும்

2 comments
ஒருவனை கொல்வதற்கு பதிலாக உதாசினப்படுத்துங்கள்.
நடைபிணமாகி விடுவான்.
கருவறையிலிருந்து வெளிவரும் எந்த ஒரு குழந்தையும் சாதி,மதம்,இனம்,பாரம்பரியம் என எல்லா சாயங்களோடுதான் பிறக்கிறது.இந்த சாயங்கள் அந்த குழந்தைக்கு ஒரு அடையாளத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கிறது. குழந்தை வளர வளர சில சாயங்களை தானாகவே களைத்துக் கொள்கிறது.சில சாயங்கள் இடுகாட்டில் எரித்த பின் அல்லது புதைத்த பின் தான் போகின்றன.

இதில் பிரிக்க முடியாதது என்று பார்த்தால் இனமும்,பாரம்பரியமும்.ஏனென்றால் மிருகமாயிருந்தவன் மனிதனாகி ,சிறு கூட்டமாக வாழ ஆரம்பித்தபோதே இனமும்,பாரம்பரியமும் தொடங்கிவிட்டன.ஒவ்வொரு கூட்டமும் ஒரு இனமாகியது.ஒவ்வொரு இனமும் தனக்கே உரித்தான பாரம்பரியத்தை கொண்டிருந்தது.காலப்போக்கில் வலுவான இனம் நிலை கொண்டது.வலுவற்றவை மறைந்து விட்டன.சில இனங்கள் வலுவற்றவைகளாக்கப்பட்டு நசுக்கப்பட்டன.இங்கே தான் மனித அரசியலும் ஆரம்பிக்கிறது.

வரலாறு முழுவதும் சில இனங்கள் கட்டம் கட்டி அழிக்கப்பட்டிருக்கின்றன.யூதர்கள்,ஆஸ்திரேலிய பழங்குடியினர்,செவ்விந்தியர்கள் என இந்த இன அழிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.நவீன மனித வரலாற்றுப் பட்டியலில் அதிகம் அழிக்கப்பட்ட இனம் யூதர்கள்.தற்போது தமிழனும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளான்.சில இனங்கள் ஆக்கிரமிப்பிற்காக அழிக்கப்பட்டன.ஆனால் யூதர்களும்,தமிழர்களும் மட்டும் இனம்,புத்திசாலிதனம்,பாரம்பரியம் ஆகிய காரணங்களுக்காக அழிக்கப்படுகிறார்கள் என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே உருவான மூத்த குடிமக்கள் இந்த தமிழ் மக்கள்.தமிழர்களின் பூர்வீகம் இந்தியா என்று சொன்னால் சிரிப்பு தான் வரும்.உற்று பாருங்கள் நிலத்தில் ஒட்டியிருந்தாலும் நிறத்தில், குணத்தில்,அறிவில் தமிழர்களுக்கும் மற்ற மாநிலத்தவருக்கும் நிறைய வேற்றுமைகள்.தமிழனின் மூலம் குமரிக்கண்டமா அல்லது வேறா என்பது முக்கியமல்ல.தமிழனின் மூல வேர் இந்தியா அல்ல என்பது மட்டும் உண்மை.
தன்னை சுற்றி ஒரு புத்திசாலி இனம் இருக்கும் போது அவன் சிறுபான்மையாக இருந்தால் இந்த உலகம் அந்த இனத்தை கருவறுக்கும். இல்லையென்றால் அவனை உதாசீனப்படுத்தும்.இது வரலாறு கூறும் உண்மை.

வீட்டில் மூத்த அண்ணன் இருக்கும் போது இளைவனுக்கு எப்படி கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்.தமிழ் தான் எல்லா மொழிகளுக்கும் மூலம் என ஒரு ஆய்வு கூறுகிறது.இப்போதுள்ள இனங்கள் தோன்றுவதற்கு முன்னரே நாம் இலக்கியங்களை படைத்து யாதும்ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லிவிட்டோம்.எதிரியாக இருந்தாலும் வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் விருந்தினராக கருதும் பண்பாட்டை உலகத்திற்கே காட்டியவன் தமிழன்.இப்படி எல்லாவற்றிற்கும் ஆதியாகி, மூலமாகி போய்விட்டாதால் என்பதால் தானோ எதிர்க்கப்படுகிறான்.ஒதுக்கப்படுகிறான்.வஞ்சிக்கப்படுகிறான்.

இதனால் தான் தமிழன் தன் அடையாளத்தை காக்கவே போராட வேண்டியிருக்கிறது. உலகத்திற்கே உழவைப் பற்றி பாடி பாடம் எடுத்தவன் ஒரு சொட்டு நீருக்காக உயிரை விடுகிறான்.ஏதோ ஒரு அற்ப பூச்சியின் சாவைப் போல் தமிழனின் சாவு நடக்கிறது.தமிழர்களுக்குள் இருக்கும் சில அரசியல் புல்லுருவிகளால் மொத்த தமிழ் இனமும் அசிங்கப்பட்டு இருக்கிறது.முதலில் சொன்ன இரண்டு வரிகளைப் போல் தமிழனை அழிக்க முடியாது என தெரிந்த பின் இப்போது உதாசினப்படுத்தி நடை பிணமாக்கப் பார்க்கிறார்கள்.சில அரசியல் மடையர்கள்.

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டே என எங்கள் கவியரசர் சொன்னது போல் சற்றும் வீரியம் குறையாமல் போராட ரோட்டிற்கு வந்து விட்டார்கள் தமிழர்கள்.அதுவும் கண்ணியத்துடன்.உலகத்திற்கே பாரம்பரியத்தை சொல்லிக்கொடுத்தவர்களாயிற்றே.இதை வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாக பார்க்கமுடியாது.பல நாள் மூடிவைத்த வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடாகதான் பார்க்க முடியும்.
ஒரு இனத்தின் உரிமைகள் மறுக்கப்படும் போது,அடையாளங்கள் அழிக்கப்படும் போது போராட்டம் வெடிக்கும்.

உலகத்தில் எங்கும் புரட்சி மலர்வதில்லை.புரட்சிகள் வெடிக்கின்றன.ஆனால் ஒவ்வொரு புரட்சிக்கு பின்னாலும் ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின் அவல குரல் இருந்து கொண்டேதான் இருக்கிறது.அது இப்போது தமிழர்களின் குரலாக இருக்கிறது. அதுவும் ஓங்கி ஒலிக்கும் குரலாக இருக்கிறது.அது வரலாறுகாணாத வெற்றியாக வேண்டும்.அதற்கு நாம் நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும்.ஆகவே இதை ஜல்லிக்கட்டிற்கான போராட்டமாக பார்க்காமல்,இனத்தின் எழுச்சியாக ,புரட்சியாக பார்க்கவேண்டும்.

"அதர்மத்தை எதிர்த்து நீங்கள் போராடுகிறீர்கள் என்றால்,நீங்களும் என் நண்பனே !" -- என்ற சேகுவராவின் வார்த்தைகளுக்கு உதாரணமாக நண்பர்களாக போராட்டத்தை ஆரம்பித்த அனைத்து மாணவர்களுக்கு உதவியாக தோளேடு தோள் சேர்ந்து போராடுவோம்.தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து செல்வோம்.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..