அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

வெறும் பேனா நீ

2 comments


தோல்வியென்னும் சூறாவளியாலும்
வெற்றியென்னும் வெடிகுண்டாலும்
உடையாத கோட்டை கட்ட
வெறும் பேனா நீ
கருங்கல் கேட்டேன் அவனிடம்

அவனோ தோல்வியை
மட்டுமே தந்தான்
தோல்வியை வைத்தே
கோட்டை கட்டினேன் - அற்புதம்
இப்போது எதையும் தாங்கும்
அற்புதக் கோட்டை என்னிடம்

அது என் மனக்கோட்டை
அதை தந்தவனுக்கு
நன்றி சொன்னேன்
அவனோ நான் கொடுத்தவற்றை
மற்றவருக்கு கொடுத்துவிடு என்றான்.
கொடுப்பதும் நான்
கொடுக்கும் பொருளும் நான்

எல்லாம்  நான்
வெறும் பேனா நீ
என சொல்லி மறைந்தான்

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

Maintain your perspective

6 comments
தனிப்பட்ட பார்வையை தக்க வைத்துக் கொள்ளுங்கள்

Maintain your perspective
Maintain your perspective
கவலை கவ்விய முகத்தோடு
பூங்காவில் மனம் பறந்துகொண்டிருக்க
ஆங்கோர் சிறகொடிந்த பட்டாம்பூச்சி
மலர்களில் அமர்வதுமாயும்
தேன் குடிப்பதுமாயும்
மேலும் கீழும் பறப்பதுமாயும்
வாழ்க்கையை கரைத்துக் கொண்டிருக்க
சட்டென கேள்வியொன்று கேட்டேன்
ஏ பூச்சியே உனக்கு
கவலையில்லையா வலிக்கவில்லையா?
என் காதோரம் அமர்ந்து
கதையொன்று சொல்வேன்
பொறுமையாக கேளாய்யென்றது

ஆங்கோர் மருத்துவமனையில்
அடுத்தடுத்த அறையில்
இருவர் அனுமதிக்கப்பட்டனர்
அதிலொருவனுக்கு ஜன்னில்லா அறை
தனிமையும் வேதனையும் நச்சரிக்க
புலம்ப ஆரம்பித்தான் அதைகேட்ட
ஜன்னலுள்ள அறைக்காரன்
ஜன்னலின் வெளியே உள்ளவற்றை
அழகுபட கூற ஆரம்பித்தான்
கேட்டவனுக்கோ இயற்கையை
ரசிக்கமுடியாத வருத்தம்
ஜன்னல்காரனை வெறுத்தான்
இரவில் வந்த நீண்ட இருமல்
ஜன்னல்காரனின் உயிரைக்குடித்தது
பாதுகாப்பு மணி இருந்தும்
ஜன்னலில்லா அறைக்காரன் அழுத்தவில்லை
இப்போது இவன் தனது அறையை
மாற்றிக்கொண்டு ஜன்னலின் வழியே
எட்டிப்பார்த்தான் - அதிர்ச்சி
 ஜன்னல் வெறும் சுவரைக் காட்டியது
கஷ்டமான சூழ்நிலையிலும்
ஜன்னல்காரன் இவனை
தனது கற்பனையாலும்
சுத்தமான அன்பினாலும்
சந்தோஷப் படுத்தினான்
கதையை சொல்லிவிட்டு
கண்களில் கண்ணீரை கொடுத்துவிட்டு
பறந்தது பட்டாம்பூச்சி

கேட்பீர் தோழர்களே
எல்லா இருட்டிலும்
ஒளிவரும் பாதையுண்டு
இக்கஷ்டம் பெரியதா
இத்தோல்வி பெரியதாவென
உங்களை நீங்களே கேளுங்கள்
ஒளிக்கான பாதை தெரியும்
கஷ்டத்திலும் ஒளிமயமான
பாதையை தேடும் பார்வையை
தக்கவைத்துக் கொள்ளுங்கள்
அது உங்களை
வெளிச்சத்திற்கு கூட்டிச்செல்லும்
பூமியின் மீதான உங்களின்
வருகைக்காலம் குறைவு
வருத்தப்பட்டு இருளில்
வாழ்க்கையை கரைக்காதீர்கள்
ஒளியை தேடும் திறனை
கண்டு கொள்ளுங்கள்
புத்திசாலிதனத்துடன் வாழ்வை
துளிகூட மிச்சமில்லாமல்
பருகி விடுங்கள்

6 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..