தனிமை கடற்பயணம்
Marc
10:03 AM
kavithai
,
kavithaigal in tamil
,
poem about life
,
poems
,
poems about life
,
tamil kavithai
,
tamil kavithaigal
,
tamil poems about life
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
வாழ்க்கை கவிதைகள்
2 comments
lonely sea travel
அவன் கொடுத்த திசைமானியைதொலைத்து விட்டேன்
காற்றடிக்கும் திசைகளிளெல்லாம் என்
பாய்மரம் நகர்ந்து கொண்டிறிக்கிறது
lonely sea travel |
மெல்ல மெல்ல என் வாழ்க்கை
ஊர்ந்து கொண்டிருக்கிறது
அகல் விளக்கின் துணைகூட இல்லாமல்
இரவில் தவிக்கிறேன்
பகலில் காய்கிறேன்
சுற்றி நீரிருந்தும்
நீர் வற்றி தவிக்கிறேன்
இந்த நீல வானமும்
நீலக்கடலும் என்னை
நிலைகுலையச் செய்கின்றன
அழகெல்லாம் பயமுறுத்தும்
பேய்களென தெரிகின்றன
என் பாடலே எனக்கு
மரண ஓலமாய் கேட்கிறது
என்னுளிருந்த கலைஞன்
முழுவதுமாக கருகிவிட்டான்
கலைதாகத்தோடு பயணம் மேற்கொண்டேன்
கரை என்னை ஏமாற்றிவிட்டது
உன்னை அழகென காட்டிவிட்டது
நீயோ சத்தமில்லாமல்
பலரைக் கொன்று
உன்காலடியில் புதைத்து
கரையில் உள்ளவர்களிடம்
அமைதியென புன்னகைக்கிறாய்
என்னை விட்டுவிடு
என் கவிதைப்பயணத்தை
இறுதிப்பயணம் ஆக்கிவிடாதே
Subscribe to:
Post Comments
(
Atom
)
என்ன நண்பரே .. சில இடங்களில் கவிதையின் வாயிலாக யாரையோ சாடுவது போல் தெரிகிறது ..
ReplyDeleteஒண்ணுமே விளங்கவில்லை . தெளிவு படுத்துங்க
யாரையும் சாடவில்லை நண்பரே!!இது ஒரு கலைஞனின் கடற்பயணம்.
Delete