கருவறையின் கதறல்
Marc
4:00 PM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
poem about life
,
poems
,
tamil kavithai
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
வாழ்க்கை கவிதைகள்
22 comments
கருவறையின் கதறல் |
விதையென விதைத்தேன்
அதை கருவறைக்கூட்டில்
பொன்னெனக் காத்தேன்
என்னைக் கொடுத்து
உயிர்துளி பிரித்து - அதில்
அன்பின் ரசமும் அமுதமும் கலந்தூற்ற
மலரே நீயும் மலர்ந்தாய்
அமுதவாய் மொழிந்தாய்
காலமும் கடக்க
மோகமும் பிடிக்க
முட்களும் வளர்ந்து
இருதயத்தைக் கிழிக்க
யாரிடமும் சொல்லாமல்
வேரை நீ அறுக்க
ஆழமாய் வளர்ந்தவள்
அடியில்லாமல் சாகிறேன்
காலத்தைக் கடந்தவள்
கணப்பொழுதில் காய்கிறேன்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு
காதலும் ஒரு பிரசவம்தான்.சுகப்பிரசவம் என்பது விதியின் கையிலோ !
ReplyDeleteவணக்கம் நண்பரே
ReplyDeleteஉங்கள் கவிதைகள் படிக்கையில்
மனதின் காயங்களுக்கு தீர்வுகள் நிச்சயம்
என்பது மட்டும் தெளிவாக விளங்குகிறது.....
தங்களை ஒரு தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறேன்..
நேரம் கிடைக்கையில் என் தளம் வந்து பாருங்கள்.
நன்றிகள் பல.
என்னை தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றி.
Deleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
அற்புதக் கவிதை...
ReplyDeleteஅருமையான சொற்கள்
சுரம் பிரித்தன உண்மைஎது
பொய்யெது என நிறம் பிரித்தன..
வாழ்த்துக்கள் நண்பரே!
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteபடமும் கவிதையும் அருமை சகோ. வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Delete''..முட்களும் வளர்ந்து
ReplyDeleteஇருதயத்தைக் கிழிக்க
யாரிடமும் சொல்லாமல்
வேரை நீ அறுக்க
ஆழமாய் வளர்ந்தவள்
அடியில்லாமல் சாகிறேன்
காலத்தைக் கடந்தவள்
கணப்பொழுதில் காய்கிறேன்..''
மிக சோகமான வாழ்வு...பற்றிய கவிதை....நன்று .வாழ்த்துகள்.
என்வலைக்கும் வருகை தரலாமே....
வேதா. இலங்காதிலகம்.
கண்டிப்பாக வருகிறேன் சகோதரி.
Deleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
வார்த்தைகளின் கோர்ப்பில் வலியின் ஆழம் புரிகிறது. அதிலும் இறுதி ஐந்து வரிகள் கவிதையின் முழுவேதனையையும் வெளிப்படுத்துகின்றன. மனம் நெகிழ்த்திய கவிதை.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஎழுத்தில் வலி தெரிகிறது. எதையோ எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவது தெரிகிறது. என்னவென்று அவரவர் கற்பனைக்கு விடுவதை விட இன்னும் எளிதாகப் புரியும்படி இருந்தால் சிறப்பாக இருக்கும். இன்னும் ரசிக்க முடியும்.வித்தியாசமான கருத்து ஏற்காமல் போகலாம்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteநெகிழ்ச்சியான கவிதை ! வாழ்த்துக்கள் நண்பா !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteகாலமும் கடக்க
ReplyDeleteமோகமும் பிடிக்க
முட்களும் வளர்ந்து
இருதயத்தைக் கிழிக்க
யாரிடமும் சொல்லாமல்
வேரை நீ அறுக்க
ஆழமாய் வளர்ந்தவள்
அடியில்லாமல் சாகிறேன்
காலத்தைக் கடந்தவள்
கணப்பொழுதில் காய்கிறேன்.
அருமை சகோ
புரியும் வரிகளால் அமைந்த அருமையான கவி..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteவாழ்த்து
ReplyDeleteஅருமை
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Delete