ஓர் அழகான எழுத்து முயற்சி.

உன்னைப் பார்க்கும் போது

25 comments
உன்னைப் பார்க்கும் போது
புதுவகைக் கோணம்
புறக்கண்ணில் தோன்றும் !
நீ வரும் நேரம்
சலனங்கள் தோன்றும் !
நீ காற்றினில்
கலந்த சர்க்கரையே !
என் நாவினில் வந்து
இனிப்பதும் ஏன்? (  .... நீ காற்றினில் )
என் எண்ணங்களில்
பொன் வண்ணங்களாய்
உந்தன் நினைவுகள்
புதைந்து இனிக்கிறதே!

நீ வெள்ளை நிலவு
கொள்ளை அழகு
துடிக்கும் நட்சத்திரம்
நீ பார்த்தால் சிரித்தால்
அருகில் அமர்ந்தால் எந்தன்
உயிரும் கரைந்தோடும்
ஒரு மாலைவெயில் போல
ஒரு மாற்றம் தந்தாயே !
எந்தன் நேசப்புதர்களிலே
முட்பூவாய் மலர்ந்தாயே !
என் எண்ணங்களில்
பொன் வண்ணங்களாய்
உந்தன் நினைவுகள்
புதைந்து இனிக்கிறதே!

25 comments :

  1. சேகர் தமிழ் இது இனிய காதல் கவிதை.
    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  2. அருமை...

    அழகிய காதல் உணர்வை படம்பிடித்து காட்டியது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  3. இது மட்டும்தானா.? இன்னும் என்னென்னவோ தோன்ற வேண்டுமே.!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா நிறைய தோன்றுகிறது.


      தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  4. ஒரு மாலைவெயில் போல
    ஒரு மாற்றம் தந்தாயே !
    ரசனை மிகும் வரிகள் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  5. குருவிக் கூடு போல அழகிய கவிதை!

    அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  6. அன்புள்ள சகோதரர் தன்சேகரன் ,இனிய நினைவு அலைகளைத் தொடர்பதிவாக்கும்படி சகோதரி ராஜி அன்புடன் கேட்டு கொண்டதால் நான் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்பதை எழுதியுள்ளேன். இதை தொடர் பதிவாக நேரம் இருந்தால் மட்டும் எழுத உங்களை அன்புடன் அழைக்கிறேன். http://avargal-unmaigal.blogspot.com/2012/03/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக எழுத முயற்சி செய்கிறேன் நண்பா!!எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
  7. மிக அழகிய காதல் கலி ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  8. ந்ல்ல கவிதை.....
    நீ காற்றினில்
    கலந்த சர்க்கரையே !
    என் நாவினில் வந்து
    இனிப்பதும் ஏன்?
    ---அருமை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  9. ந்ல்ல கவிதை.....
    நீ காற்றினில்
    கலந்த சர்க்கரையே !
    என் நாவினில் வந்து
    இனிப்பதும் ஏன்?
    ---அருமை...

    ReplyDelete
  10. நினைவுகள் நித்திலமாய்
    நெஞ்சில் இனிக்கிறது நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  11. காற்றில் கலந்த சர்க்கரை, மாலை நேரத்து வெய்யில், நேசப்புதரில் மலர்ந்த முட்பூ.... அட, அருமையான மனம் முகிழ்க்கும் வர்ணனைகள். காதல் மலர்ந்த இதயத்தில் மலர்ந்த கவிதையும் இனிக்கிறது. பாராட்டுகள். ஏதோ பாடல் மெட்டில் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எந்தப் பாடல் என்று தெரிந்தால் இன்னும் பாடியும் ரசிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அது நானாக கற்பனை செய்த மெட்டு என நினக்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  12. அருமையான எண்ண ஓட்டம்.இனிமையான நினைவுகளைச் சொல்லும் திகட்டாத கவிதை.

    ReplyDelete
  13. அருமையான வர்ணனைகள்.கொடுத்து வைத்தவர் உங்களுக்குக் காதல்துணையாக வரப்போகிறவர்.காதலை எப்படிச் சொன்னாலும் இனிக்கிறது சேகரன் !

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது சகோதரி.

      தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  14. காதல் சொட்டும் வரிகள்.! இருந்தும் திகட்டவில்லை..!:)

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..