ஓர் அழகான எழுத்து முயற்சி.

Keep a Journal

7 comments
 நாட்குறிப்பு எடுங்கள்

வாழ்க்கையென்னும் நத்தை
ஊர்ந்து கொண்டிருக்க அது
சுமந்துவரும் அனுபவமும்
ஊர்ந்து கொண்டிருக்க
புயல்வேக வாழ்க்கைப்பயணம்
அதன் பாடத்தை
கற்பது எப்போது
வாழ்க்கைப் பாடம் தான்
நம்மை ஞானியாக்கும் படகு
விழிப்பு வேண்டும்
விழிப்பென்பது சூரியதரிசனமல்ல அது
கடவுள் தரிசனம்
மெதுவாகத்தான் கிட்டும்

விழிக்க வேண்டுமானால்
நாட்குறிப்பு எடுப்பீர்
நாட்குறிப்பு நம்
அனுபவக் குறிப்பு
வாழ்க்கை  நமக்களிக்கும்
எதிர்காலம்பற்றிய துருப்புச்சீட்டு
குறிப்புகள் நிகழ்வுகள்
மீதான நம் விழிப்பு
குறிப்புகள் வெற்றி
Keep a Journal
Keep a Journal
தோல்வியின் வர்ணனைகள்
குறிப்புகள் நொடிகளின்
நெடி வாசனைகள்
குறிப்புகள் விழிப்புணர்ச்சியின்
ஆரம்பத்துளிகள்
விழிப்புணர்ச்சி ஞானியின்பார்வை
வெற்றி தோல்வியை
உற்றுப்பார்க்கும் தீட்சண்ய பார்வை
நாட்குறிப்பு  ஞானக்குறிப்பு
நம்மோடு நாம் பேசும்
அனுபவக் குறிப்பு

7 comments :

 1. நாட்குறிப்பு பற்றி அழகான கவிதை சகோ, தேவையான இடங்களில் . , குறிகளை இட்டால் இன்னும் அழகாய் இருக்கும் என்று நினைக்கிறேன் சகோ..இந்த சிறிய குறைகளை சொன்னதில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்....

  குறிப்புகள்
  நிகழ்வுகள்
  மீதான நம் விழிப்பு
  குறிப்புகள்
  வெற்றி தோல்வியின்
  வர்ணனைகள்

  இந்த இடம் என்னை மிகவும் கவர்ந்த இடமாய் இருந்தது சகோ...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன்.

   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 2. நல்ல கருத்தைக் கவிதை வடிவில் தந்திருக்கிறீர்கள். ஆனால் என்னால்தான் தொடர்ந்து டைரி எழுத முடிவதில்லை - பல ஆண்டுகளாக. இனியேனும் முயற்சிக்க வேண்டும். பார்க்கலாம். தொடர்ந்து பல நற்படைப்புகள் தர உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 3. என் இனிய நாட்குறிப்பே, உனக்கு என் காலை வணக்கம்...சரியா மாப்ளே!

  ReplyDelete
  Replies
  1. நீங்க என்ன சொன்னாலும் ஓகே தான் மாம்ஸ்!

   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   Delete
 4. நாட்குறிப்பெழுதும் அவசியத்தை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் சேகரன்.எழுதி சில விஷயங்களில் மாட்டிக்கொண்டு முழித்துமிருக்கிறேனே !

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..