ஓர் அழகான எழுத்து முயற்சி.

Every day be kind to a stranger

8 comments
 புதியவர்களிடம் அன்பாக இருங்கள்


ஒவ்வொரு காலையும்
அழகைக் கொப்பளித்துக் கொண்டு
புதிய செய்தியோடு பிறக்கிறது
ஒவ்வொரு மலரும் புதிய
அழகோடும் மணத்தோடும் காத்திருக்கிறது
புதிய மனிதர்கள் புதிய பாடத்தோடும்
புதிய கதையோடும் காத்திருக்கிறார்கள்
உங்களுக்குச் சொல்ல
புதிய காலை புதிய மனிதர்களென
புதியபூமி விடிகிறது ஒவ்வொரு நாளும்
உன்னத செயல்களோ
பாராட்டுக் கூட்டங்களோ
திருப்தியான வாழ்வை தராது
அனுதினமும் அன்போடும்
கருணையோடும் ரசனையோடும்
செய்யும் சிறுகாரியங்கள் தான்
உன்னதமான வாழ்வைத்தரும்

ஒவ்வொரு கணமும் ஒரு வாய்ப்பு  நம்
மனித நேயத்தைக் காட்ட
பூமியின் மீது நீங்கள்
ஆக்கிரமித்துள்ள இடத்திற்கு
அன்புதான் வாடகை அதை
எல்லோர் மீதும் பொழியுங்கள்
புதியவர்களை சந்திக்க பாராட்ட
ஆர்வமாக இருங்கள்
அவர்கள் உங்கள்
அனுபவத்தை சுமந்து வருகிறார்கள்
அவர்களை வரவேற்க
அன்பு செலுத்த தயாராகுங்கள்


வணக்கம் நண்பர்களே ! கவி பிரம்மாக்களே !

இன்று முதல் ஒரு புத்தகத்தை கவிதை வடிவில் மொழி பெயர்த்து வெளியிடலாம் என நினைக்கிறேன்.அது திரு ராபின் சர்மா எழுதிய "நீங்கள் இறக்கும் போது உங்களுக்காக அழுபவர் யாரோ " - " who will cry when you die " என்ற சுயமுன்னேற்ற நூல்தான்.தங்கள் ஆதரவும் பின்னூட்டமும் மிக அவசியமும்.

நன்றி

8 comments :

  1. ''..பூமியின் மீது நீங்கள்
    ஆக்கிரமித்துள்ள இடத்திற்கு
    அன்புதான் வாடகை ..''
    அருமையானன வரி இது, எனக்குப் பிடித்தது. அது சரி கவிதையாக எழுதுவது தனசேகரன் தானே! அப்படித்தான் நான் விளங்கினேன். புத்தகம் அவரது. நன்றி கூறப்பட்டுள்ளது, அதனால் குளம்புகிறேன். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. கவிதையாக்குவது நான் தான் இருந்தாலும் தூண்டியது ராபின் சர்மா என்பதால் அவருக்கு நன்றி கூறினேன்.

      தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

      Delete
  2. அன்பும் பண்பும் இணைந்தால்
    உன் மாண்புகள் பெருகிப்போகும்...

    நல்ல முயற்சி நண்பரே.
    தொடருங்கள்.
    அருமையாக கவியாக்கி இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

      Delete
  3. அன்புதான் வாடகை அதை
    எல்லோர் மீதும் பொழியுங்கள்..
    அருமையான வரிகள் . தொடருங்கள் காத்திருக்கிறோம் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

      Delete
  4. மிகவும் refreshingaaka உள்ளது தங்கள்
    மொழிபெயர்ப்பின் நடை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..