ஓர் அழகான எழுத்து முயற்சி.

discover your calling

9 comments


discover your calling
 உங்கள் அழைப்பை கண்டுபிடியுங்கள்

 உங்கள் அழைப்பை கண்டுபிடியுங்கள்

கடவுளின் மகனே
நீ பிறக்கும் போது - நீ
அழுதாய் உலகம் சிரித்தது
நீ இறக்கும் போது உனக்காக
அழும் கண்களை சம்பாதித்துவிட்டு
சிரித்துக்கொண்டே இறப்பாய்

நிலவில் நடக்கமுடிந்த உன்னால்
சாலையில் நடக்க முடியவில்லை
துல்லியமாக ஆயுதம் செலுத்தும் உன்னால்
பிள்ளைக்கு ஒதுக்கிய நேரத்தை
கடைபிடிக்க முடியவில்லை
வாழும் காலத்தில் - நீ
வருடி கொடுத்தவர் எத்தனை பேர்?

விதைகளுக்கு உன்
பங்களிப்பு என்ன?
வாழ்க்கையில் செயல்படாவிட்டால்
வாழ்க்கை உன்மீது செயல்படும்
நாட்கள் வாரமாகி
வாரம் மாதமாகி - இறுதியில்
கவலை நிறைந்த இதயத்துடன்
கண்ணீருடன் இறக்கப்போகிறாயா?

விழித்துக் கொள்வீர்
தனித்துவ சிந்தனையும்
மகத்துவ ஆற்றலும் படைத்தவரே
பூமியின் மீது உங்கள் வருகை
உன்னத காரியம் செய்ய
உங்கள் குறிக்கோள் என்ன?
உங்களுக்கான அழைப்பு  என்ன?
முழுவீச்சுடன் செயல்படுவீர்
யாருக்காக காத்திருக்கிறீர்கள்?
எந்த அழைப்புக்காக காத்திருக்கிறீர்கள்?
அண்ணல் சொன்னது போல்
மாற்றத்திற்காக காத்திருக்காதீர்
மாற்றத்தை நீங்களே செய்யுங்கள்
நீங்களே மாற்றமாக இருங்கள்!



வணக்கம் நண்பர்களே ! கவி பிரம்மாக்களே !

இன்று முதல் ஒரு புத்தகத்தை கவிதை வடிவில் மொழி பெயர்த்து வெளியிடலாம் என நினைக்கிறேன்.அது திரு ராபின் சர்மா எழுதிய "நீங்கள் இறக்கும் போது உங்களுக்காக அழுபவர் யாரோ " - " who will cry when you die " என்ற சுயமுன்னேற்ற நூல்தான்.தங்கள் ஆதரவும் பின்னூட்டமும் மிக அவசியமும்.

நன்றி

9 comments :

 1. நல்லதொரு முயற்சி. தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளுக்கு எப்போதுமே ஒரு வசிய சக்தி உண்டு. இப்போதும் அப்படியே. வாழ்த்துக்கள்.

  புத்தகத்தின் பெயர் ஒரு இடத்தில் தவறுதலாய் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. கவனிக்கவும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 2. நல்லதொரு உற்சாகமும் நம்பிக்கையும் தரும் கவிதை.உங்களைப்போல ஒரு இளைஞர் சொல்வது மிகவும் சந்தோஷம்.வாழ்த்துகள் தொடருங்கள் தம்பி !

  ReplyDelete
 3. அருமையான கவிதை
  தாங்கள் மொழிபெயர்ப்பு பதிவு குறித்த அறிவிப்பு
  மகிழ்வூட்டுகிறது
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 4. நீ இறக்கும் போது உனக்காக
  அழும் கண்களை சம்பாதித்துவிட்டு
  சிரித்துக்கொண்டே இறப்பாய்
  >>>
  எப்பேர்பட்ட வரமது? அவ்வரம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை தம்பி

  ReplyDelete
  Replies
  1. எல்லா வரங்களும் ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது.வரங்களை நாம் தான் பயன்படுத்தாமல் உள்ளோம்.

   தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 5. அருமையான முயற்சி !
  தொடர வாழ்த்துக்கள் !
  மொழிபெயர்ப்பின் தரம் நன்றாகவே உள்ளது.
  சாராம்சம் குறையாமல் தான் தந்து இருக்கிறீர்கள்.
  'நீங்களே மாற்றமாக இருங்கள் " ----
  எத்தனை சிறப்பான வாக்கியம்!
  அறிவுரை வழங்க ஆயிரம் பேர் இருப்பர்.
  ஆனால் அதன் வழி நிற்றல் என்பது குதிரைக் கொம்பே.
  அவர் போன்றவர்க்கெல்லாம்[ வாய்ச் சொல் வீரர்]
  இந்த வாக்கியம் ஓர் சம்மட்டி அடி.
  தொடருங்கள் நண்பரே !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

   Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..