ஓர் அழகான எழுத்து முயற்சி.

எல்லாம் இழந்தவன்

10 comments
எல்லாம் இழந்தவன்
எல்லாம் இழந்தவன்
வழியில்லா வாழ்க்கையில் வழி
தேடி தேடி வாழ்கிறேன்
பிறையில்லா வானில் ஒளி
தேடி தேடி பறக்கிறேன்
வழி சொல்வார் யாருமில்லை
ஒளி தருபார் யாருமில்லை
குருடன் கையில் விளக்காய்
பயனில்லா வாழ்க்கை வாழ்கிறேன்

அழகான வீடிது
விளையாட ஆளில்லை
சுரம் கொண்ட வீணை
சுதி சேர்க்க ஆளில்லை
இருக்கும் போது இருந்தவர்கள்
இல்லாத போது பறந்துவிட்டார்கள்
சொந்தமென்று வந்தவரெல்லாம்
நோகடித்து போனார்கள்
எல்லாம் போய்விட்டது
இல்லாமை மட்டும் இருக்கிறது
இப்போது நான்,
இந்த ஓட்டைக் குடிசை,
பழைய புல்லாங்குழல்
கனவுக்குப்பைகளோடு
தனிமையோடு இருக்கிறேன்.

 மேலும் படிக்க

தனிமை கடற்பயணம்
தோள்கொடுக்க வருவீரோ?
தோழி

10 comments :

  1. படமும் அதற்கு விளக்கமாக அமைந்த கவிதையும்
    மிக் மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  2. வெறுமையின் வேதனையைச் சொல்லிச் செல்லும் கவிதை அதற்கு அழகு சேர்க்கும் காட்சி வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  3. எல்லாம் இழந்துவிட்டால் நிலைமை இதுதான்.அழுத்தமான வரிகள் சேகரன் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  4. வலி மிகும் வரிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  5. எல்லாம் இழந்தால் எந்நிலை.....
    இதை என் அழகு தமிழில் கவியில் கூறியுள்ளீர்கள்
    வலிமிகு வரிகள் தோழா........

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் பரிசுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..