ஓர் அழகான எழுத்து முயற்சி.

கடவுளும் பிரியாணியும் (1)

1 comment





இன்றைய வளைதளங்களின் பெரிய போட்டியே கடவுள் தான்.கடவுள் இருக்கிறார் என்பது பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் பிரச்சனை கடவுளின் முகவரியில் தான் உள்ளது.இந்து மதம் தான் கடவுளின் உன்மையான முகவரி என்று ஒரு கூட்டமும்,கிறித்தவம் தான் என்று ஒரு கூட்டமும்,இன்னும் பல பல கூட்டங்களும் மோதிக் கொள்கின்றன.ஆன்மீகவாதிக்கும் நாத்திகவாதிக்கும் ஒரு சதவீத வித்தியாசம் தான்,நாத்திகவாதி கடவுளே இல்லை என்கிறான்,ஆன்மீகவாதியோ தன் கடவுளை தவிர மற்ற கடவுள் இல்லை என்கிறான்.இதை எப்படி தீர்ப்பது?ஒரு சின்ன வித்தியாசயம் தான்?அது நாம் விழிப்பாக இருக்கிறோமா? என்பது தான்.

புத்தர் தன் வாழ்க்கையில் எந்த ஒரு இடத்திலும் கடவுள் பற்றி கூறவில்லை?அவர் சொல்லவந்ததெல்லாம் விழிப்புணர்ச்சியுடன்(conscious) இருங்கள்.சாக்கரடீஸும் அதையே கேள்வி கேளுங்கள் என்றார்.அது என்னவென்றால் கண்ணை மூடிக்கொண்டு நம்மில் சிலர் கேள்வி கேட்பதுண்டு.அது அல்ல அர்த்தம்..இது ஒரு மறைமுகமான பதில் .நாம் விழிப்புணர்ச்சியுடன் இருந்தால் கேள்வி தானாக வரும்.அது தான் கடைசி கேள்வியாக இருக்கும்.விழிப்புணர்ச்சியுடன் இல்லாத கேள்வி வாதத்தின் தொடர்ச்சியாக இருக்கும்.கடவுள் இன்னும் வாதப் பொருளாக உள்ள காரணம் நாம் இன்னும் விழிப்பாக இல்லை.நாம் ஏன் விழிப்பாக இல்லை?ஏன் என்றால் நாம் மனம் என்னும் சக்தியின் பிடியில் உள்ளேம்.ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு உலகம்.கேள்வி என்பது மனம் என்னும் குளத்தில் எறியப்படும் கற்கள்.அதன் எதிரொலிதான் பதில்.குளம் அமைதியாக இருந்தால் அதில் இருந்து ஒரு அலை எழும் அது தான் இறுதி அலையும் கூட.
குளம் அமைதியாக இல்லா விட்டால் நாளொரு கேள்வி பொழுதொரு பதில் தான் கிடைக்கும்.
ஆளத்தெறிந்தவனுக்கு மனம் ஒரு கோவில்,இல்லையேல் அது ஒரு குரங்கு.முதலில் மூளையின் சக்தி என்னவென்றால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா அணுக்களின் எண்ணிக்கையை விட நம் மூளையில் உள்ள நரம்பணுகளின் எண்ணிக்கை அதிகம்.நம் மூளை பிரபஞ்சத்தை விட பெரியது.மொத்த மூளையின் ஒரு முகப்படைப்பே மனம்.மனதை அடக்குவது பிரபஞ்சத்தை கட்டுக்குள் கொண்டுவருவது.மனதை அடக்குவது என்பது கூட தவறான் வார்த்தை .அதை புரிந்து கொள்வது என்பது தான் சரியான விதம்.நாம் ஒரு அடி வைத்தால் நம் மனம் ஒரு முறை உலகை சுற்றி வந்து விடும்.முதல் விசயம் நாம் மனதை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.மனம் என்பதே நம்மை காக்கதான்.அது நம் நண்பன்.
மனம் எப்போதும் எடை போட்டுக் கொண்டே இருக்கும்.நாம் கெட்டவன் என்பதே நம்மக்கு தெரியாது.நம் மனம் ஒரு லஞ்சம் கொடுக்கப் பட்ட ஒரு நீதிபதி.நமக்கு சாதகமாக தான் தீர்ப்புவரும்.இவையெல்லாம் நாம் கவனிக்காத வரை தான்.நாம் கவனிக்க ஆரம்பித்திவிட்டால் அது தான் அற்புதம்.

வித்தியாசம் இது தான் காதல் செய்யக் கூடாது,காதலாகவே மாறிவிட வேண்டும்.அன்பு இல்லை அது அன்பாகவே மாறிவிடுவது.மனம் கழிந்த காதல் ஒரு கணம் எல்லேருக்கும் ஏற்ப்படுகிறது.பிரச்சனை வரும் போது காதல் மறந்து மனம் பொறுப்பேற்று குற்றம் காண ஆரம்பிக்கிறது.எந்த இடத்தில் எல்லாம் நாம் குற்றம் சொல்கிறோமோ அந்த இடத்தில் எல்லாம்
மனம் இருக்கிறது.இங்கு தான் விழிப்புணர்ச்சி தேவை.விழிப்புணர்ச்சியுடன் இருக்க ஆரம்பித்தால் உலகமே ஆச்சர்யமாக ஆரம்பிக்கும்.சிறு புல்லும் நம்மை ஞானி ஆக்கிவிடும்.
நாம் குளிக்கிறோம் ஆனால் அது ஒரு செயலாகவே நடக்கிறது.கை தண்ணீர் ஊற்றுகிறது மனமோ எங்கோ திரிகிறது.சாப்பிடுகிறோம் உடல் மட்டும் இங்கு ஆனால் மனமோ ஆகாயத்தில்.உடலும் மனமும் ஒருங்கே செயல்படும் நேரம் தான் விழிப்பு.அங்கு எந்த கேள்வியும் இல்லை பதிலும் இல்லை.நாமே ஒரு பிரபஞ்சம்.

விழிப்பு இல்லாத மனித மனதின் அருமையான ஒரு கண்டுபிடிப்பு இரட்டை.இரவு,பகல்,இன்பம்,துன்பம். விழித்துக் கொள்ள வேண்டும்.நான் இன்பம் பற்றி பேச ஆரம்பித்தால் உங்கள் மனம் துன்பம் பற்றி பேச ஆரம்பிக்கும்.இது ஒரு முடிவில்லா போராட்டம் தான்.இரட்டை இல்லாமல் வாழ்க்கை இல்லை.எது ஒன்றும் பெரியதும் இல்லை,சிறியதும் இல்லை.இவ்வளவு நேரம் இந்த பகுதியை படித்த நீங்கள் எவ்வளவு நேரம் உள் மன எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொண்டீர்கள் என்பது தான் விழிப்பு.இது வெறும் எழுத்திக்களின் கூட்டம் இதைப் பிடித்து தொங்காதீர்கள். விழிப்புடன் இருங்கள் அப்போது தான் வாழ்வின் ஓட்டம் புரியும்.

நிலையான ஒன்று என்று நான் சொன்னால்,இந்த பூமியே வேகமாக சுற்றிக் கொண்டு உள்ளது.அதில் நிலையான ஒன்று எங்கு உள்ளது.ஓடும் பொருளின் மேல் உள்ள எதுவும் நிலையாக இருக்கவே முடியாது.அதுவும் அசைந்து கொண்டே அல்லது ஆடிக்கொண்டே இருக்கும்.நிலையான என்ற வார்த்தையே பூமிக்கு ஒவ்வாதது என்று நீங்கள் சொன்னால் அது தான் என் கடைசி வார்த்தையாக் இருக்கும்.விழிப்பு இருக்கவேண்டும்.எதையும் பிடித்து தொங்காதீர்கள்.

(தொடரும்....)

1 comment :

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..