விஜய் மொல்லையா :- பணம் உள்ளவனுக்கே உலகம் சொந்தம்
"நீ யார் என்பது முக்கியமல்ல,பணம் உன்னிடம் உள்ளதா என்பது தான் முக்கியம்"
வங்கிகளுக்கு பட்டை நாமம் சாத்திவிட்டு ஒடியதால் இன்று முதல் அவரை விஜய் மொல்லையா என அன்போடு அழைக்கலாம்.
9000 கோடி ரூபாய் அடித்துவிட்டு இன்னும் ஜம்பம் பேசி திரியும் விஜய் மல்லையாவை பாராட்டுவதா ! இல்லை நாம் இந்த மாதிரி உலகத்தில் வாழ்கிறோம் என்பதை நினைத்து வருந்துவதா? உண்மையில் இதை நினைத்தால் மிக வருத்தமாக உள்ளது.ஒரு லட்ச ரூபாய் கடன் தொகையை கட்டமுடியாத ஒருவரை குண்டர்களை வைத்து அடித்து துவத்த ஒரு வங்கி,1200 கோடி கடன் வாங்கியவனிடம் கடன் வசூலிக்க முடியாமல் மன்டியிட்டு கதறிக்கொண்டு இருக்கிறது.இந்த அனுபவம் எனக்கும் ஒரு முறை ஏற்பட்டது.
அது நம் நாட்டின் பெயரை கொண்ட ஒரு தேசிய வங்கி.அவர்களிடம் வீடு கட்ட நான்கு லட்ச ரூபாய் கடன் கேட்ட போது அந்த வங்கி மேலாளர் பேசிய பேச்சை கேட்டால், நாம் என்னவோ கடவுளின் பினாமியிடம் கடன் கேட்டது போன்று இருந்தது.இத்தனைக்கும் நான் முறையாக வரி செலுத்தும் குடிமகன்.அந்த வங்கியில் இருந்து தான் 10 வருடமாக சம்பளம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அந்த மேலாளர் சொன்னார்,தம்பி நான்கு லட்சம் எல்லாம் சின்ன விசயம்,வேண்டும் என்றால் 20 லட்சம் வாங்கிக்கொள்ளுங்கள்.அது மட்டும் இல்லாமல் எங்கள் வங்கியில் கடன் வாங்குவது அவ்வளவு எளிதான விசயம் அல்ல.தயவு செய்து வேறு வங்கியில் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்.இவை எல்லாம் வழக்கம் போல் பல வார அலைச்சலுக்கு பின் கிடைத்த பதில்கள்.
இப்போது அதே வங்கிதான் நம் கதநாயகனுக்கு 1200 கோடி கொடுத்து முதலிடத்தில் உள்ளது.இதை நினைக்கும் போது ட்விட்டரில் நண்பர் ஒருவர் போட்ட காமடி தான் ஞாபகத்திற்கு வருகிறது.
லோன் வாங்க லோ லோவென அலையவிட்ட வங்கிகளை,இப்போது
கடன் வசூலிக்க லோ லோவென அலையவிடும் விஜய் மல்லையாவை வாழ்த்துகிறோம்.
உண்மையில் நம் நாட்டில் பணம் உள்ளவருக்கு தான் சட்டம் முதல் அரசியல் வரை சலாம் போடுகிறது.பலகோடி மதிப்புள்ள நிலங்களை அரசே மானிய விலையில் ஒரு தொழில் அதிபருக்கு வழங்குகிறது.ஒரு தொழில் அதிபரின் மகன் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை கார் ஏற்றிக்கொன்று சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறான்.பல கோடி ஊழல் செய்தவர்களை,
பல கோடி வரி ஏய்ப்பு செய்தவர்களை நம் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.இதைக்கூட அரசியல் கட்சிகள் பணக்காரன் ,ஏழை என அரசியல் பேசி அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.
இதையெல்லாம் பார்க்கும் போது கீழே உள்ள பாடல் தான் ஞாபகம் வருகிறது.
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே..ஏ..
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே..ஏ..
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - சில
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந்தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே..ஏ..
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந்தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே..ஏ..
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..