என் கேள்விக்கு என்ன பதில் சுப வீரபாண்டியன் அவர்களே?
இந்த கட்டுரை சுப வீரபாண்டியன் அவர்கள் http://tamil.oneindia.in/ இணையதளத்துக்கு எழுதிய கட்டுரைக்கு என்னுடய கருத்துரையாக எழுதப்பட்டது.அவர்கள் என் கருத்துரையை ஏற்க மறுத்துவிட்டதால்.அதை இங்கே பதிவாக இடுகிறேன்.அந்த கட்டுரைய இங்கே படித்துவிட்டு பதிவை படிக்கவும்.
முதலில் தங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இங்கே ஜன்ஸ்டீனின் பொது சார்புக்கொள்கையை பற்றி கூறி உள்ளீர்கள்.ஆனால் அவர் கூறிவிட்டதால் மட்டும் அது உண்மையாகிவிட முடியாது.எல்லா கொள்கைகளும் ஓர் எல்லைகளுக்கு உட்பட்டே இருக்கின்றன.ஏன் ஒளியை மிஞ்சக்கூடிய எந்த பொருளும் இல்லை என்ற ஜன்ஸ்டீனின் கொள்கையையே நியூட்டினோக்கள் தகர்த்துவிட்டன.
உண்மையில் பெரும்பாலான அறிவியல் கொள்கைகள் முதலும் இல்லாமல் தொடக்கமும் இல்லாமல் முழித்து தொங்கிக்கொண்டு இருக்கின்றன.கண்ணால் பார்ப்பதை மட்டும் நம்புவேன் என்றால் கண்ணால் பார்க்க முடியாத காற்றை யாருமே நம்ப முடியாது.
உண்மையில் அறிவியல் ஒன்றும் முற்று பெறவில்லை.அது இன்னும் அறைகுறையாக தான் உள்ளது.ஏன் அறிவியலே சொல்லுகிறது ஒரு பிரபஞ்சம் அல்ல கோடான கோடி பிரபஞ்சங்கள் உள்ளன என்று.மேலும் நம் முடைய அறிவியல் கொள்கைகள் மற்றொரு பிரபஞ்சத்தில் செல்லுபடியாகாது.
அப்படியென்றால் நீங்கள் மேற்கோள்காட்டும் அறிவியலே பிரபஞ்சம் என்ற எல்லைக்கு உட்பட்டது என்றால் உங்கள்வாதாமும் இப்பிரபஞ்சத்திற்கு உட்பட்டதுதான்.மார்க்ஸ்,ஜன்ஸ்டீன் அல்லது மேலை நாட்டு விஞ்ஞானிகள் சொல்வது இருக்கட்டும்.நம் முன்னோர்கள் சொன்ன கடவுள் வழி கருத்துகள் பாமரனால் தவறாக புரிந்துக்கொள்ளபட்டு இருந்தாலும் படித்தவர்களான நாம் அதை சரியாக புரிந்துகொண்டு ஆராய வேண்டியுள்ளது.ஆனால் நாம் ஆராயமலே தவறு என்று முடிவு கட்டிவிட்டோம்.
ஏன் ஜெனிவாவிலே நடராஜர் சிலை உள்ளது.அங்கே உள்ளவர்கள் எல்லாம் விஞ்ஞானிகள்தாம். அவர்களுக்கு கடவுள் மறுப்பு அறிவியல் தெரியாமலா சிலை வைத்தார்கள்?முதலில் அறிவியல் முழுமையாக முற்று பெற்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படட்டும்.பின் அதை வைத்து எழுதிய தத்துவவிலாசங்களை பேச அலச ஆரம்பிப்போம்.
மனிதன் பகுத்தறிந்து முழு விழிப்போடு வாழ மட்டுமே அறிவியல்.அதை வைத்துக்கொண்டு பாமரனின் அடிப்படை நம்பிக்கையை சிதைப்பது அநியாயம்.

Subscribe to:
Post Comments
(
Atom
)
***மனிதன் பகுத்தறிந்து முழு விழிப்போடு வாழ மட்டுமே அறிவியல்.அதை வைத்துக்கொண்டு பாமரனின் அடிப்படை நம்பிக்கையை சிதைப்பது அநியாயம். ***
ReplyDeleteஐயா!
என்ன சொல்றீங்க? அறிவியல் படிக்கும்போது மட்டும் மூளையை பகுத்தறியவிடனூமாக்கும். அப்புறம் மூளையில் அந்தப் பகுதியை முடமாக்கி பாமரனாகி பகவானுக்கு சிங்கி அடிக்கணுமாக்கும்?
முழுசா பாமரனாவே மூளை மழுங்கிய நிலையிலேயே பகவானை வணங்க வேண்டியதுதானே? எதுக்குஅப்பப்போ பகுத்தறியணும்? னு பண்டாரங்கள் சொன்னால் நல்லா இருக்கும்
வருண் நானும் ஒரு பாமரன் தான்.என்னுடைய வாதம் ரொம்ப எளிமையானது.அறிவியல் இன்னும் அரைகுறையாக தான் இருக்கிறது.இன்னும் முடிவு பெறவில்லை.அதைவைத்து கட்டிய நாத்திகவாதமும் என்னை பொறுத்தவரை அறைகுறைதான்.என்னை பொறுத்தவரை ஆன்மீகமும் ஒரு அறிவியல் தான்.அதையும் முழுவதுமாக படித்தபிறகுதான் நான் சிங்க அடிப்பதா இல்லை பண்டாரமா போறதானு முடிவு பண்ணுவேன்.
Deleteவிஞ்ஞானத்தை உடைக்க பலர் முயற்சி செய்வது காலம் காலமாக நிகழ்வதுதான். அதுசரி. ஐன்ஸ்டீனின் ஒளியின் வேகம் பற்றிய சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நீங்கள் கூறும் நியூட்ரினோக்கள் ஒளியைவிட வேகமாக பயணிப்பது ஒரு தவறான கணிப்பில் எழுந்த விடையாகும். இதை அந்த விஞ்ஞானிகளே ஒத்துக்கொண்டு தற்போது ஐன்ஸ்டீனின் கருத்துக்கு முதல் மரியாதையை கொடுத்து வருகிறார்கள்.
ReplyDeleteஆன்மிகம் பற்றி பேசுவது ஒருபுறம். அதற்காக அறிவியலை அவியல் செய்ய நினைப்பது ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்காது.மனிதன் கடவுள் மேல் வாய்த்த நம்பிக்கையைவிட மனிதன் மீதே கொண்டிருந்த நம்பிக்கையே இதுவரை வென்று வந்துள்ளது என்பது வரலாறு. மாறாக கடவுளின் பெயரில் போர்கள் நடந்ததும் ஏராளமானவர்கள் படு கொலை செய்யப்பட்டதும்தான் நடந்துள்ளது.
காரிகன் உண்மையில் அறிவியலில் எது உண்மை என்ற கண்ணாமூச்சி ஆட்டம் முடியவில்லை.ஒளியின் வேகம் பற்றிய சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். பின் எப்படி சார்பியல் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்ளமுடியும்.அவற்றில் அடி நாதமே ஒளியின் வேகம்தான்.மேலும் ஜன்ஸ்டீனை தவறு சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் ஜீனியஸ் அல்ல.அதே சமயத்தில் சந்தேகமான விசயங்களை நான் ஆராயாமல் ஏற்றுக்கொள்வதில்லை.உண்மையில் நான் சுத்தமான அறிவியல்வாதி. அதனால் அறிவியலில் இருக்கும் ஓட்டைகளை பற்றி பேசுகிறேன்.சரியாக அச்சில்வார்க்கப்படாத ஓட்டை சட்டியைவைத்துக்கொண்டு என்னால் ஊரில் உள்ளவர்களின் பாலை அளக்கமுடியாது.நான் மனிதனை மேம்படுத்தி அன்பை பொழியும் ஆன்மிகத்தை பற்றி பேசுகிறேன் .அறிவியல் அல்லது கடவுள் என்கின்ற ஆன்மிகம், எதுவானாலும் சரி .மனிதன் சக மனிதனை மதிப்பதை நான் பெரிதும் வணங்குகிறேன்.
Delete