About Me

Wednesday, February 29, 2012

என்னுடைய விருதுகள் ?

வீசும் காற்றிற்கு விருதுகள் ஏது ?
பொழியும் மழைக்கு பரிசுகள் ஏது ?
பசி தீர்க்கும் கைகளுக்கேது
தங்கக்காப்பு ?
சூரியனைப்போல்
பகலில் சுட்டெரிப்பான்
இரவில் எதிரொலிப்பான்
யாரையும் எதிர்னோக்காமல்
தன்னாலீன்ற உதவி செய்து
தடம் தெரியாமல் தலைசாய்ப்பான்
விருதிற்காக வரிசை நின்ற ஆறெது?
பரிசிற்காக வீசிய காற்றெது?
நான் கேட்டா குயில் கூவியது?
நீ சொல்லிய மாலை புலர்ந்தது?
காலை மலர்ந்து
அழகை கொடுத்து
மாலை தலைகவிழ்ந்த
மலரின் மாண்பு
பரிசிற்கா ? இல்லை விருதிற்கா ?
பிறந்தான் வளர்ந்தான்
தன்னாலீன்ற உதவி செய்து
தடம் பதிக்காமல் மறைந்தான்
அவன் தான் மனிதன் !
அவனே மக்கட் தலைவன் !
அவனே மண்ணில் பிறந்த மாணிக்கம் !
அவனை மரியாதை செய்வதே
நன் மக்கட் கழகு !


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

எனக்கு தாங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்புக்கும் மரியாதைக்கும் என் முதற்கண் வணக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.அது போல் பலரும் எனக்கு விருதுகள் வழங்கி அதை பலருக்கும் பகிரச்சொல்லி அழைப்பு விடுத்தனர்.முக்கியமாக தோழி திரு.ஸ்ரவாணி,திரு.ஹேமா ,திரு.Esther sabi  இவர்களுக்கும் என் முதற்கண் வணக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.ஆனால் நான் வாங்கிய விருதை இதுவரை பகிரவில்லை.காரணம் நான் ஒரு நல்ல வாய்ப்பை தேடிக்கொண்டிருத்தேன்.
என்னைப் பொருத்தவரை நான் விருது கொடுக்கும் அளவுக்கு பெரிய அளவில் ஒன்றும் சாதித்து விடவில்லை.இருந்தாலும் ஒரு நல்ல ரசிகனாய் இருந்து நான் விரும்பிய எழுதிற்கு மதிப்பளிக்கும் உரிமை எனக்குண்டு என நம்புவதால் நான் தங்கப்பேனா விருதை சிலருக்கு வழங்க விரும்புகிறேன்.
இதை வாங்குபவர்கள் அனைவரும் மேலே என் கவிதையில் நான் குறிப்பிட்ட இயற்கையை ஒத்தவர்கள் .ஏனென்றால் இவர்கள் ஆறு போல் தங்கள் வழியில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.தங்களால் முடிந்ததை தங்கள் எழுத்தின் மூலமாக படைத்து கொண்டே இருக்கிறார்கள்.அவர்களை பாராட்டி ,விருது கொடுப்பதன் மூலம் நாம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

முதலாவதாக மதிப்பிற்குரிய ஐயா
அவர்களுக்கும்

இரண்டாவதாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கும்

மூன்றாவதாக மதிப்பிற்குரிய   ஐயா அவர்களுக்கும்

நான்காவதாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கும்

ஐந்தாவதாக மதிப்பிற்குரிய  அவர்களுக்கும்
 
ஆறாவதாக  மதிப்பிற்குரிய தோழி  ஸ்ரவாணி அவர்களுக்கும்

ஏழாவதாக மதிப்பிற்குரிய தோழி  சசிகலா அவர்களுக்கும்

எட்டாவதாக மதிப்பிற்குரிய தோழி    அவர்களுக்கும்

ஒன்பதாவதாக  மதிப்பிற்குரிய தோழி  கீதாமஞ்சரி  அவர்களுக்கும்

பத்தாவதாக  மதிப்பிற்குரிய   அவர்களுக்கும்


  தங்கப்பேனா விருது வழங்கி என் கவிதை சமர்ப்பணம் செய்கிறேன்.இவர்கள் அனைவரும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

Tuesday, February 28, 2012

வயல் காவலன்

வயல் காவலன்
தூரக்கிழக்கு
முடிவில்லா வானம்
இருள் போர்த்திய போர்வை - அதில்
துளையென நட்சத்திரங்கள்
உடைந்த நிலவு  - அதில்
தெரித்த ஒளிகள்
கனத்த மேகங்கள்
பரந்த வயல்வெளி
சலசலக்கும் நீரோடை
வீசும் காற்று
அசைந்தாடும் கதிர்கள்
பயமுறுத்தும் பொம்மைகள்
நெலியும் பாம்புகள் 
அலறும் ஆந்தைகள்
இரைச்சலிடும் தவளைகள்
வளைந்த தென்னை
கயிற்றுக்கட்டில்
அரிக்கன் விளக்கு
சுருங்கிய நெற்றி
தூக்கமிழந்த கண்கள்
மெலிந்த தேகம்
கிழிந்த கந்தை - அதில்
ஒற்றைக் கவண்வில்
சுதியிழந்த பாடல்
மொத்த போராட்டமும்
ஒரெயொரு நெல்மணிக்காக !  

Monday, February 27, 2012

வறுமையின் மதிய உணவு

வறுமையின் மதிய உணவு
வறுமையின் மதிய உணவு
உயிரை உருக்கும் நண்பகல்
நீண்ட தகிக்கும் தார்சாலை - அதன்
இடது ஓரத்தில்
மரத்தின் நிழலில்
மெலிந்த தேகம்
வெள்ளைச் சட்டை
கருத்தமுகம் - அதில்
அறுபதை தாண்டிய வறுமையின்
வெற்றிக் கொண்டாட்டம்
சட்டியில் பழையசோறு
ஒரு கையில் மிளகாய்
மறுகையில் உணவென
பசியாறிக் கொண்டிருந்தது
அந்த வயோதிக வயிறு
உட்கார விரிப்பில்லை
குடிக்க நீரில்லை
சாலையின் இரைச்சல்
புழுதியின் நடுவே
சற்றும் சலனமில்லாமல்
தன் வாழ்க்கையை
கடந்து கொண்டிருந்தது
அந்த மெளனம்.

Saturday, February 25, 2012

சர்க்கஸ் கல்விமுறை

சர்க்கஸ் கல்விமுறை
சர்க்கஸ் கல்விமுறை
பள்ளியென்னும் தொழிற்சாலையில்
பிள்ளைகளெல்லாம் உருவாகுதடா !
ரோட்டுல திரியும் கழுதபோல
பொதிமூட தூக்குதடா !
செக்குல பூட்டுன மாடுபோல
சுத்தி சுத்தி போகுதடா !
கடிவாளம் போட்ட குதிரபோல
சுய சிந்தனையில்லாம ஓடுதடா !
பழம் கொடுத்த கிளியபோல
சொன்னதயெல்லாம் சொல்லுதடா !

கால காலக் கல்விமுற - இது
வெள்ளையன் கொடுத்த கல்விமுற
ஆங்கிலப் பாடல் சொல்லிதரும்- இது
ஆங்கிலவழிக் கல்விமுற
குரு சீடன் மறஞ்சு போய் - இது
ஆசிரிய மாணவன் கல்விமுற
சொந்தபுத்திய குப்பைல போட்டு
மதிப்பெண் வாங்கும் கல்விமுற
பணங்காட்டு நரிகளிடம் - பிள்ளைகள்
பாடம் கற்கும் கல்விமுற
பிள்ளைகள் கனவை எரியூட்டி அதில்
குளிர்காயும் கல்விமுற
இந்தியாவின் தூண்களெல்லாம்
சர்க்கஸில் வரும் சிங்கமென
ஜோரா ஜோரா தாவுதுபார்
சுத்தி சுத்தி வருகுது பார்



Friday, February 24, 2012

எல்லாம் இழந்தவன்

எல்லாம் இழந்தவன்
எல்லாம் இழந்தவன்
வழியில்லா வாழ்க்கையில் வழி
தேடி தேடி வாழ்கிறேன்
பிறையில்லா வானில் ஒளி
தேடி தேடி பறக்கிறேன்
வழி சொல்வார் யாருமில்லை
ஒளி தருபார் யாருமில்லை
குருடன் கையில் விளக்காய்
பயனில்லா வாழ்க்கை வாழ்கிறேன்

அழகான வீடிது
விளையாட ஆளில்லை
சுரம் கொண்ட வீணை
சுதி சேர்க்க ஆளில்லை
இருக்கும் போது இருந்தவர்கள்
இல்லாத போது பறந்துவிட்டார்கள்
சொந்தமென்று வந்தவரெல்லாம்
நோகடித்து போனார்கள்
எல்லாம் போய்விட்டது
இல்லாமை மட்டும் இருக்கிறது
இப்போது நான்,
இந்த ஓட்டைக் குடிசை,
பழைய புல்லாங்குழல்
கனவுக்குப்பைகளோடு
தனிமையோடு இருக்கிறேன்.

 மேலும் படிக்க

தனிமை கடற்பயணம்
தோள்கொடுக்க வருவீரோ?
தோழி

Thursday, February 23, 2012

மின்சாரமில்லா மாலைவேளை

மின்சாரமில்லா மாலைவேளை
மின்சாரமில்லா மாலைவேளை
அழகானதொரு மாலைவேளை
அழகின்மேல் அழகூட்ட
அரசாங்கம் மின்சாரத்தை அணைக்க
என்னவளும் நானும்
பேருந்து நிறுத்தத்தில்
அலவளாவிக் கொண்டிருந்தோம்
நிலா ஒளியில்
பறவைகள் கூட்டிற்கு நகர
புழுக்க வாடையில்
மக்கள் வீட்டிலிருந்து வெளியேற
புலம்பலிலும் புழுக்கத்திலும்
மாலை நகர்ந்து கொண்டிருந்தது
இருட்டிலும் அவள்
கன்னங்கள் பளபளக்க
நானோ குவித்த உதடுகளுடன் - அவள்
கன்னத்தை நோக்கி நகர
சட்டென மின்சாரம் வர
பட்டென அவள் பார்க்க
மின்னலென ஞாபகம் வந்தது
அரசாங்கத்தின் மின்வெட்டு
குறைப்பு தீர்மானம்
உணர்வு போராட்டங்களுக்கிடையே
வெட்கத்தோடு நகர்ந்தது
அந்த மாலைவேளை

மேலும் படிக்க

தனிமை கடற்பயணம்
கதைக்கு காலுண்டா?கத்திரிக்காய்க்கு வாலுண்டா? ( Review )
கவிதையாய் வருவாய்

Wednesday, February 22, 2012

எங்க சொந்த ஊரைப்பற்றி - தொடர்பதிவு

                                                   தமிழ்நாட்டில் மிக வறட்சியான ஊர்.குடிக்க தண்ணீர் கிடையாது.வருடத்தின் 365 நாட்களும் சுட்டெரிக்கும் வெயில்.ஆனால் வருட உற்பத்தி நிகர லாபம் 1000 கோடி ரூபாய்.இந்தியாவின் 90 % பட்டாசுகள் இங்கு தான் உற்பத்தியாகிறது.இந்தியாவின் 60 % அச்சுத்தொழில் 80 % தீப்பெட்டி என எல்லாம் இங்கு தான் தயாராகின்றன.கடுமையான உழைப்பைப் பார்த்த பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் எங்கள் ஊரை குட்டி ஜப்பான் என அழைத்தார்.

                                                   பேருந்தின் மூலம் எங்கள் ஊருக்கு  நுழையும் போது "வெடிகளின் நகரம்" உங்களை வரவேற்கிறது என்ற அறிவிப்பு பலகையை காணலாம்.நானும் உங்களை என் சொந்த ஊரான சிவகாசியை பற்றி அறிய அன்போடு வரவேற்கிறேன்.இத்தொடர் பதிவை எழுத அழைத்த நண்பர் துரை டேனியல் அவர்களை மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                  சுமார் 600 வருடங்களுக்கு முன் ஹரிகேசரி பராகிராம பாண்டியன் மதுரையின் தென் பகுதியை ஆண்டு வந்தார்.அவர் காசியைப் போன்று தென்காசியிலும் சிவன் கோவில் எழுப்ப ஆசைப்பட்டு காசியிலிருந்து சிவலிங்கத்தை பசுவின் மேல் ஏற்றி வந்தார்.போகும் வழியில் சிவகாசியில் தங்கி ஓய்வெடுத்து கிளம்பும் வேலையில் பசு அந்த இடத்தை விட்டு நகர மறுக்க அங்கேயே சிவலிங்கத்திற்கு கோவில் எழுப்பினான்.காசியிலிருந்து வந்த சிவலிங்கம் என்பதன் சுருக்கமே சிவகாசி.
சிவகாசி சிவன் கோவில்
சிவகாசி சிவன் கோவில்

                                                    1960களில் இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக இனி அரசாங்கத்தை நம்ப முடியாது என நினைத்து சிவகாசியில் உள்ள மக்களும் பணக்கார முதலாளிகளும் ஒன்று சேர்ந்து வறட்சிக்கு ஏற்ற தொழில் செய்ய ஆரம்பித்தனர்.ஒற்றுமையாலும் கடுமையான உழைப்பாலும் பாலையையும் சோலை ஆக்கினர்.இன்று சிவகாசி இந்தியாவின் பட்டாசுகளின் தலைநகரம்.உலகில் ஜெர்மனியின் குடன்பர்க் நகரத்திற்கடுத்து அதிக அச்சுத்தொழில் நடைபெறும் இடம்.சீனாவிற்கடுத்து அதிக பட்டாசுகள் தயாரகும் இடம் என உலக நாடுகளோடு போட்டி போட்டு உழைக்கும் மக்கள் வாழும் இடம்.இந்தியாவில் 100% வேலைவாய்ப்பு உள்ள இடம்.பொருளாதார தேக்கத்தினால் பாதிக்கப்படாத நகரம்.இந்தியாவில் 100% கல்வியறிவை நோக்கி நகரும் ஒரே நகரம்.

                                                   சிவகாசியின் மொத்த மக்கள் தொகை 1.5 லட்சம்.நேரடியாக 100000 பேரும் மறைமுகமாக 150000 பேரும் வேலை செய்கின்றனர்.முக்கியமான திருவிழாக்கள் பங்குனி பொங்கல்,சித்திரை பொங்கல்.பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.சித்திரை திருவிழாவின் போது 5ம்,6ம் நாள் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
                                                   சிவகாசியில் பத்திரகாளியம்மன்,மாரியம்மன் என்ற இரு காவல் தெய்வங்களுக்கு இரு கோவில்கள் உள்ளன.இதில் பத்திரகாளியம்மன் கோவில்கோபுரம் தமிழ்நாட்டில் உயர்ந்த கோபுரங்களில் ஒன்று.மாரியம்மன் கோவில் உட்புறம் தங்கத்தகடுகளால் பதிக்கப்பட்டது.இவை இரண்டும் தனியாரால் பராமரிக்கப்படுகின்றன.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில்
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில்

                                                   நீங்கள் வெடிக்கும் பட்டாசு.எழுதும் நோட்டு,படிக்கும் புத்தகம்,பார்க்கும் வண்ண போஸ்டர்கள்,தீப்பெட்டி என எல்லாம் சிவகாசியில் தயாராகுபவை.பொதுவாக "made in china" ,"made in india" என்று நாடுகளைத்தான் அழைப்போம்.ஆனால் சிவகாசியோ "made in sivakasi" என்ற தனிவழியில் உலகளாவிய வர்த்தகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.கடினமாக உழைத்தால் பாலையையும் சோலையாக்கலாம்.இது தான் சிவகாசியில் நான் கற்ற பாடம்.


மேலும் படிக்க

தன்னம்பிக்கை
என்ட்ரோபி(entropy)
miracle Antimatter!!

                  



Tuesday, February 21, 2012

தொந்தரவு செய்யாதே - don't disturb me

தொந்தரவு செய்யாதே - don't disturb me
தொந்தரவு செய்யாதே
உனக்கும் கடவுளுக்கும்
வேறு வேலையில்லை - அவனோ
என்னை படைத்துக் கொண்டே இருக்கிறான்
நீயோ என்னை காதலிக்காமல்
சாகடித்துக் கொண்டே இருக்கிறாய் - ஒன்று
நீ என்னைக் காதல் செய் - இல்லை
கடவுளை சும்மா இருக்கச் சொல் !


மேலும் படிக்க

தன்னம்பிக்கை
என்ட்ரோபி(entropy)
miracle Antimatter!!

அன்னையின் பிரிவு

அன்னையின் பிரிவு
அன்னையின் பிரிவு
அன்னையே
என்னைப் பெற்றவளே
சக்தியின் மறு உருவமே
கருப்பொருளின் உருப்பொருளே
என்னை உயிர்ப்பித்தவளே

கழுதையைப் பெற்றவளும் சாகிறாள் - உன்போல்
சிங்கத்தைப் பெற்றவளும் சாகிறாள் - பாகுபாடில்லா
இந்த சாவுக்கும் நோக்காடொன்று வாராதா ?
உடலை உருக்கி உதிரம் தெளித்து
நீ செய்த ஓவியம் உன்முன்னே
கண்ணீரால் கரையும் சத்தம் கேட்கிறதா?
எழுந்து வாராயோ ? மகனேவென அழைப்பாயோ ?

உடலை வைத்து அழுவதா? - இல்லை
தொலைத்த உயிரைத்தேடி அழுவதா?
ஒன்றும் புரியவில்லை ?
உன்னைத்தேடி அலைகிறேன்
குழந்தையென அழுகிறேன்.
போனவளே வந்துவிடு
போன இடம் சொல்லிவிடு


Monday, February 20, 2012

love is enough - அன்பு மட்டும் போதும்

அன்பு மட்டும் போதும்
 அன்பு மட்டும் போதும்
அழுவது நீயாகட்டும்
துடைப்பது நானாகட்டும்
உறவு தேவையில்லை
உரிமை தேவையில்லை
கண்ணீரைத் துடைப்பதற்கு
அன்பு மட்டும் போதும் !
அன்பு இருந்தால்
கல்லையும் கரைக்கலாம்
பசும் புல்லிலும்
கடவுளைக் காணலாம் !

Friday, February 17, 2012

காதல் பயம் - Love Fear

காதல் பயம்
காதல் பயம்
காதல்வரா வானத்தினூடே
சத்தமில்லாமல் பறந்தேன்
காதல்வரா தெருவினூடே
தடமில்லாமல் நடந்தேன்
கன்னியர் பாதையில்
கண்மூடி நடந்தேன்
அலைபாயும் நேரத்தில்
கீதை படித்தேன்
சுவைமிகும் நேரத்தில்
சோகம் படித்தேன்
மகிழ்ச்சி விற்று
காவி வாங்கினேன்
காதலும் என்னை கவ்விடுமோ ?
காதல் நஞ்சைக் கக்கிடுமோ ?
இந்நஞ்சுக்கும் முறிவு உண்டோ ?
சொல்லிவிட்டு காதல் செய்வீர் ?
காதல் தோழர்களே !

அன்பால் கொல்லாதே

அன்பால் கொல்லாதே
மென்மையே மென்மையென
பொன்னிற மேனியென
அழகியதொரு பட்டாம்பூச்சி
தோட்டத்தில் பறக்கக்கண்டேன்
மலர்களின் மேலமர்வதுமாய்
மகரந்தம் குடிப்பதுமாய்
இடுப்பில் கயரில்லாமல்
சுதந்திரமாய் பறக்கக்கண்டேன்

உணர்வுகள் தடுமாற
அன்புவெள்ளம் பொங்கிவர
இதயத்தில் இடமொதிக்கி
அன்பென்னும் கூட்டிலடைத்தேன்
அன்பென நினைத்து
நான் செய்த காரியங்கள்
சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்க
நிறையிழந்த இலையென
அன்பில் கருகி
பிணமாய் காட்சியளித்தது
அன்புகூட கொல்லுமென
கடைசியாய் வந்த ஞானம்
கண்ணீர்த்துளிகளுடன் சொன்னது
அன்பால் கொல்லாதே!

Thursday, February 16, 2012

கருச்சிதைவு

கருச்சிதைவு
கருச்சிதைவு
வரிகள் தெரியாமல்
வலிகளுடன் மட்டும் - வயிற்றில்
வளர்ந்த என் கவிதை
கையில் கிடைத்தது
உருகுலைந்த நிலையில்
இதற்காகவா இத்தனை வலிகள் !

Wednesday, February 15, 2012

புத்தம் buddha

புத்தம்
புத்தம்
வாழ்க்கையென்னும் பிச்சைப்
பாத்திரத்தில் விழுந்ததை சாப்பிடு
கிடைத்ததற்கு நன்றி சொல்
பசியாறிய வயிறு
உடலை மறைக்க தூண்டும்
உடலை மறைத்த மனம்
துணையை தேட சொல்லும்
எல்லாம் கிடைத்த மனம்
திமிர் பிடித்து திரியும்
மீண்டும் பசிவந்தால்
எல்லாம் மறைந்து போகும்
ஒரு ஜான் வயிறு - அதான்
இயக்கத்தின் மூலம்

மலை உச்சியில் பார்த்தால்
பள்ளத்தாக்கில் நடப்பது புரியும் !
விழிப்பின் உச்சியில் பார்த்தால்
நடப்பது புரியும்  ! நடக்கப் போவதும் புரியும் !
வந்த வழி சிறியது !
போகும் வழி பெரியது !
வந்த வழியில் திரும்பிப்
போக முடியாது !
போகும் வழி எங்கு போய்
முடிவதோ தெரியாது ?
வந்துவிட்டாய் , போகப் போகிறாய் !
சலனம் வேண்டாம்
ஓடல் வேண்டாம்
மனக் குளத்தில் கல்லெறிந்து
கொண்டே இருக்காதே !
ஓடிக் கடக்க முடியாது - உலகம்
அமைதியாக உட்கார்
உன்னைத்தேடி வரும் !
நீ தான் அது !
அதான் நீ  !
கண்ணாமூச்சி புரிந்து விட்டால்
தேடல் நின்றுவிடும் !
ஆன்ம சுதந்திரம் பிறந்துவிடும்
அமைதியோடு அமைதியாகி
அன்பு வெள்ளம் பெருகி
உன்னை அழித்து
புத்தம் பிறக்கும் !


Tuesday, February 14, 2012

காதலை வெறுக்காதீர்

காதலை வெறுக்காதீர்
காதலை வெறுக்காதீர்
காதல்
கவிஞர்களின் அகரம்
கிறுக்கல்களின் காவியம்
அழகியலின் ஆரம்பம்
சிணுங்களின் சிகரம்
அறிவியலின் உயர்பரிமாணம்
கலையின் ஆரம்பம்
மொழியின் அடையாள அட்டை
கடவுளின் சுரங்கப்பாதை
மனிதனைக் கவிஞனாக்கி
கவிஞனைக் கடவுளாக்கும்
ரசாயண மாற்றம்
காதல் இல்லா மனிதன்
காமத்தின் ஓவியம்
காதல் இல்லா எழுத்து
அசிங்கத்தின் நிர்வாணம்
காதல் உங்களை ரசிக்க வைக்கும்
காதல் உங்களை கிறுக்க வைக்கும்
இறுதில் உங்களை கவிஞனாக்கும்
ஆதலால் காதலை வெறுக்காதீர்!!


 





யார் தந்தோ காதலோ ?

யார் தந்த காதல்
யார் தந்த காதல்
யார் தந்தோ காதலோ
யாரிடம் சொன்னதோ
யாருக்கும் தெரியாமல்
இதயத்தை கிழித்ததோ ?

சுகம் தந்தோ காதலே
சுமையாகிப் போனதோ
சுமைதாங்க முடியாமல்
தடுமாறி விழுந்ததோ ?

ஒளிதந்த காதலே
இருளாகிப் போனதோ
இமைமூடும் நேரத்தில்
காற்றினிலே பறந்ததோ ?

சொல்லாத காதல்கள்
சோகங்கள் தந்ததோ
சுவைகூடும் இரவினிலே
சுதிமாறிக் கத்தியதோ ?

அவன் தந்த காதலோ
அடி நெஞ்சில் ஒட்டியதோ
அவனில்லா வேலையிலும்
அசைபோடச் சொல்கிறதோ ?


மேலும் படிக்க


Monday, February 13, 2012

மின்னனு காதலர்தினம்

 Happy Digital Lovers Day

இலைகளை மேயும் ஆடுகளாய்
வலைதளங்களை மேயும் இளைஞர்கள்
கிளைகளில் பூத்த மலர்கள்
வலைதளங்களில் பூக்கின்றன
புல்தரையில் காத்திருந்தவர்கள்
கணிணி திரையில் காத்திருக்கிறார்கள்
காதலை சொல்ல பயந்தவர்கள்
கணிணி அரட்டையில் கதைக்கிறார்கள்
புறாக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு
குறுஞ்செய்திகள் தூது செல்கின்றன
கணப்பொழுதின் பிரிவை தாங்கமுடியாதவர்கள்
அலைபேசியின் மடியில் தவழ்கிறார்கள்
ஏக்கத்தில் புரண்டவர்கள்
தொடுதிரையில் தொட்டுக்கொள்கின்றனர்
சந்திக்காத இதயங்கள்
பேஸ்புக்கில் சந்தித்துவிட்டு
ட்வீட்டரில் நலம்விசாரித்து
அலைபேசியில் காதலை தொடர்கின்றன
கல்லெடுத்த காலத்திலும்
காதல் வந்தது
கணிணி காலத்திலும்
காதல் வருகிறது
காதல் மனிதனின் ஆன்மா
மனிதன் வாழும் வரை வாழும்!
வாழ்க காதல் !
வளர்க மின்னனு காதலர்தினம்!

மேலும் படிக்க


தனிமை கடற்பயணம்

 lonely sea travel
அவன் கொடுத்த திசைமானியை
தொலைத்து விட்டேன்
காற்றடிக்கும் திசைகளிளெல்லாம் என்
பாய்மரம் நகர்ந்து கொண்டிறிக்கிறது
lonely sea travel
lonely sea travel
அலைகளின் அசைவுகளுக்கிடையே
மெல்ல மெல்ல என் வாழ்க்கை
ஊர்ந்து கொண்டிருக்கிறது
அகல் விளக்கின் துணைகூட இல்லாமல்
இரவில் தவிக்கிறேன்
பகலில் காய்கிறேன்
சுற்றி நீரிருந்தும்
நீர் வற்றி தவிக்கிறேன்
இந்த நீல வானமும்
நீலக்கடலும் என்னை
நிலைகுலையச் செய்கின்றன
அழகெல்லாம் பயமுறுத்தும்
பேய்களென தெரிகின்றன
என் பாடலே எனக்கு
மரண ஓலமாய் கேட்கிறது

என்னுளிருந்த கலைஞன்
முழுவதுமாக கருகிவிட்டான்
கலைதாகத்தோடு பயணம் மேற்கொண்டேன்
கரை என்னை ஏமாற்றிவிட்டது
உன்னை அழகென காட்டிவிட்டது
நீயோ சத்தமில்லாமல்
பலரைக் கொன்று
உன்காலடியில் புதைத்து
கரையில் உள்ளவர்களிடம்
அமைதியென புன்னகைக்கிறாய்
என்னை விட்டுவிடு
என் கவிதைப்பயணத்தை
இறுதிப்பயணம் ஆக்கிவிடாதே

Saturday, February 11, 2012

Develop an Honesty philosophy

 வாக்குறுதியை காப்பாற்றுங்கள்
Develop an Honesty philosophy
Develop an Honesty philosophy

நித்தம்  நித்தம் வாழ்வு
சத்தியம் இல்லா பெருவாழ்வு
வருவேன் என்பார் வரமாட்டார்
தருவேன் என்பார் தரமாட்டார்
உடைந்த வாக்குறுதிகள் கொடுத்து
உறவுகளை உடைப்பார்
கேட்பீர் தோழர்களே
வாக்குறுதி சொல்லின் உறுதி
வாக்குறுதி நம்மீதான மதிப்பு
மதிப்புகளை உடைத்து
உறவுகளை அறுக்காதீர்
சொன்னதை செய்து
செய்வதை சொல்லி
வாக்குறுதிகளை காப்பாற்றும்
உயர் தத்துவத்தை கைகொள்வீர்
பேச்சைக் குறைத்து
செயலைக்கூட்டும் தத்துவத்தை
பழகிக் கொள்ளுங்கள்

மேலும் படிக்க





Friday, February 10, 2012

தோள்கொடுக்க வருவீரோ?

தோள்கொடுக்க வருவீரோ
காற்றின் அணுக்களில்
சோகத்தை கலந்தது யார் ?
பூக்களின் தோட்டத்தில்
கற்களை வீசியது யார் ?
சொற்களின் கூட்டத்தில்
சோகத்தை வீசியதார் ?

விழியிரண்டும் அழுகிறதே
இமையிரண்டும் துடிக்கிறதே
கனவெல்லாம் கரைகிறதே
வாய்ப்பெல்லாம் பறக்கிறதே
தோல்விகள் எனைச்சூழ
இதயமும் உடைகிறதே !
சிறகொடிந்த பட்டாம்பூச்சி
பறக்கத்தான் ஆசைப்பட்டேன் !
சொல்லித்தர யாருமில்லை
தோள்கொடுக்க ஆளுமில்லை
மூச்சடக்கி முயற்சித்தேன்
முட்டுச்சந்தில் மோதிவிட்டேன்
சிறகுகளும் முளைக்காதோ ?
கனவுகளும் பலிக்காதோ ?
சிறகொடிந்த வாழ்க்கைக்கு
தோள்கொடுக்க வருவீரோ?
தோழனாக ஆவிரோ?

மேலும் படிக்க

பாட்டாளி
ஜென் zen
தன்னம்பிக்கை

Keep a Journal

 நாட்குறிப்பு எடுங்கள்

வாழ்க்கையென்னும் நத்தை
ஊர்ந்து கொண்டிருக்க அது
சுமந்துவரும் அனுபவமும்
ஊர்ந்து கொண்டிருக்க
புயல்வேக வாழ்க்கைப்பயணம்
அதன் பாடத்தை
கற்பது எப்போது
வாழ்க்கைப் பாடம் தான்
நம்மை ஞானியாக்கும் படகு
விழிப்பு வேண்டும்
விழிப்பென்பது சூரியதரிசனமல்ல அது
கடவுள் தரிசனம்
மெதுவாகத்தான் கிட்டும்

விழிக்க வேண்டுமானால்
நாட்குறிப்பு எடுப்பீர்
நாட்குறிப்பு நம்
அனுபவக் குறிப்பு
வாழ்க்கை  நமக்களிக்கும்
எதிர்காலம்பற்றிய துருப்புச்சீட்டு
குறிப்புகள் நிகழ்வுகள்
மீதான நம் விழிப்பு
குறிப்புகள் வெற்றி
Keep a Journal
Keep a Journal
தோல்வியின் வர்ணனைகள்
குறிப்புகள் நொடிகளின்
நெடி வாசனைகள்
குறிப்புகள் விழிப்புணர்ச்சியின்
ஆரம்பத்துளிகள்
விழிப்புணர்ச்சி ஞானியின்பார்வை
வெற்றி தோல்வியை
உற்றுப்பார்க்கும் தீட்சண்ய பார்வை
நாட்குறிப்பு  ஞானக்குறிப்பு
நம்மோடு நாம் பேசும்
அனுபவக் குறிப்பு

Thursday, February 9, 2012

கதைக்கு காலுண்டா?கத்திரிக்காய்க்கு வாலுண்டா? ( Review )

விமர்சனம்
விமர்சனம்
இருப்பதை ஏற்க முடியாத
திருப்தியில்லா மனதின் சலனம்
படைப்புகள் கடவுளுக்கு சொந்தம்
படைப்பவன் வெறும் பொம்மை
பொம்மையை விமர்சனம் செய்யலாம்
படைப்பை விமர்சனம் செய்ய
கடவுளுக்கே கிடையாது உரிமை
விமர்சனத்தின் அடி நாதம்
முழுமையை நோக்கியென்றால்
கடவுளின் படைப்பே
சில நேரம் ஊனமாகி
அழுது நிற்பதேன்
விமர்சனம் சுட்டிக்காட்டும் போது
அகங்காரமாய் முட்டி நிற்கிறது
தட்டிக் கொடுக்கும் போது
தோழனாய் தோள்கொடுத்து நிற்கிறது

அது ஓர் அழகான குளிர்இரவு
பாட்டியின்  கதகதப்பான அனைப்பில்
நடக்கும் கதைமழையில்
வரும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கும்
ஆயிரம் ஆயிரம் விமர்சனத்திற்கும்
பாட்டி சொன்ன எளிய பதில்
கதைக்கு காலுண்டா?கத்திரிக்காய்க்கு வாலுண்டா?
நல்லதை எடுத்துக்கொள்! கெட்டதை விட்டுவிடு!
மகிழ்விக்க வந்ததை விமர்சனம் செய்யாதே!

Practice Tough Love

Practice Tough Love
Practice Tough Love
சுயஒழுக்கத்தை பயிற்சி செய்யுங்கள்
 
சுயமில்லாதான் வாழ்க்கை
முகமில்லாத மனிதனடா
சுய ஒழுக்கமில்லாதான் வாழ்க்கை
பாறை குடிகொண்ட கோவிலடா
ஒழுக்கம்தானே நம்மை
செதுக்கும் உளிகள்
நமக்கு  நாமே கடுமையாக
நடப்பதுதானே ஒழுக்கம் - கேளுங்கள்
அது ஒழுக்கம் இல்லை
விதமான கடுமையான அன்பு
சுய ஒழுக்கமில்லாதான் வாழ்க்கை
காற்றின் போக்கில் அசைந்தாடும்
ஒழுக்கமுள்ளவன் வாழ்க்கை
காற்றை எதிர்க்கும் ஆலமரமாகும்

சுயஒழுக்கம் ஒன்று
வெளியிலிருந்து வருவதல்ல
அது உள்ளிருந்து
முளைக்க வேண்டிய விதை
ஒழுக்கமென்பது வெறும் வார்த்தை
அது முளைக்கும் தனிப்பட்ட
மனிதனின் மனதைப் பொறுத்தது
இதயம் சொல்லும் முடியுமென்று
ஆனால் ஒன்றும் நடக்காது
காரணம் சுயஒழுக்கமின்மை
சுயஒழுக்கமென்பது நமக்கு
நாமே கொடுக்கும் பயிற்சி
பயிற்சியில்லா குதிரை வெற்றிபெறாது
நெருப்பில் தீக்குளித்தால் தான்
தங்கத்திற்கு மதிப்பு
சுயஒழுக்கத்தில் குளித்தால் தான்
நமக்கு மதிப்பு
வாழ்க்கையின் போக்கில்
நகர வேண்டியதில்லை
சுயஒழுக்கமிருந்தால் போதும்
எல்லாம் நம்மை நோக்கி நகரும்

Wednesday, February 8, 2012

வெறும் பேனா நீ



தோல்வியென்னும் சூறாவளியாலும்
வெற்றியென்னும் வெடிகுண்டாலும்
உடையாத கோட்டை கட்ட
வெறும் பேனா நீ
கருங்கல் கேட்டேன் அவனிடம்

அவனோ தோல்வியை
மட்டுமே தந்தான்
தோல்வியை வைத்தே
கோட்டை கட்டினேன் - அற்புதம்
இப்போது எதையும் தாங்கும்
அற்புதக் கோட்டை என்னிடம்

அது என் மனக்கோட்டை
அதை தந்தவனுக்கு
நன்றி சொன்னேன்
அவனோ நான் கொடுத்தவற்றை
மற்றவருக்கு கொடுத்துவிடு என்றான்.
கொடுப்பதும் நான்
கொடுக்கும் பொருளும் நான்

எல்லாம்  நான்
வெறும் பேனா நீ
என சொல்லி மறைந்தான்

Maintain your perspective

தனிப்பட்ட பார்வையை தக்க வைத்துக் கொள்ளுங்கள்

Maintain your perspective
Maintain your perspective
கவலை கவ்விய முகத்தோடு
பூங்காவில் மனம் பறந்துகொண்டிருக்க
ஆங்கோர் சிறகொடிந்த பட்டாம்பூச்சி
மலர்களில் அமர்வதுமாயும்
தேன் குடிப்பதுமாயும்
மேலும் கீழும் பறப்பதுமாயும்
வாழ்க்கையை கரைத்துக் கொண்டிருக்க
சட்டென கேள்வியொன்று கேட்டேன்
ஏ பூச்சியே உனக்கு
கவலையில்லையா வலிக்கவில்லையா?
என் காதோரம் அமர்ந்து
கதையொன்று சொல்வேன்
பொறுமையாக கேளாய்யென்றது

ஆங்கோர் மருத்துவமனையில்
அடுத்தடுத்த அறையில்
இருவர் அனுமதிக்கப்பட்டனர்
அதிலொருவனுக்கு ஜன்னில்லா அறை
தனிமையும் வேதனையும் நச்சரிக்க
புலம்ப ஆரம்பித்தான் அதைகேட்ட
ஜன்னலுள்ள அறைக்காரன்
ஜன்னலின் வெளியே உள்ளவற்றை
அழகுபட கூற ஆரம்பித்தான்
கேட்டவனுக்கோ இயற்கையை
ரசிக்கமுடியாத வருத்தம்
ஜன்னல்காரனை வெறுத்தான்
இரவில் வந்த நீண்ட இருமல்
ஜன்னல்காரனின் உயிரைக்குடித்தது
பாதுகாப்பு மணி இருந்தும்
ஜன்னலில்லா அறைக்காரன் அழுத்தவில்லை
இப்போது இவன் தனது அறையை
மாற்றிக்கொண்டு ஜன்னலின் வழியே
எட்டிப்பார்த்தான் - அதிர்ச்சி
 ஜன்னல் வெறும் சுவரைக் காட்டியது
கஷ்டமான சூழ்நிலையிலும்
ஜன்னல்காரன் இவனை
தனது கற்பனையாலும்
சுத்தமான அன்பினாலும்
சந்தோஷப் படுத்தினான்
கதையை சொல்லிவிட்டு
கண்களில் கண்ணீரை கொடுத்துவிட்டு
பறந்தது பட்டாம்பூச்சி

கேட்பீர் தோழர்களே
எல்லா இருட்டிலும்
ஒளிவரும் பாதையுண்டு
இக்கஷ்டம் பெரியதா
இத்தோல்வி பெரியதாவென
உங்களை நீங்களே கேளுங்கள்
ஒளிக்கான பாதை தெரியும்
கஷ்டத்திலும் ஒளிமயமான
பாதையை தேடும் பார்வையை
தக்கவைத்துக் கொள்ளுங்கள்
அது உங்களை
வெளிச்சத்திற்கு கூட்டிச்செல்லும்
பூமியின் மீதான உங்களின்
வருகைக்காலம் குறைவு
வருத்தப்பட்டு இருளில்
வாழ்க்கையை கரைக்காதீர்கள்
ஒளியை தேடும் திறனை
கண்டு கொள்ளுங்கள்
புத்திசாலிதனத்துடன் வாழ்வை
துளிகூட மிச்சமில்லாமல்
பருகி விடுங்கள்

Tuesday, February 7, 2012

Every day be kind to a stranger

 புதியவர்களிடம் அன்பாக இருங்கள்


ஒவ்வொரு காலையும்
அழகைக் கொப்பளித்துக் கொண்டு
புதிய செய்தியோடு பிறக்கிறது
ஒவ்வொரு மலரும் புதிய
அழகோடும் மணத்தோடும் காத்திருக்கிறது
புதிய மனிதர்கள் புதிய பாடத்தோடும்
புதிய கதையோடும் காத்திருக்கிறார்கள்
உங்களுக்குச் சொல்ல
புதிய காலை புதிய மனிதர்களென
புதியபூமி விடிகிறது ஒவ்வொரு நாளும்
உன்னத செயல்களோ
பாராட்டுக் கூட்டங்களோ
திருப்தியான வாழ்வை தராது
அனுதினமும் அன்போடும்
கருணையோடும் ரசனையோடும்
செய்யும் சிறுகாரியங்கள் தான்
உன்னதமான வாழ்வைத்தரும்

ஒவ்வொரு கணமும் ஒரு வாய்ப்பு  நம்
மனித நேயத்தைக் காட்ட
பூமியின் மீது நீங்கள்
ஆக்கிரமித்துள்ள இடத்திற்கு
அன்புதான் வாடகை அதை
எல்லோர் மீதும் பொழியுங்கள்
புதியவர்களை சந்திக்க பாராட்ட
ஆர்வமாக இருங்கள்
அவர்கள் உங்கள்
அனுபவத்தை சுமந்து வருகிறார்கள்
அவர்களை வரவேற்க
அன்பு செலுத்த தயாராகுங்கள்


வணக்கம் நண்பர்களே ! கவி பிரம்மாக்களே !

இன்று முதல் ஒரு புத்தகத்தை கவிதை வடிவில் மொழி பெயர்த்து வெளியிடலாம் என நினைக்கிறேன்.அது திரு ராபின் சர்மா எழுதிய "நீங்கள் இறக்கும் போது உங்களுக்காக அழுபவர் யாரோ " - " who will cry when you die " என்ற சுயமுன்னேற்ற நூல்தான்.தங்கள் ஆதரவும் பின்னூட்டமும் மிக அவசியமும்.

நன்றி

அறை

காதல் நேரத்தில்
கடவுளுக்கு காத்திருந்தேன்
கவிதை வேண்டுமென்று
கடவுளை முந்திக்கொண்டு
கன்னத்திலொன்று கொடுத்தாள்
காதலி கோபத்துடன்

Monday, February 6, 2012

discover your calling



discover your calling
 உங்கள் அழைப்பை கண்டுபிடியுங்கள்

 உங்கள் அழைப்பை கண்டுபிடியுங்கள்

கடவுளின் மகனே
நீ பிறக்கும் போது - நீ
அழுதாய் உலகம் சிரித்தது
நீ இறக்கும் போது உனக்காக
அழும் கண்களை சம்பாதித்துவிட்டு
சிரித்துக்கொண்டே இறப்பாய்

நிலவில் நடக்கமுடிந்த உன்னால்
சாலையில் நடக்க முடியவில்லை
துல்லியமாக ஆயுதம் செலுத்தும் உன்னால்
பிள்ளைக்கு ஒதுக்கிய நேரத்தை
கடைபிடிக்க முடியவில்லை
வாழும் காலத்தில் - நீ
வருடி கொடுத்தவர் எத்தனை பேர்?

விதைகளுக்கு உன்
பங்களிப்பு என்ன?
வாழ்க்கையில் செயல்படாவிட்டால்
வாழ்க்கை உன்மீது செயல்படும்
நாட்கள் வாரமாகி
வாரம் மாதமாகி - இறுதியில்
கவலை நிறைந்த இதயத்துடன்
கண்ணீருடன் இறக்கப்போகிறாயா?

விழித்துக் கொள்வீர்
தனித்துவ சிந்தனையும்
மகத்துவ ஆற்றலும் படைத்தவரே
பூமியின் மீது உங்கள் வருகை
உன்னத காரியம் செய்ய
உங்கள் குறிக்கோள் என்ன?
உங்களுக்கான அழைப்பு  என்ன?
முழுவீச்சுடன் செயல்படுவீர்
யாருக்காக காத்திருக்கிறீர்கள்?
எந்த அழைப்புக்காக காத்திருக்கிறீர்கள்?
அண்ணல் சொன்னது போல்
மாற்றத்திற்காக காத்திருக்காதீர்
மாற்றத்தை நீங்களே செய்யுங்கள்
நீங்களே மாற்றமாக இருங்கள்!



வணக்கம் நண்பர்களே ! கவி பிரம்மாக்களே !

இன்று முதல் ஒரு புத்தகத்தை கவிதை வடிவில் மொழி பெயர்த்து வெளியிடலாம் என நினைக்கிறேன்.அது திரு ராபின் சர்மா எழுதிய "நீங்கள் இறக்கும் போது உங்களுக்காக அழுபவர் யாரோ " - " who will cry when you die " என்ற சுயமுன்னேற்ற நூல்தான்.தங்கள் ஆதரவும் பின்னூட்டமும் மிக அவசியமும்.

நன்றி

who will cry when you die



வணக்கம் நண்பர்களே ! கவி பிரம்மாக்களே !

இன்று முதல் ஒரு புத்தகத்தை கவிதை வடிவில் மொழி பெயர்த்து வெளியிடலாம் என நினைக்கிறேன்.அது திரு ராபின் சர்மா எழுதிய "நீங்கள் இறக்கும் போது உங்களுக்காக அழுபவர் யாரோ " - " who will cry when you die " என்ற சுயமுன்னேற்ற நூல்தான்.தங்கள் ஆதரவும் பின்னூட்டமும் மிக அவசியமும்.


1 . discover your calling 

2 . Every day be kind to a stranger

3 . Maintain Your Perspective 

4 . Practice Tough Love 

5 . Keep a Journal

6 . Develop an Honesty philosophy

 

 

 

 



நன்றி




Saturday, February 4, 2012

காதலே ஏன் இந்த மாயம் ?

காதலே ஏன் இந்த மாயம்
காதலே ஏன் இந்த மாயம்
காதலே காதலே
ஏன் இந்த மாயம்
இதயத்தின் சுவர்களை
கரைத்திட்ட மாயம்
கண்களும் அலையாய் பொங்குதே
இதயத்தின் சுவர்களும் வெடிக்குதே

இரவின் நடுவினில்
நீ விடும் தூது
எந்தன் கனவினை
கரைக்கும் அமிலத்தின்சாறு
இமைகளின் வெளியே
நீ செய்யும் மாயம்
கனவினில் என்னை
கொல்கின்ற காயம்

உன்னை நினைத்து
பாடிய கீதம்
மூங்கில் காட்டில்
கிழிந்திட்ட கீதம்
உள்ளே உள்ளே
நீ செய்த காயம்
என்னைக் கொல்லும்
காலனின் வாகனம்.

Friday, February 3, 2012

மனமார்ந்த வாழ்த்துகள்

என் அருமைத் தோழர்களே மற்றும் கவிகளே

என் மனமென்னும்
தோட்டத்தில் பூத்தமலர்களை
நானிங்கு விற்றேன்
உங்கள் மனக்கதவு திறந்திருந்ததால்
உங்கள் வீட்டை வாசம் செய்தது
உபயமாக தங்கள்
மனமென்னும் மலை உச்சியில்
பூத்த அன்பென்னும் குறிஞ்சிப்பூக்களை
எமக்களித்தீர் ஆனால்
அதையும் தாண்டி
நீர் அளித்த பரிசு
என்னை மகிழச்செய்கிறது
என்னை மேலும்
செயலாற்ற உந்துகிறது
எல்லாம் அவன்
வெறும் பேனா நான்
இந்த பேனாவை
பெருமைப்படுத்தியமைக்கு நன்றி!!

இக்கவிதையின் வாயிலாக திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னை அவர் தம் மனதிற்கினிய அந்த 5 இளம் பதிவாளர்கள் பட்டியல் சேர்த்து  லீப்ச்டர் (இளம் வலைப்பதிவாளர்களுக்கு
 வழங்கப் படும் ஒரு ஜெர்மானிய விருது)
விருது வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் .

sekar award


ஸ்ரவாணி  அவர்களின் மனதிற்கினிய அந்த 5 இளம் பதிவாளர்கள் பட்டியல் :

1 . தன் தரமான , கனமான பதிவுகளால் மனதை சுண்டி இழுக்கும் கீதா அவர்கள் !
http://geethamanjari.blogspot.in/ 

2 . நகைச்சுவையும் , பல்சுவையும் கலந்து கலக்கல் பதிவுகள் தரும் கணேஷ் அவர்கள்!
http://minnalvarigal.blogspot.in/

3 . வனப்பை ரசித்து அதை மேலும் மெருகூட்ட அருமையான அழகுக் குறிப்புகள் தரும் சந்திரகௌரி   அவர்கள் !
http://kowsy-vanappu.blogspot.in/

4 . ஏறக்குறைய ஒரு பத்திரிகைப் போல் இந்த நாளில் இன்னின்ன பதிவுகள் என்று அழகாகத் திட்டமிட்டு
அருமையாகப் பதிவுகள் தரும் மதுமதி அவர்கள் !
http://writermadhumathi.blogspot.in/

5 . மனதை இலகுவாக்கி அழகியக்  காதல் கவிதைகள் தந்து நெஞ்சள்ளிப் போகும் தனசேகரன் அவர்கள் !
http://sekar-thamil.blogspot.in/

   

மேலும் என்னோடு விருது பெற்ற கீதா,கணேஷ்,சந்திரகௌரி  ,மதுமதி  ஆகியவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.




மேலும் தெரிந்து கொள்ள


லீப்ச்டர் விருது




புரிந்து கொள்ளடா

புரிந்து கொள்ளடா
புரிந்து கொள்ளடா
உள்ளங்கையில் உலகமடா
உனக்காகத்தான் உள்ளதடா
நெல்லி போன்ற உருவமடா
நெழியும் சூழ்ச்சிகள் உள்ளதடா

தன்னைத்தானே சுற்றுமடா
உன்னை இழுத்துக் கொள்ளுமடா
கொள்கையில்லா பல பேரை
மூடிப்புதைக்கும் கல்லறையடா

மனிதப் பூச்சிகள் வாழுமடா - அது
தன்னைதா  னடித்துக் கொல்லுமடா
மாயப்பேய்கள் வாழுமடா - உன்
குறிக்கோள்ளெல்லாம் அழிக்குமடா

போட்டியென்று சொல்லுமடா - உன்
வாழ்வை முழுதும் கரைக்குமடா
சட்டமென்று சொல்லுமடா அதுதான்
நியாயமென்று சொல்லுமடா

பகைவனென்று சொல்லுமடா
நெஞ்சில் குத்தி கொல்லுமடா
அன்புயென்று சொல்லிவிட்டு
ஆர்ப்பாட்டம் பன்னுமடா

காதலென்று சொல்லுமடா
கழட்டிவிட்டு ஓடுமடா
காவியென்று சொல்லுமடா
காமப்பசி காட்டுமடா

வாழென்று சொல்லுமடா
வாழவிடாமல் கொல்லுமடா
போகும்போது அழுகுமடா
நல்லவனென்று கூறுமடா

Thursday, February 2, 2012

அன்பே வருவாயா ?

அன்பே வருவாயா ?
அன்பே வருவாயா ?
உன்னைப் பார்த்த நொடியில்
என்னைத் தொலைத்தேனடி
உன் விரல்களின் இடையில்
என் விரல் கோர்த்தேனடி
நீயில்லா நானுமே
நீரில்லா மேகமே
மழை தூவும் வானமே
காதல் மழை பொழிவாயா?

இரவில்லா வானத்தில்
குயில்பாடும் கானத்தில்
காலைப்பனி நனைந்தேனடி
காதல்சுகம் கண்டேனடி

இரவெல்லாம் நீண்டிருக்க
கனவெல்லாம் காத்திருக்க
கனியே நீ வருவாயா?
காதல்சுகம் தருவாயா?

வழியெல்லாம் விழிவைத்து
விழிக்குள்ளே உன்னை வைத்து
உனக்காக காத்திருப்பேன்
பூவாக பூத்திருப்பேன்

சொல்லாத சொல்லெடுத்து
குத்தாத முள்ளெடுத்து
மணமாலை நான் செய்து
மணமாற சூட்டுவேன்.

Wednesday, February 1, 2012

கவிதையாய் வருவாய்

கவிதையாய் வருவாய் sekar tamil
கவிதையாய் வருவாய்
உணர்வில்லாத சொல்
உரைத்தென்ன பயன்
உயிரில்லாத வரிகள்
வரித்தென்ன பயன்
உண்மையில்லாத கூட்டில்
பிறப்பதெல்லாம் வீண்
ஆன்மாயில்லாத கவிதை
எழுத்துக்களின் சாக்கடை
உன்னை நினைத்து
வரிப்பதெல்லாம் சந்தனம்
உன்னை நினைத்து
என்னில் முளைத்து
கவிதையாய் வருவாய்
உலகெல்லாம் செழிக்கட்டும்!