புரிந்து கொள்ளடா |
உனக்காகத்தான் உள்ளதடா
நெல்லி போன்ற உருவமடா
நெழியும் சூழ்ச்சிகள் உள்ளதடா
தன்னைத்தானே சுற்றுமடா
உன்னை இழுத்துக் கொள்ளுமடா
கொள்கையில்லா பல பேரை
மூடிப்புதைக்கும் கல்லறையடா
மனிதப் பூச்சிகள் வாழுமடா - அது
தன்னைதா னடித்துக் கொல்லுமடா
மாயப்பேய்கள் வாழுமடா - உன்
குறிக்கோள்ளெல்லாம் அழிக்குமடா
போட்டியென்று சொல்லுமடா - உன்
வாழ்வை முழுதும் கரைக்குமடா
சட்டமென்று சொல்லுமடா அதுதான்
நியாயமென்று சொல்லுமடா
பகைவனென்று சொல்லுமடா
நெஞ்சில் குத்தி கொல்லுமடா
அன்புயென்று சொல்லிவிட்டு
ஆர்ப்பாட்டம் பன்னுமடா
காதலென்று சொல்லுமடா
கழட்டிவிட்டு ஓடுமடா
காவியென்று சொல்லுமடா
காமப்பசி காட்டுமடா
வாழென்று சொல்லுமடா
வாழவிடாமல் கொல்லுமடா
போகும்போது அழுகுமடா
நல்லவனென்று கூறுமடா
நிதர்சனமான வாழ்க்கை உண்மை.
ReplyDeleteநன்று.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteஉலகத்திற்குக் காது கொடுத்தால் எந்த விஷயத்திலும் தடுமாற்றம்தான்.எது சரியென்று மனதிற்குப் படுகிறதோ அதன்வழி நடப்பது நல்லது.நல்லதொரு கவிதை சேகரன் !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Delete