புதியவர்களிடம் அன்பாக இருங்கள்
ஒவ்வொரு காலையும்
அழகைக் கொப்பளித்துக் கொண்டு
புதிய செய்தியோடு பிறக்கிறது
ஒவ்வொரு மலரும் புதிய
அழகோடும் மணத்தோடும் காத்திருக்கிறது
புதிய மனிதர்கள் புதிய பாடத்தோடும்
புதிய கதையோடும் காத்திருக்கிறார்கள்
உங்களுக்குச் சொல்ல
புதிய காலை புதிய மனிதர்களென
புதியபூமி விடிகிறது ஒவ்வொரு நாளும்
உன்னத செயல்களோ
பாராட்டுக் கூட்டங்களோ
திருப்தியான வாழ்வை தராது
அனுதினமும் அன்போடும்
கருணையோடும் ரசனையோடும்
செய்யும் சிறுகாரியங்கள் தான்
உன்னதமான வாழ்வைத்தரும்
ஒவ்வொரு கணமும் ஒரு வாய்ப்பு நம்
மனித நேயத்தைக் காட்ட
பூமியின் மீது நீங்கள்
ஆக்கிரமித்துள்ள இடத்திற்கு
அன்புதான் வாடகை அதை
எல்லோர் மீதும் பொழியுங்கள்
புதியவர்களை சந்திக்க பாராட்ட
ஆர்வமாக இருங்கள்
அவர்கள் உங்கள்
அனுபவத்தை சுமந்து வருகிறார்கள்
அவர்களை வரவேற்க
அன்பு செலுத்த தயாராகுங்கள்
ஒவ்வொரு காலையும்
அழகைக் கொப்பளித்துக் கொண்டு
புதிய செய்தியோடு பிறக்கிறது
ஒவ்வொரு மலரும் புதிய
அழகோடும் மணத்தோடும் காத்திருக்கிறது
புதிய மனிதர்கள் புதிய பாடத்தோடும்
புதிய கதையோடும் காத்திருக்கிறார்கள்
உங்களுக்குச் சொல்ல
புதிய காலை புதிய மனிதர்களென
புதியபூமி விடிகிறது ஒவ்வொரு நாளும்
உன்னத செயல்களோ
பாராட்டுக் கூட்டங்களோ
திருப்தியான வாழ்வை தராது
அனுதினமும் அன்போடும்
கருணையோடும் ரசனையோடும்
செய்யும் சிறுகாரியங்கள் தான்
உன்னதமான வாழ்வைத்தரும்
ஒவ்வொரு கணமும் ஒரு வாய்ப்பு நம்
மனித நேயத்தைக் காட்ட
பூமியின் மீது நீங்கள்
ஆக்கிரமித்துள்ள இடத்திற்கு
அன்புதான் வாடகை அதை
எல்லோர் மீதும் பொழியுங்கள்
புதியவர்களை சந்திக்க பாராட்ட
ஆர்வமாக இருங்கள்
அவர்கள் உங்கள்
அனுபவத்தை சுமந்து வருகிறார்கள்
அவர்களை வரவேற்க
அன்பு செலுத்த தயாராகுங்கள்
வணக்கம் நண்பர்களே ! கவி பிரம்மாக்களே !
இன்று
முதல் ஒரு புத்தகத்தை கவிதை வடிவில் மொழி பெயர்த்து வெளியிடலாம் என
நினைக்கிறேன்.அது திரு ராபின் சர்மா எழுதிய "நீங்கள் இறக்கும் போது
உங்களுக்காக அழுபவர் யாரோ " - " who will cry when you die " என்ற
சுயமுன்னேற்ற நூல்தான்.தங்கள் ஆதரவும் பின்னூட்டமும் மிக அவசியமும்.
நன்றி
''..பூமியின் மீது நீங்கள்
ReplyDeleteஆக்கிரமித்துள்ள இடத்திற்கு
அன்புதான் வாடகை ..''
அருமையானன வரி இது, எனக்குப் பிடித்தது. அது சரி கவிதையாக எழுதுவது தனசேகரன் தானே! அப்படித்தான் நான் விளங்கினேன். புத்தகம் அவரது. நன்றி கூறப்பட்டுள்ளது, அதனால் குளம்புகிறேன். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
கவிதையாக்குவது நான் தான் இருந்தாலும் தூண்டியது ராபின் சர்மா என்பதால் அவருக்கு நன்றி கூறினேன்.
Deleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி
அன்பும் பண்பும் இணைந்தால்
ReplyDeleteஉன் மாண்புகள் பெருகிப்போகும்...
நல்ல முயற்சி நண்பரே.
தொடருங்கள்.
அருமையாக கவியாக்கி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி
Deleteஅன்புதான் வாடகை அதை
ReplyDeleteஎல்லோர் மீதும் பொழியுங்கள்..
அருமையான வரிகள் . தொடருங்கள் காத்திருக்கிறோம் .
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி
Deleteமிகவும் refreshingaaka உள்ளது தங்கள்
ReplyDeleteமொழிபெயர்ப்பின் நடை.
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி
Delete