மின்சாரமில்லா மாலைவேளை |
அழகின்மேல் அழகூட்ட
அரசாங்கம் மின்சாரத்தை அணைக்க
என்னவளும் நானும்
பேருந்து நிறுத்தத்தில்
அலவளாவிக் கொண்டிருந்தோம்
நிலா ஒளியில்
பறவைகள் கூட்டிற்கு நகர
புழுக்க வாடையில்
மக்கள் வீட்டிலிருந்து வெளியேற
புலம்பலிலும் புழுக்கத்திலும்
மாலை நகர்ந்து கொண்டிருந்தது
இருட்டிலும் அவள்
கன்னங்கள் பளபளக்க
நானோ குவித்த உதடுகளுடன் - அவள்
கன்னத்தை நோக்கி நகர
சட்டென மின்சாரம் வர
பட்டென அவள் பார்க்க
மின்னலென ஞாபகம் வந்தது
அரசாங்கத்தின் மின்வெட்டு
குறைப்பு தீர்மானம்
உணர்வு போராட்டங்களுக்கிடையே
வெட்கத்தோடு நகர்ந்தது
அந்த மாலைவேளை
மேலும் படிக்க
தனிமை கடற்பயணம்
கதைக்கு காலுண்டா?கத்திரிக்காய்க்கு வாலுண்டா? ( Review )
கவிதையாய் வருவாய்
அனைத்து நன்மைகளிலும் கொஞ்சம் தீமையும்
ReplyDeleteஅனைத்து தீமைகளிலும் கொஞ்சம் நன்மையும்
கல்ந்திருப்பதை சொல்லிப் போகும் தங்கள் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள் (கவிதையைச் சொன்னேன் )
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஅப்போ மின்சாரம் போனதற்கு நன்றி சொல்லிங்க போல........
ReplyDeleteஅட நீங்க வேற மின்சாரம் போறதுக்கு ரூப் போட்டு திட்டிக்கிட்டு இருக்கோம்.
Deleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
மின்சார தடையை இப்படியும்
ReplyDeleteநேரிடையாக எடுத்துக்கொள்ளலாமோ....
வேற வழியில்ல நண்பரே!!
Deleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
இப்ப மின்சாரம் வந்ததுக்கு கவலையாகியிருக்குமே...?
ReplyDeleteகவல இல்லாமலா!!
Deleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
மின்சாரம் = சம்சாரம்...என்ன பன்னும்னு யாருக்கும் தெரியாது ஹிஹி!
ReplyDeleteமாம்ஸ் டயலாக் விட்டு அத்த கிட்ட அடிவாங்கிடாதிங்க?
Deleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
அப்போ மின்தடை காரணமாக அடிக்கடி இந்த நிகழ்வு தொடரும் போல ....
ReplyDeleteவேற வழியில்லை
Deleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
ச்ச...மின்சாரம் வராமலே இருந்திருக்கலாம்.இன்னும் அழகான கவிதையும் வந்திருக்கும் !
ReplyDelete