About Me

Saturday, February 4, 2012

காதலே ஏன் இந்த மாயம் ?

காதலே ஏன் இந்த மாயம்
காதலே ஏன் இந்த மாயம்
காதலே காதலே
ஏன் இந்த மாயம்
இதயத்தின் சுவர்களை
கரைத்திட்ட மாயம்
கண்களும் அலையாய் பொங்குதே
இதயத்தின் சுவர்களும் வெடிக்குதே

இரவின் நடுவினில்
நீ விடும் தூது
எந்தன் கனவினை
கரைக்கும் அமிலத்தின்சாறு
இமைகளின் வெளியே
நீ செய்யும் மாயம்
கனவினில் என்னை
கொல்கின்ற காயம்

உன்னை நினைத்து
பாடிய கீதம்
மூங்கில் காட்டில்
கிழிந்திட்ட கீதம்
உள்ளே உள்ளே
நீ செய்த காயம்
என்னைக் கொல்லும்
காலனின் வாகனம்.

2 comments:

  1. பார்ரா...மாப்ள இதயத்துக்கு எத்தனை தடவை தான் ஒட்டு போடுரது!

    ReplyDelete
    Replies
    1. அட சும்மா போடுங்க மாம்ஸ்.எனக்கு போடாம யாருக்கு போட போறீங்க

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..