Practice Tough Love |
சுயமில்லாதான் வாழ்க்கை
முகமில்லாத மனிதனடா
சுய ஒழுக்கமில்லாதான் வாழ்க்கை
பாறை குடிகொண்ட கோவிலடா
ஒழுக்கம்தானே நம்மை
செதுக்கும் உளிகள்
நமக்கு நாமே கடுமையாக
நடப்பதுதானே ஒழுக்கம் - கேளுங்கள்
அது ஒழுக்கம் இல்லை
விதமான கடுமையான அன்பு
சுய ஒழுக்கமில்லாதான் வாழ்க்கை
காற்றின் போக்கில் அசைந்தாடும்
ஒழுக்கமுள்ளவன் வாழ்க்கை
காற்றை எதிர்க்கும் ஆலமரமாகும்
சுயஒழுக்கம் ஒன்று
வெளியிலிருந்து வருவதல்ல
அது உள்ளிருந்து
முளைக்க வேண்டிய விதை
ஒழுக்கமென்பது வெறும் வார்த்தை
அது முளைக்கும் தனிப்பட்ட
மனிதனின் மனதைப் பொறுத்தது
இதயம் சொல்லும் முடியுமென்று
ஆனால் ஒன்றும் நடக்காது
காரணம் சுயஒழுக்கமின்மை
சுயஒழுக்கமென்பது நமக்கு
நாமே கொடுக்கும் பயிற்சி
பயிற்சியில்லா குதிரை வெற்றிபெறாது
நெருப்பில் தீக்குளித்தால் தான்
தங்கத்திற்கு மதிப்பு
சுயஒழுக்கத்தில் குளித்தால் தான்
நமக்கு மதிப்பு
வாழ்க்கையின் போக்கில்
நகர வேண்டியதில்லை
சுயஒழுக்கமிருந்தால் போதும்
எல்லாம் நம்மை நோக்கி நகரும்
நல்ல பாடங்கள் சொல்லும் அருமையான கவிதை.
ReplyDeleteபாறை குடி கொண்ட கோவில் ..... பிடித்த வரிகள்.
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி
Delete