அன்பே வருவாயா ? |
என்னைத் தொலைத்தேனடி
உன் விரல்களின் இடையில்
என் விரல் கோர்த்தேனடி
நீயில்லா நானுமே
நீரில்லா மேகமே
மழை தூவும் வானமே
காதல் மழை பொழிவாயா?
இரவில்லா வானத்தில்
குயில்பாடும் கானத்தில்
காலைப்பனி நனைந்தேனடி
காதல்சுகம் கண்டேனடி
இரவெல்லாம் நீண்டிருக்க
கனவெல்லாம் காத்திருக்க
கனியே நீ வருவாயா?
காதல்சுகம் தருவாயா?
வழியெல்லாம் விழிவைத்து
விழிக்குள்ளே உன்னை வைத்து
உனக்காக காத்திருப்பேன்
பூவாக பூத்திருப்பேன்
சொல்லாத சொல்லெடுத்து
குத்தாத முள்ளெடுத்து
மணமாலை நான் செய்து
மணமாற சூட்டுவேன்.
வழியெல்லாம் விழிவைத்து
ReplyDeleteவிழிக்குள்ளே உன்னை வைத்து
உனக்காக காத்திருப்பேன்
பூவாக பூத்திருப்பேன்
அழகான வரிகள் அருமை
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteஇசையோடு பாட ஏதுவான பாட்டு
ReplyDeleteகருத்தும் சொற்களைக் கோர்த்தவிதமும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteமனதை இனிமையானத் தென்றலாய் வருடும்
ReplyDeleteஒரு அழகான காதல் கவிதை. மிக ரசித்தேன்.
உன்னைப் பார்த்த நொடியில்
ReplyDeleteஎன்னைத் தொலைத்தேனடி
>>
முதல் பார்வையிலேயே காதல்ல தொபுக்கட்டீர்ன்னு விழுந்திட்டீங்களா
ஆமாம் தோழியே!!
Deleteஏக்கமும் காதலும் கலந்து கவிதையானதோ !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteசொற்களால் கோர்த்தெடுத்த அழகான மாலை யாருக்கு கொடுப்பினை உண்டோ ?
ReplyDelete