யார் தந்த காதல் |
யாரிடம் சொன்னதோ
யாருக்கும் தெரியாமல்
இதயத்தை கிழித்ததோ ?
சுகம் தந்தோ காதலே
சுமையாகிப் போனதோ
சுமைதாங்க முடியாமல்
தடுமாறி விழுந்ததோ ?
ஒளிதந்த காதலே
இருளாகிப் போனதோ
இமைமூடும் நேரத்தில்
காற்றினிலே பறந்ததோ ?
சொல்லாத காதல்கள்
சோகங்கள் தந்ததோ
சுவைகூடும் இரவினிலே
சுதிமாறிக் கத்தியதோ ?
அவன் தந்த காதலோ
அடி நெஞ்சில் ஒட்டியதோ
அவனில்லா வேலையிலும்
அசைபோடச் சொல்கிறதோ ?
மேலும் படிக்க
எந்த வடிவிலும் , வரியிலும் காதல் கவிதை இனிமையே.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி
Delete''...அவன் தந்த காதலோ
ReplyDeleteஅடி நெஞ்சில் ஒட்டியதோ
அவனில்லா வேலையிலும்
அசைபோடச் சொல்கிறதோ ?..'
உண்மை தான் காதலர்தின வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
உங்களின் காதல் ராகம்
ReplyDeleteஇனிமையான சங்கீதம்
அருமை வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி
Deleteயாருக்கும் தெரியாமல்
ReplyDeleteஇதயத்தை கிழித்ததோ ?
>>>
இது நிச்சயம் போல ஹிஹி!...கவித நல்லா இருக்குய்யா மாப்ளே!
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி மாம்ஸ்.
Delete//அவன் தந்த காதலோ
ReplyDeleteஅடி நெஞ்சில் ஒட்டியதோ
அவனில்லா வேலையிலும்
அசைபோடச் சொல்கிறதோ ?//
ஒட்டியது என்றும் போகாது!காதல் ஒரு சுகம் என்றால்,காதலியின் நினைவுகள் ஒரு சுகம்தான் தனா!அருமை.
காதலை எப்படி மொழிபெயர்த்தாலும் அழகுதான் !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Delete//சுவைகூடும் இரவினிலே
ReplyDeleteசுதிமாறிக் கத்தியதோ ? //
கத்திய பின்
விழித்தெழுந்து
கனவென்றே சிரித்ததோ..!:)
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteகாதல் படுத்தும் பாடு .........அழகாய் வர்ணித்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Delete