தோள்கொடுக்க வருவீரோ |
சோகத்தை கலந்தது யார் ?
பூக்களின் தோட்டத்தில்
கற்களை வீசியது யார் ?
சொற்களின் கூட்டத்தில்
சோகத்தை வீசியதார் ?
விழியிரண்டும் அழுகிறதே
இமையிரண்டும் துடிக்கிறதே
கனவெல்லாம் கரைகிறதே
வாய்ப்பெல்லாம் பறக்கிறதே
தோல்விகள் எனைச்சூழ
இதயமும் உடைகிறதே !
சிறகொடிந்த பட்டாம்பூச்சி
பறக்கத்தான் ஆசைப்பட்டேன் !
சொல்லித்தர யாருமில்லை
தோள்கொடுக்க ஆளுமில்லை
மூச்சடக்கி முயற்சித்தேன்
முட்டுச்சந்தில் மோதிவிட்டேன்
சிறகுகளும் முளைக்காதோ ?
கனவுகளும் பலிக்காதோ ?
சிறகொடிந்த வாழ்க்கைக்கு
தோள்கொடுக்க வருவீரோ?
தோழனாக ஆவிரோ?
பாட்டாளி
ஜென் zen
தன்னம்பிக்கை
எப்போதும் நம்பிக்கையோடு இருப்பீர்கள்.என்ன இன்று.சோர்ந்துபோனால் துவண்டுவிடுவோம் சேகர்.இதுவும் கடந்து போகும் என்று நடந்துகொண்டேயிருப்போம் சகோதரா !
ReplyDeleteஎன்ன தான் மனதை ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்தாலும் உண்மை அழுகத்தான் செய்கிறது.
Deleteதங்கள் வருகைக்கும் ஆறுதலுக்கும் நன்றி.
துன்பத்தின் சாயலும்
ReplyDeleteதோல்வியின் நிழலும்
நம் மீது படிக்கையில்
நாம் நிலைதவறும் போது ..
தாங்கிக்கொள்ள நல்ல நட்புத் தோள்
வேண்டும்...
இதோ தோழமை நட்பு என்னிடமிருந்து..
நம்பிக்கையை இன்று விதைப்போம்
நாளை வெற்றியை அறுவடை செய்வோம்...
அருமைக் கவிதை இதமான ஆறுதல்.
Deleteதங்கள் வருகைக்கும் ஆறுதலுக்கும் நன்றி.
தம்பி...உங்களுக்கொரு விருது.ஓடி வாங்கோ எடுத்துக்கொள்ள !
ReplyDeletehttp://santhyilnaam.blogspot.com/
தங்கள் விருதுக்கும் தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
Deleteகண்ணின் கண்ணீரும்,
ReplyDeleteநெஞ்சின் ரணங்களும்,
லேசாகட்டும்!
கண்ணீரின் ஈரம்,
காணாமல் போக,
கனவுகள் நினைவாக சிரிக்கட்டும்!
http://kanmani-anbodu.blogspot.in/
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஅருமையான கவிதை.
ReplyDeleteநிறைய படியுங்கள்.
நன்கு எழுதுங்கள்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.
தங்கள் வருகைக்கும் ஆறுதலுக்கும் நன்றி.
Deleteஅருமை சகோ
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Delete