தனிப்பட்ட பார்வையை தக்க வைத்துக் கொள்ளுங்கள்
கவலை கவ்விய முகத்தோடு
பூங்காவில் மனம் பறந்துகொண்டிருக்க
ஆங்கோர் சிறகொடிந்த பட்டாம்பூச்சி
மலர்களில் அமர்வதுமாயும்
தேன் குடிப்பதுமாயும்
மேலும் கீழும் பறப்பதுமாயும்
வாழ்க்கையை கரைத்துக் கொண்டிருக்க
சட்டென கேள்வியொன்று கேட்டேன்
ஏ பூச்சியே உனக்கு
கவலையில்லையா வலிக்கவில்லையா?
என் காதோரம் அமர்ந்து
கதையொன்று சொல்வேன்
பொறுமையாக கேளாய்யென்றது
ஆங்கோர் மருத்துவமனையில்
அடுத்தடுத்த அறையில்
இருவர் அனுமதிக்கப்பட்டனர்
அதிலொருவனுக்கு ஜன்னில்லா அறை
தனிமையும் வேதனையும் நச்சரிக்க
புலம்ப ஆரம்பித்தான் அதைகேட்ட
ஜன்னலுள்ள அறைக்காரன்
ஜன்னலின் வெளியே உள்ளவற்றை
அழகுபட கூற ஆரம்பித்தான்
கேட்டவனுக்கோ இயற்கையை
ரசிக்கமுடியாத வருத்தம்
ஜன்னல்காரனை வெறுத்தான்
இரவில் வந்த நீண்ட இருமல்
ஜன்னல்காரனின் உயிரைக்குடித்தது
பாதுகாப்பு மணி இருந்தும்
ஜன்னலில்லா அறைக்காரன் அழுத்தவில்லை
இப்போது இவன் தனது அறையை
மாற்றிக்கொண்டு ஜன்னலின் வழியே
எட்டிப்பார்த்தான் - அதிர்ச்சி
ஜன்னல் வெறும் சுவரைக் காட்டியது
கஷ்டமான சூழ்நிலையிலும்
ஜன்னல்காரன் இவனை
தனது கற்பனையாலும்
சுத்தமான அன்பினாலும்
சந்தோஷப் படுத்தினான்
கதையை சொல்லிவிட்டு
கண்களில் கண்ணீரை கொடுத்துவிட்டு
பறந்தது பட்டாம்பூச்சி
கேட்பீர் தோழர்களே
எல்லா இருட்டிலும்
ஒளிவரும் பாதையுண்டு
இக்கஷ்டம் பெரியதா
இத்தோல்வி பெரியதாவென
உங்களை நீங்களே கேளுங்கள்
ஒளிக்கான பாதை தெரியும்
கஷ்டத்திலும் ஒளிமயமான
பாதையை தேடும் பார்வையை
தக்கவைத்துக் கொள்ளுங்கள்
அது உங்களை
வெளிச்சத்திற்கு கூட்டிச்செல்லும்
பூமியின் மீதான உங்களின்
வருகைக்காலம் குறைவு
வருத்தப்பட்டு இருளில்
வாழ்க்கையை கரைக்காதீர்கள்
ஒளியை தேடும் திறனை
கண்டு கொள்ளுங்கள்
புத்திசாலிதனத்துடன் வாழ்வை
துளிகூட மிச்சமில்லாமல்
பருகி விடுங்கள்
Maintain your perspective |
பூங்காவில் மனம் பறந்துகொண்டிருக்க
ஆங்கோர் சிறகொடிந்த பட்டாம்பூச்சி
மலர்களில் அமர்வதுமாயும்
தேன் குடிப்பதுமாயும்
மேலும் கீழும் பறப்பதுமாயும்
வாழ்க்கையை கரைத்துக் கொண்டிருக்க
சட்டென கேள்வியொன்று கேட்டேன்
ஏ பூச்சியே உனக்கு
கவலையில்லையா வலிக்கவில்லையா?
என் காதோரம் அமர்ந்து
கதையொன்று சொல்வேன்
பொறுமையாக கேளாய்யென்றது
ஆங்கோர் மருத்துவமனையில்
அடுத்தடுத்த அறையில்
இருவர் அனுமதிக்கப்பட்டனர்
அதிலொருவனுக்கு ஜன்னில்லா அறை
தனிமையும் வேதனையும் நச்சரிக்க
புலம்ப ஆரம்பித்தான் அதைகேட்ட
ஜன்னலுள்ள அறைக்காரன்
ஜன்னலின் வெளியே உள்ளவற்றை
அழகுபட கூற ஆரம்பித்தான்
கேட்டவனுக்கோ இயற்கையை
ரசிக்கமுடியாத வருத்தம்
ஜன்னல்காரனை வெறுத்தான்
இரவில் வந்த நீண்ட இருமல்
ஜன்னல்காரனின் உயிரைக்குடித்தது
பாதுகாப்பு மணி இருந்தும்
ஜன்னலில்லா அறைக்காரன் அழுத்தவில்லை
இப்போது இவன் தனது அறையை
மாற்றிக்கொண்டு ஜன்னலின் வழியே
எட்டிப்பார்த்தான் - அதிர்ச்சி
ஜன்னல் வெறும் சுவரைக் காட்டியது
கஷ்டமான சூழ்நிலையிலும்
ஜன்னல்காரன் இவனை
தனது கற்பனையாலும்
சுத்தமான அன்பினாலும்
சந்தோஷப் படுத்தினான்
கதையை சொல்லிவிட்டு
கண்களில் கண்ணீரை கொடுத்துவிட்டு
பறந்தது பட்டாம்பூச்சி
கேட்பீர் தோழர்களே
எல்லா இருட்டிலும்
ஒளிவரும் பாதையுண்டு
இக்கஷ்டம் பெரியதா
இத்தோல்வி பெரியதாவென
உங்களை நீங்களே கேளுங்கள்
ஒளிக்கான பாதை தெரியும்
கஷ்டத்திலும் ஒளிமயமான
பாதையை தேடும் பார்வையை
தக்கவைத்துக் கொள்ளுங்கள்
அது உங்களை
வெளிச்சத்திற்கு கூட்டிச்செல்லும்
பூமியின் மீதான உங்களின்
வருகைக்காலம் குறைவு
வருத்தப்பட்டு இருளில்
வாழ்க்கையை கரைக்காதீர்கள்
ஒளியை தேடும் திறனை
கண்டு கொள்ளுங்கள்
புத்திசாலிதனத்துடன் வாழ்வை
துளிகூட மிச்சமில்லாமல்
பருகி விடுங்கள்
வாழ்வின் மீதான பிடிப்பை வலியுறுத்தும் வரிகளும் அதற்கேற்ற கதையும் மிக அருமை. பாராட்டுகள் தனசேகரன்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.
Delete//பூமியின் மீதான உங்களின்
ReplyDeleteவருகைக்காலம் குறைவு//
உண்மையான வரிகள். சிறந்த கதைச்சொல்லும் உத்தி.
தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.
Deleteவாழ்க்கை நம்பிக்கை என்ற நதிமேல் போய் கொண்டு இருக்கும் ஒரு ஓடம்..மாப்ள கவிதை போல கதயா!
ReplyDeleteசரிதான் மாம்ஸ் .ஆனால் கதை போல உண்மை.
Deleteதங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.