வறுமையின் மதிய உணவு |
நீண்ட தகிக்கும் தார்சாலை - அதன்
இடது ஓரத்தில்
மரத்தின் நிழலில்
மெலிந்த தேகம்
வெள்ளைச் சட்டை
கருத்தமுகம் - அதில்
அறுபதை தாண்டிய வறுமையின்
வெற்றிக் கொண்டாட்டம்
சட்டியில் பழையசோறு
ஒரு கையில் மிளகாய்
மறுகையில் உணவென
பசியாறிக் கொண்டிருந்தது
அந்த வயோதிக வயிறு
உட்கார விரிப்பில்லை
குடிக்க நீரில்லை
சாலையின் இரைச்சல்
புழுதியின் நடுவே
சற்றும் சலனமில்லாமல்
தன் வாழ்க்கையை
கடந்து கொண்டிருந்தது
அந்த மெளனம்.
படமும் பதிவும் மனம் சங்கடப் படுத்திப் போகிறது
ReplyDeleteவேதனையைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
வேறென்ன சொல்ல ?
படமும் பதிவும் கண்டேன்-தீ
ReplyDeleteபற்றிய வேதனைக் கொண்டேன்
இடமிலை ஏழைகள் வாழ-என்றே
எழுதினீர் இங்கே தோழ
புலவர் சா இராமாநுசம்
ஐயா அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Deleteபடமே வலிக்கிறது.வறுமை கொடுமை !
ReplyDeleteஇது கொடுமையிலும் கொடுமை...
ReplyDeleteமாற வேண்டும் அனைத்தும்....
வலிகளோடு கூடிய கவிதை அருமை...
அதிலும் இளமையில் வறுமை
ReplyDeleteமிகக் கொடிது அவ்வையார் சொன்னது போல் .
நன்று.
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteவறுமை வாழ்வின் மிக கொடுமை யாருக்கும் வரக்கூடாது இந்நிலை..... மிக அருமையான கவி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteமனதை தொடும் வரிகள்... அந்த படத்தை பார்க்கும் போது மனதில் இனம் புரியாத சோகம் எழுகிறது நண்பா
ReplyDeleteவலி மிகும் வரிகள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteவேதனை மிகுந்த யதார்த்தம்.நன்று கவிதை
ReplyDeleteமுதுமையில் வறுமையின் கொடுமையை உங்கள் கவிதை உணர்த்துகிறது! இளமையில் வறுமையின் கொடுமையை அந்த படம் உனர்த்துகிரது!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteவறுமைக்கு வாழ்கை பட்ட மனிதர்களின்
ReplyDeleteவலிகள் பதிந்த வரிகள்
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Delete