அன்னையின் பிரிவு |
என்னைப் பெற்றவளே
சக்தியின் மறு உருவமே
கருப்பொருளின் உருப்பொருளே
என்னை உயிர்ப்பித்தவளே
கழுதையைப் பெற்றவளும் சாகிறாள் - உன்போல்
சிங்கத்தைப் பெற்றவளும் சாகிறாள் - பாகுபாடில்லா
இந்த சாவுக்கும் நோக்காடொன்று வாராதா ?
உடலை உருக்கி உதிரம் தெளித்து
நீ செய்த ஓவியம் உன்முன்னே
கண்ணீரால் கரையும் சத்தம் கேட்கிறதா?
எழுந்து வாராயோ ? மகனேவென அழைப்பாயோ ?
உடலை வைத்து அழுவதா? - இல்லை
தொலைத்த உயிரைத்தேடி அழுவதா?
ஒன்றும் புரியவில்லை ?
உன்னைத்தேடி அலைகிறேன்
குழந்தையென அழுகிறேன்.
போனவளே வந்துவிடு
போன இடம் சொல்லிவிடு
தாயின் இழப்புக்கான மகவின் கதறல் படித்த என்னையும் உருக்கியது. நன்று.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteமீளாத் துயிலில் அவள் ..
ReplyDeleteமீளாத் துயரில் நாம்....
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஅன்னையின் பிரிவு சூப்பர்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteதனிப்பட்டு வலிக்கிறது இதயம்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஇதயம் நொறுங்கவைக்கும் வரிகள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteமனதை கவர்ந்த வரிகள்..அருமையான கவிதை.பகிர்வுக்கு நன்றி நண்பா.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஉடலை வைத்து அழுவதா? - இல்லை
ReplyDeleteதொலைத்த உயிரைத்தேடி அழுவதா?
ஒன்றும் புரியவில்லை ?
உன்னைத்தேடி அலைகிறேன்
குழந்தையென அழுகிறேன்.
போனவளே வந்துவிடு
போன இடம் சொல்லிவிடு//
மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Delete''....இந்த சாவுக்கும் நோக்காடொன்று வாராதா ?...'''
ReplyDeleteஅருத்தம் ஆயிரம் கூறும் வரி. அப்புறம் துன்பமே இல்லையே!.
தாயின் இழப்பு கூறும் வரிகள் மனப் பாயை விரிக்கிறுது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
தாயை இழந்தவர்களுக்கே தவிப்பு புரியும் எனக்கு புரிகிறது .
ReplyDeleteதாயை இழந்தவர்களுக்கே தவிப்பு புரியும் எனக்கு புரிகிறது .
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஇழப்பின் வலி உணர்ந்தவர்க்கே புரியும்.கலங்கிவிட்டேன் !
ReplyDeleteபெற்றவரைப் பாரமாய் நினைக்கும் கல் நெஞ்சங்களின் மத்தியில் தாயின் பெருமை உணர்ந்து கதறும் மகவுக்காகவாவது இன்னும் சில காலம் அத்தாய் உயிரோடு இருந்திருக்கலாம். மனம் கனத்தப் பதிவு.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
ReplyDeleteபாகுபாடில்லா
ReplyDeleteஇந்த சாவுக்கும் நோக்காடொன்று வாராதா ?
உருக்கிக் கரைக்கும் வரிகள்...
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteதங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .
ReplyDeletearumai
ReplyDeleteநெஞ்சை பிழியும் கவிதை .. மிக .. மிக அருமை நண்பா
ReplyDelete