அன்பால் கொல்லாதே |
பொன்னிற மேனியென
அழகியதொரு பட்டாம்பூச்சி
தோட்டத்தில் பறக்கக்கண்டேன்
மலர்களின் மேலமர்வதுமாய்
மகரந்தம் குடிப்பதுமாய்
இடுப்பில் கயரில்லாமல்
சுதந்திரமாய் பறக்கக்கண்டேன்
உணர்வுகள் தடுமாற
அன்புவெள்ளம் பொங்கிவர
இதயத்தில் இடமொதிக்கி
அன்பென்னும் கூட்டிலடைத்தேன்
அன்பென நினைத்து
நான் செய்த காரியங்கள்
சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்க
நிறையிழந்த இலையென
அன்பில் கருகி
பிணமாய் காட்சியளித்தது
அன்புகூட கொல்லுமென
கடைசியாய் வந்த ஞானம்
கண்ணீர்த்துளிகளுடன் சொன்னது
அன்பால் கொல்லாதே!
கவிதயும் பேசுமோ...அன்பால் கொல்லாதே மாப்ள!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஅருமை... அன்பும் கொல்லும். அழகான தத்துவம். எடுத்தக்கொண்ட பட்டாம்பூச்சிக் கருவும் வெகுபொருத்தம். பாராட்டுகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஅருமை..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஎல்லாரையும் வாழவைக்கும் அன்பு. சிலரை மட்டும் வீழ வைத்துவிடுவது ஏனோன்னு எனக்கு இன்னமும் புரியாமலே இருக்கு
ReplyDeleteஅழகு கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள்.
அன்பும் கொல்லும்!அருமை!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஅளவிற்கு மீறினால் அன்பும் நஞ்சாகலாம்!! அற்புதமான கவிதை!
ReplyDeleteஇதயத்தில் இடமொதிக்கி
ReplyDeleteஅன்பென்னும் கூட்டிலடைத்தேன்..
இவ்வரிகள் என்னை கவர்ந்தது.மிக அருமையான கவி சகோதரனே
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஅருமை அருமை அருமை.வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை சேகரன் !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி
Delete