அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

சர்க்கஸ் கல்விமுறை

சர்க்கஸ் கல்விமுறை
சர்க்கஸ் கல்விமுறை
பள்ளியென்னும் தொழிற்சாலையில்
பிள்ளைகளெல்லாம் உருவாகுதடா !
ரோட்டுல திரியும் கழுதபோல
பொதிமூட தூக்குதடா !
செக்குல பூட்டுன மாடுபோல
சுத்தி சுத்தி போகுதடா !
கடிவாளம் போட்ட குதிரபோல
சுய சிந்தனையில்லாம ஓடுதடா !
பழம் கொடுத்த கிளியபோல
சொன்னதயெல்லாம் சொல்லுதடா !

கால காலக் கல்விமுற - இது
வெள்ளையன் கொடுத்த கல்விமுற
ஆங்கிலப் பாடல் சொல்லிதரும்- இது
ஆங்கிலவழிக் கல்விமுற
குரு சீடன் மறஞ்சு போய் - இது
ஆசிரிய மாணவன் கல்விமுற
சொந்தபுத்திய குப்பைல போட்டு
மதிப்பெண் வாங்கும் கல்விமுற
பணங்காட்டு நரிகளிடம் - பிள்ளைகள்
பாடம் கற்கும் கல்விமுற
பிள்ளைகள் கனவை எரியூட்டி அதில்
குளிர்காயும் கல்விமுற
இந்தியாவின் தூண்களெல்லாம்
சர்க்கஸில் வரும் சிங்கமென
ஜோரா ஜோரா தாவுதுபார்
சுத்தி சுத்தி வருகுது பார்



எல்லாம் இழந்தவன்

எல்லாம் இழந்தவன்
எல்லாம் இழந்தவன்
வழியில்லா வாழ்க்கையில் வழி
தேடி தேடி வாழ்கிறேன்
பிறையில்லா வானில் ஒளி
தேடி தேடி பறக்கிறேன்
வழி சொல்வார் யாருமில்லை
ஒளி தருபார் யாருமில்லை
குருடன் கையில் விளக்காய்
பயனில்லா வாழ்க்கை வாழ்கிறேன்

அழகான வீடிது
விளையாட ஆளில்லை
சுரம் கொண்ட வீணை
சுதி சேர்க்க ஆளில்லை
இருக்கும் போது இருந்தவர்கள்
இல்லாத போது பறந்துவிட்டார்கள்
சொந்தமென்று வந்தவரெல்லாம்
நோகடித்து போனார்கள்
எல்லாம் போய்விட்டது
இல்லாமை மட்டும் இருக்கிறது
இப்போது நான்,
இந்த ஓட்டைக் குடிசை,
பழைய புல்லாங்குழல்
கனவுக்குப்பைகளோடு
தனிமையோடு இருக்கிறேன்.

 மேலும் படிக்க

தனிமை கடற்பயணம்
தோள்கொடுக்க வருவீரோ?
தோழி

மின்சாரமில்லா மாலைவேளை

மின்சாரமில்லா மாலைவேளை
மின்சாரமில்லா மாலைவேளை
அழகானதொரு மாலைவேளை
அழகின்மேல் அழகூட்ட
அரசாங்கம் மின்சாரத்தை அணைக்க
என்னவளும் நானும்
பேருந்து நிறுத்தத்தில்
அலவளாவிக் கொண்டிருந்தோம்
நிலா ஒளியில்
பறவைகள் கூட்டிற்கு நகர
புழுக்க வாடையில்
மக்கள் வீட்டிலிருந்து வெளியேற
புலம்பலிலும் புழுக்கத்திலும்
மாலை நகர்ந்து கொண்டிருந்தது
இருட்டிலும் அவள்
கன்னங்கள் பளபளக்க
நானோ குவித்த உதடுகளுடன் - அவள்
கன்னத்தை நோக்கி நகர
சட்டென மின்சாரம் வர
பட்டென அவள் பார்க்க
மின்னலென ஞாபகம் வந்தது
அரசாங்கத்தின் மின்வெட்டு
குறைப்பு தீர்மானம்
உணர்வு போராட்டங்களுக்கிடையே
வெட்கத்தோடு நகர்ந்தது
அந்த மாலைவேளை

மேலும் படிக்க

தனிமை கடற்பயணம்
கதைக்கு காலுண்டா?கத்திரிக்காய்க்கு வாலுண்டா? ( Review )
கவிதையாய் வருவாய்

எங்க சொந்த ஊரைப்பற்றி - தொடர்பதிவு

                                                   தமிழ்நாட்டில் மிக வறட்சியான ஊர்.குடிக்க தண்ணீர் கிடையாது.வருடத்தின் 365 நாட்களும் சுட்டெரிக்கும் வெயில்.ஆனால் வருட உற்பத்தி நிகர லாபம் 1000 கோடி ரூபாய்.இந்தியாவின் 90 % பட்டாசுகள் இங்கு தான் உற்பத்தியாகிறது.இந்தியாவின் 60 % அச்சுத்தொழில் 80 % தீப்பெட்டி என எல்லாம் இங்கு தான் தயாராகின்றன.கடுமையான உழைப்பைப் பார்த்த பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் எங்கள் ஊரை குட்டி ஜப்பான் என அழைத்தார்.

                                                   பேருந்தின் மூலம் எங்கள் ஊருக்கு  நுழையும் போது "வெடிகளின் நகரம்" உங்களை வரவேற்கிறது என்ற அறிவிப்பு பலகையை காணலாம்.நானும் உங்களை என் சொந்த ஊரான சிவகாசியை பற்றி அறிய அன்போடு வரவேற்கிறேன்.இத்தொடர் பதிவை எழுத அழைத்த நண்பர் துரை டேனியல் அவர்களை மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                  சுமார் 600 வருடங்களுக்கு முன் ஹரிகேசரி பராகிராம பாண்டியன் மதுரையின் தென் பகுதியை ஆண்டு வந்தார்.அவர் காசியைப் போன்று தென்காசியிலும் சிவன் கோவில் எழுப்ப ஆசைப்பட்டு காசியிலிருந்து சிவலிங்கத்தை பசுவின் மேல் ஏற்றி வந்தார்.போகும் வழியில் சிவகாசியில் தங்கி ஓய்வெடுத்து கிளம்பும் வேலையில் பசு அந்த இடத்தை விட்டு நகர மறுக்க அங்கேயே சிவலிங்கத்திற்கு கோவில் எழுப்பினான்.காசியிலிருந்து வந்த சிவலிங்கம் என்பதன் சுருக்கமே சிவகாசி.
சிவகாசி சிவன் கோவில்
சிவகாசி சிவன் கோவில்

                                                    1960களில் இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக இனி அரசாங்கத்தை நம்ப முடியாது என நினைத்து சிவகாசியில் உள்ள மக்களும் பணக்கார முதலாளிகளும் ஒன்று சேர்ந்து வறட்சிக்கு ஏற்ற தொழில் செய்ய ஆரம்பித்தனர்.ஒற்றுமையாலும் கடுமையான உழைப்பாலும் பாலையையும் சோலை ஆக்கினர்.இன்று சிவகாசி இந்தியாவின் பட்டாசுகளின் தலைநகரம்.உலகில் ஜெர்மனியின் குடன்பர்க் நகரத்திற்கடுத்து அதிக அச்சுத்தொழில் நடைபெறும் இடம்.சீனாவிற்கடுத்து அதிக பட்டாசுகள் தயாரகும் இடம் என உலக நாடுகளோடு போட்டி போட்டு உழைக்கும் மக்கள் வாழும் இடம்.இந்தியாவில் 100% வேலைவாய்ப்பு உள்ள இடம்.பொருளாதார தேக்கத்தினால் பாதிக்கப்படாத நகரம்.இந்தியாவில் 100% கல்வியறிவை நோக்கி நகரும் ஒரே நகரம்.

                                                   சிவகாசியின் மொத்த மக்கள் தொகை 1.5 லட்சம்.நேரடியாக 100000 பேரும் மறைமுகமாக 150000 பேரும் வேலை செய்கின்றனர்.முக்கியமான திருவிழாக்கள் பங்குனி பொங்கல்,சித்திரை பொங்கல்.பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.சித்திரை திருவிழாவின் போது 5ம்,6ம் நாள் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
                                                   சிவகாசியில் பத்திரகாளியம்மன்,மாரியம்மன் என்ற இரு காவல் தெய்வங்களுக்கு இரு கோவில்கள் உள்ளன.இதில் பத்திரகாளியம்மன் கோவில்கோபுரம் தமிழ்நாட்டில் உயர்ந்த கோபுரங்களில் ஒன்று.மாரியம்மன் கோவில் உட்புறம் தங்கத்தகடுகளால் பதிக்கப்பட்டது.இவை இரண்டும் தனியாரால் பராமரிக்கப்படுகின்றன.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில்
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில்

                                                   நீங்கள் வெடிக்கும் பட்டாசு.எழுதும் நோட்டு,படிக்கும் புத்தகம்,பார்க்கும் வண்ண போஸ்டர்கள்,தீப்பெட்டி என எல்லாம் சிவகாசியில் தயாராகுபவை.பொதுவாக "made in china" ,"made in india" என்று நாடுகளைத்தான் அழைப்போம்.ஆனால் சிவகாசியோ "made in sivakasi" என்ற தனிவழியில் உலகளாவிய வர்த்தகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.கடினமாக உழைத்தால் பாலையையும் சோலையாக்கலாம்.இது தான் சிவகாசியில் நான் கற்ற பாடம்.


மேலும் படிக்க

தன்னம்பிக்கை
என்ட்ரோபி(entropy)
miracle Antimatter!!

                  



தொந்தரவு செய்யாதே - don't disturb me

தொந்தரவு செய்யாதே - don't disturb me
தொந்தரவு செய்யாதே
உனக்கும் கடவுளுக்கும்
வேறு வேலையில்லை - அவனோ
என்னை படைத்துக் கொண்டே இருக்கிறான்
நீயோ என்னை காதலிக்காமல்
சாகடித்துக் கொண்டே இருக்கிறாய் - ஒன்று
நீ என்னைக் காதல் செய் - இல்லை
கடவுளை சும்மா இருக்கச் சொல் !


மேலும் படிக்க

தன்னம்பிக்கை
என்ட்ரோபி(entropy)
miracle Antimatter!!

அன்னையின் பிரிவு

அன்னையின் பிரிவு
அன்னையின் பிரிவு
அன்னையே
என்னைப் பெற்றவளே
சக்தியின் மறு உருவமே
கருப்பொருளின் உருப்பொருளே
என்னை உயிர்ப்பித்தவளே

கழுதையைப் பெற்றவளும் சாகிறாள் - உன்போல்
சிங்கத்தைப் பெற்றவளும் சாகிறாள் - பாகுபாடில்லா
இந்த சாவுக்கும் நோக்காடொன்று வாராதா ?
உடலை உருக்கி உதிரம் தெளித்து
நீ செய்த ஓவியம் உன்முன்னே
கண்ணீரால் கரையும் சத்தம் கேட்கிறதா?
எழுந்து வாராயோ ? மகனேவென அழைப்பாயோ ?

உடலை வைத்து அழுவதா? - இல்லை
தொலைத்த உயிரைத்தேடி அழுவதா?
ஒன்றும் புரியவில்லை ?
உன்னைத்தேடி அலைகிறேன்
குழந்தையென அழுகிறேன்.
போனவளே வந்துவிடு
போன இடம் சொல்லிவிடு


love is enough - அன்பு மட்டும் போதும்

அன்பு மட்டும் போதும்
 அன்பு மட்டும் போதும்
அழுவது நீயாகட்டும்
துடைப்பது நானாகட்டும்
உறவு தேவையில்லை
உரிமை தேவையில்லை
கண்ணீரைத் துடைப்பதற்கு
அன்பு மட்டும் போதும் !
அன்பு இருந்தால்
கல்லையும் கரைக்கலாம்
பசும் புல்லிலும்
கடவுளைக் காணலாம் !

காதல் பயம் - Love Fear

காதல் பயம்
காதல் பயம்
காதல்வரா வானத்தினூடே
சத்தமில்லாமல் பறந்தேன்
காதல்வரா தெருவினூடே
தடமில்லாமல் நடந்தேன்
கன்னியர் பாதையில்
கண்மூடி நடந்தேன்
அலைபாயும் நேரத்தில்
கீதை படித்தேன்
சுவைமிகும் நேரத்தில்
சோகம் படித்தேன்
மகிழ்ச்சி விற்று
காவி வாங்கினேன்
காதலும் என்னை கவ்விடுமோ ?
காதல் நஞ்சைக் கக்கிடுமோ ?
இந்நஞ்சுக்கும் முறிவு உண்டோ ?
சொல்லிவிட்டு காதல் செய்வீர் ?
காதல் தோழர்களே !

அன்பால் கொல்லாதே

அன்பால் கொல்லாதே
மென்மையே மென்மையென
பொன்னிற மேனியென
அழகியதொரு பட்டாம்பூச்சி
தோட்டத்தில் பறக்கக்கண்டேன்
மலர்களின் மேலமர்வதுமாய்
மகரந்தம் குடிப்பதுமாய்
இடுப்பில் கயரில்லாமல்
சுதந்திரமாய் பறக்கக்கண்டேன்

உணர்வுகள் தடுமாற
அன்புவெள்ளம் பொங்கிவர
இதயத்தில் இடமொதிக்கி
அன்பென்னும் கூட்டிலடைத்தேன்
அன்பென நினைத்து
நான் செய்த காரியங்கள்
சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்க
நிறையிழந்த இலையென
அன்பில் கருகி
பிணமாய் காட்சியளித்தது
அன்புகூட கொல்லுமென
கடைசியாய் வந்த ஞானம்
கண்ணீர்த்துளிகளுடன் சொன்னது
அன்பால் கொல்லாதே!

கருச்சிதைவு

கருச்சிதைவு
கருச்சிதைவு
வரிகள் தெரியாமல்
வலிகளுடன் மட்டும் - வயிற்றில்
வளர்ந்த என் கவிதை
கையில் கிடைத்தது
உருகுலைந்த நிலையில்
இதற்காகவா இத்தனை வலிகள் !