ஓர் அழகான எழுத்து முயற்சி.

சர்க்கஸ் கல்விமுறை

17 comments
சர்க்கஸ் கல்விமுறை
சர்க்கஸ் கல்விமுறை
பள்ளியென்னும் தொழிற்சாலையில்
பிள்ளைகளெல்லாம் உருவாகுதடா !
ரோட்டுல திரியும் கழுதபோல
பொதிமூட தூக்குதடா !
செக்குல பூட்டுன மாடுபோல
சுத்தி சுத்தி போகுதடா !
கடிவாளம் போட்ட குதிரபோல
சுய சிந்தனையில்லாம ஓடுதடா !
பழம் கொடுத்த கிளியபோல
சொன்னதயெல்லாம் சொல்லுதடா !

கால காலக் கல்விமுற - இது
வெள்ளையன் கொடுத்த கல்விமுற
ஆங்கிலப் பாடல் சொல்லிதரும்- இது
ஆங்கிலவழிக் கல்விமுற
குரு சீடன் மறஞ்சு போய் - இது
ஆசிரிய மாணவன் கல்விமுற
சொந்தபுத்திய குப்பைல போட்டு
மதிப்பெண் வாங்கும் கல்விமுற
பணங்காட்டு நரிகளிடம் - பிள்ளைகள்
பாடம் கற்கும் கல்விமுற
பிள்ளைகள் கனவை எரியூட்டி அதில்
குளிர்காயும் கல்விமுற
இந்தியாவின் தூண்களெல்லாம்
சர்க்கஸில் வரும் சிங்கமென
ஜோரா ஜோரா தாவுதுபார்
சுத்தி சுத்தி வருகுது பார்17 comments :

 1. பிள்ளைகள் கனவை எரியூட்டி அதில்
  குளிர்காயும் கல்விமுற
  இந்தியாவின் தூண்களெல்லாம்
  சர்க்கஸில் வரும் சிங்கமென
  ஜோரா ஜோரா தாவுதுபார்
  சுத்தி சுத்தி வருகுது பார்

  நிதர்சன்க் கல்விமுறையை சிறப்பாக படம்பிடித்த ஆக்கம்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 2. இன்றைய கல்விமுறையை
  அப்பட்டமாய் பகிர்ந்தளிக்கும்
  அழகிய கவிதை நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 3. கூர்ந்து கவனித்தால் கல்வி முறையின் குறைபாடுகள் யாவும் நம் தொலைத்த சமுகத்தின் எதிரொலியாக புலப்படும் . பணம் என்று நமது வாழ்க்கையின் தரத்தை மதிப்பிட ஆரம்பித்ததோ அன்று மாறிப்போன கல்வி முறை இது. நாம் தான் அதை மாற்றினோம் அதுவாக மாறவில்லை.அந்த உண்மையை காலம் கடந்து புரிந்து கொண்டோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 4. சொந்தபுத்திய குப்பைல போட்டு
  மதிப்பெண் வாங்கும் கல்விமுற
  பணங்காட்டு நரிகளிடம் - பிள்ளைகள்
  பாடம் கற்கும் கல்விமுற
  சரியான சவுக்கடி .

  ReplyDelete
  Replies
  1. ங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 5. உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை பரிந்துரைக்கிறேன் பெற்று கொள்ளுங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 6. கிளி , கழுதை , மாடு , குதிரை , இதோடு வானரம்
  சேர்த்துக் கொள்ளவும் தோழரே. அவர்கள் ஆடுறா ராம என்று
  சொன்னால் அதன் படி மட்டும் ஆட வேண்டி உள்ளதே.
  கற்பனைத் திறன் , ஆக்கப்பூர்வ சிந்தனைக்கெல்லாம் இங்கே இடமில்லை.
  அழகான நெத்தியடிப் பதிவு . வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 7. அருமையாச் சொல்லியிருக்கீங்க

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 8. மனம் அழுத்தும் யதார்த்தத்தை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.

  தங்களைத் தொடர்பதிவொன்றிற்கு அழைத்துள்ளேன். நேரமிருக்கும்போது தொடரவும்.நன்றி.

  http://geethamanjari.blogspot.com.au/2012/02/blog-post_27.html

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   என்னை தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றி.நான் ஏற்கனவே நண்பர் துரை டேனியலின் ஆசைக்கினங்க என் ஊரை பற்றிய தொடர்பதிவை முடித்துவிட்டேன்.

   Delete
 9. இன்றைய கல்வி நிலையின் யதார்த்தம்.குழந்தைகள் இயல்பில்லாமல் ஆகிறார்கள்.வருத்தமான விஷயம் !

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..