ஓர் அழகான எழுத்து முயற்சி.

எங்க சொந்த ஊரைப்பற்றி - தொடர்பதிவு

17 comments
                                                   தமிழ்நாட்டில் மிக வறட்சியான ஊர்.குடிக்க தண்ணீர் கிடையாது.வருடத்தின் 365 நாட்களும் சுட்டெரிக்கும் வெயில்.ஆனால் வருட உற்பத்தி நிகர லாபம் 1000 கோடி ரூபாய்.இந்தியாவின் 90 % பட்டாசுகள் இங்கு தான் உற்பத்தியாகிறது.இந்தியாவின் 60 % அச்சுத்தொழில் 80 % தீப்பெட்டி என எல்லாம் இங்கு தான் தயாராகின்றன.கடுமையான உழைப்பைப் பார்த்த பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் எங்கள் ஊரை குட்டி ஜப்பான் என அழைத்தார்.

                                                   பேருந்தின் மூலம் எங்கள் ஊருக்கு  நுழையும் போது "வெடிகளின் நகரம்" உங்களை வரவேற்கிறது என்ற அறிவிப்பு பலகையை காணலாம்.நானும் உங்களை என் சொந்த ஊரான சிவகாசியை பற்றி அறிய அன்போடு வரவேற்கிறேன்.இத்தொடர் பதிவை எழுத அழைத்த நண்பர் துரை டேனியல் அவர்களை மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                  சுமார் 600 வருடங்களுக்கு முன் ஹரிகேசரி பராகிராம பாண்டியன் மதுரையின் தென் பகுதியை ஆண்டு வந்தார்.அவர் காசியைப் போன்று தென்காசியிலும் சிவன் கோவில் எழுப்ப ஆசைப்பட்டு காசியிலிருந்து சிவலிங்கத்தை பசுவின் மேல் ஏற்றி வந்தார்.போகும் வழியில் சிவகாசியில் தங்கி ஓய்வெடுத்து கிளம்பும் வேலையில் பசு அந்த இடத்தை விட்டு நகர மறுக்க அங்கேயே சிவலிங்கத்திற்கு கோவில் எழுப்பினான்.காசியிலிருந்து வந்த சிவலிங்கம் என்பதன் சுருக்கமே சிவகாசி.
சிவகாசி சிவன் கோவில்
சிவகாசி சிவன் கோவில்

                                                    1960களில் இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக இனி அரசாங்கத்தை நம்ப முடியாது என நினைத்து சிவகாசியில் உள்ள மக்களும் பணக்கார முதலாளிகளும் ஒன்று சேர்ந்து வறட்சிக்கு ஏற்ற தொழில் செய்ய ஆரம்பித்தனர்.ஒற்றுமையாலும் கடுமையான உழைப்பாலும் பாலையையும் சோலை ஆக்கினர்.இன்று சிவகாசி இந்தியாவின் பட்டாசுகளின் தலைநகரம்.உலகில் ஜெர்மனியின் குடன்பர்க் நகரத்திற்கடுத்து அதிக அச்சுத்தொழில் நடைபெறும் இடம்.சீனாவிற்கடுத்து அதிக பட்டாசுகள் தயாரகும் இடம் என உலக நாடுகளோடு போட்டி போட்டு உழைக்கும் மக்கள் வாழும் இடம்.இந்தியாவில் 100% வேலைவாய்ப்பு உள்ள இடம்.பொருளாதார தேக்கத்தினால் பாதிக்கப்படாத நகரம்.இந்தியாவில் 100% கல்வியறிவை நோக்கி நகரும் ஒரே நகரம்.

                                                   சிவகாசியின் மொத்த மக்கள் தொகை 1.5 லட்சம்.நேரடியாக 100000 பேரும் மறைமுகமாக 150000 பேரும் வேலை செய்கின்றனர்.முக்கியமான திருவிழாக்கள் பங்குனி பொங்கல்,சித்திரை பொங்கல்.பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.சித்திரை திருவிழாவின் போது 5ம்,6ம் நாள் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
                                                   சிவகாசியில் பத்திரகாளியம்மன்,மாரியம்மன் என்ற இரு காவல் தெய்வங்களுக்கு இரு கோவில்கள் உள்ளன.இதில் பத்திரகாளியம்மன் கோவில்கோபுரம் தமிழ்நாட்டில் உயர்ந்த கோபுரங்களில் ஒன்று.மாரியம்மன் கோவில் உட்புறம் தங்கத்தகடுகளால் பதிக்கப்பட்டது.இவை இரண்டும் தனியாரால் பராமரிக்கப்படுகின்றன.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில்
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில்

                                                   நீங்கள் வெடிக்கும் பட்டாசு.எழுதும் நோட்டு,படிக்கும் புத்தகம்,பார்க்கும் வண்ண போஸ்டர்கள்,தீப்பெட்டி என எல்லாம் சிவகாசியில் தயாராகுபவை.பொதுவாக "made in china" ,"made in india" என்று நாடுகளைத்தான் அழைப்போம்.ஆனால் சிவகாசியோ "made in sivakasi" என்ற தனிவழியில் உலகளாவிய வர்த்தகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.கடினமாக உழைத்தால் பாலையையும் சோலையாக்கலாம்.இது தான் சிவகாசியில் நான் கற்ற பாடம்.


மேலும் படிக்க

தன்னம்பிக்கை
என்ட்ரோபி(entropy)
miracle Antimatter!!

                  17 comments :

 1. சிவகாசியைப்பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி...

  உங்கள் ஊர் பெயர்க்காரணம் அருமை...

  இந்த தொடர் பதிவை எழுதியதற்கு மிக்க நன்றி... இத் தொடரை துவங்கியவன் என்ற முறையில்...

  ReplyDelete
 2. சிவகாசி...பட ..பட பட்டாசு .....விஜய் நடித்து பேரரசு இயக்கிய படம் ...ஹி..ஹி..ஹி..சும்மா....சிவகாசியில் ரிலையன்ஸ் தியேட்டர் ஒன்று இருக்கிறது தானே,,,,80 ரூபாய் டிக்கட்..நான் சிங்கம் படம் அங்கு தான் பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 3. ஓராண்டு உங்கள் ஊரில் இருந்தேன்.பள்ளி இறுதி வகுப்பு உங்கள் பள்ளியில் படித்தேன்,மறக்க முடியாத நினைவுகள்.அந்தவயதில் ஊரை மிகப் பிடித்த காரணம்--பட்டாசு!மறக்க முடியாத பள்லி வாழ்க்கை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 4. பலமுறை பார்த்து ரசித்த நகரம்.
  தேனீக்களாய் மக்கள் சுறுசுறுப்பாய் இயங்கும்
  ஒரு அற்புத நகரம், ..
  வர்த்தக நகரத்தினின்று வந்த தங்களின் சுறுசுறுப்பு
  படைப்புகளில் தெரிகிறது..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 5. உழைக்கும் மக்களை எண்ணிப் பெருமிதப்படும் வரிகளில் நெகிழ்கிறேன். அழகானப் பகிர்வுக்குப் பாராட்டுகள் தனசேகரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 6. உழைப்பாளிகளின் தேசமா உங்கள் சிவகாசி.அதான் நீங்களும் கவிதைப் பட்டாஸ் தயாரிக்கிறீங்க சேகரன் !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 7. அழகான ' டயரி குறிப்புகள் '.....
  உங்கள் கடும் உழைப்பில் அழகாக
  வானவேடிக்கையாக ஜொலிக்கிறது கட்டுரை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 8. கடினமாக உழைத்தால் பாலையையும் சோலையாக்கலாம்.இது தான் சிவகாசியில் நான் கற்ற பாடம்.
  .....
  நல்ல பாடத்தைதான் உங்க ஊர்ரு உங்களுக்கு கத்து தந்திருக்கிறாது. எங்கள் தீபாவளி மகிழ்ச்சியின் பின்னால் உங்க ஊர் சோகம் இருக்குறதா பட்டாசு கொளுத்தும்போது நினைவுக்கு வரும். அதனால் கடந்த ஐந்து வருசமா பட்டாசை கொளுத்துறதில்லை சகோ

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் இருக்காதீங்க.நல்லா பட்டாசு கொளுத்துங்க அப்பதான் எங்க பொழப்பு ஓடும்.

   தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 9. நண்பரே,

  தங்கள் மண்ணைப் பற்றிய சுருக்கமான, ஆனால் அழுத்தமான பதிவு.

  ஸ்ரீ....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..