அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

அன்பே வருவாயா ?

11 comments
அன்பே வருவாயா ?
அன்பே வருவாயா ?
உன்னைப் பார்த்த நொடியில்
என்னைத் தொலைத்தேனடி
உன் விரல்களின் இடையில்
என் விரல் கோர்த்தேனடி
நீயில்லா நானுமே
நீரில்லா மேகமே
மழை தூவும் வானமே
காதல் மழை பொழிவாயா?

இரவில்லா வானத்தில்
குயில்பாடும் கானத்தில்
காலைப்பனி நனைந்தேனடி
காதல்சுகம் கண்டேனடி

இரவெல்லாம் நீண்டிருக்க
கனவெல்லாம் காத்திருக்க
கனியே நீ வருவாயா?
காதல்சுகம் தருவாயா?

வழியெல்லாம் விழிவைத்து
விழிக்குள்ளே உன்னை வைத்து
உனக்காக காத்திருப்பேன்
பூவாக பூத்திருப்பேன்

சொல்லாத சொல்லெடுத்து
குத்தாத முள்ளெடுத்து
மணமாலை நான் செய்து
மணமாற சூட்டுவேன்.

11 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..