அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

போய்வா 2011

1 comment
தூக்கம் கலைந்து
துயிழெழும் நேரம் வந்த
கனவினைப் போல
கடந்து சென்றாயே!
பல கனவுகள்
பல சபதங்களுடன்
உன்னை தொடர ஆரம்பித்தேன்!

என்னோடு நீயிருந்த 
365 நாட்களில்
இன்பத்தில் சிலநேரம்
துன்பத்தில் சிலநேரம்
ஏற்றத்தில் சிலகாலம்
இறக்கத்தில் பலகாலம்
அடடா என்னே
நீ கொடுத்த அனுபவம்!

கனத்த இதயத்துடன் சில கணங்கள்
இறகைப்போலே  சில கணங்கள்
கண்ணீருடன் சில நேரம்
கவிதையுடன் சில நேரம்
சொல்லிய வார்த்தைகள்
சொல்லாமல் சென்றவர்கள்
திரும்பிப் பாக்கையில்
எத்தனை பதிவுகள்
என் பதிவேட்டில்!
ஓடிக்கொண்டே இருந்துவிட்டாய்.

இந்த 365 நாட்கள்
என் காதேரம், கனவுகள்,
தனிமை, கவிதை
கண்ணீர் என
என்னோடு இருந்தாய்!
இப்போது செல்லப் போகிறாய்!
மீண்டு வரமுடியாத
இடத்திலிருந்து வந்து
திரும்பிபெற முடியாதவற்றை
தந்துவிட்டு செல்கிறாய்!
உன் காலடி தடம்
என் நெஞ்சில் மாறா இரனமாய்இருக்க
என்னை விட்டு செல்கிறாய்!
பரவாயில்லை!
போய்வா நண்பனே!
போய்வா 2011!!

1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

அவள்

2 comments
காம்பின்மேல் வரைந்த
அற்புத ஓவியம் மலர்,
பூமியின் மேல் மலர்ந்த
அற்புத மலர் அவள்!


2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

நியாயமா?

No comments
ஒவ்வொருமுறையும் உன்னை
பெண்ணாக படைக்கிறான் கடவுள்,
ஒவ்வொருமுறையும் உன்னை
தேவதை ஆக்குகிறேன் நான்,
நீயோ கடவுளை வணங்குகிறாய்
என்னை முறைக்கிறாய்
இது நியாயமா?


No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

காதலின் வலி

No comments
காதலின் சின்னம் ரோஜா என்பதற்காக
நான் கொடுக்கும் செம்பருத்தியை மறுக்காதே!

காதலின் பரிசு நிலவு என்பதற்காக
நான் கொடுக்கும் கைகுட்டையை மறுக்காதே!

காதலின் நிறம் சிகப்பு  என்பதற்காக
என் உடலை கிழிக்கச் சொல்லாதே!

காதலின் பார்வை குருடு என்பதற்காக
என்னைப்பார்த்து கண்களை மூடிக்கொள்ளாதே!

காதலுக்கான இடம் இதயம் என்பதற்காக
என் இதயத்தை கிழிக்காதே!

காதலின் மொழி மெளனம் என்பதற்காக
என்னிடம் பேசாமல் கொல்லாதே!

காதல்வெறும் சொல்  என்பதற்காக
உன்காதலை சொல்லாமல் கொல்லாதே!
No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

சொல்லாத பார்வைகள்

1 comment
உருகும் மெழுகோ இங்கிருக்க
எரியும் தீயோ அங்கிருக்க
உன் சொல்லாத பார்வைகள்
என்னை உருக்கிச் செல்லுதே
உன் கொல்கின்ற மெளனங்கள்
என்னை சுழட்டிச் செல்லுதே!

சாலையோரம் வீற்றிருக்கிறேன்
காதல்வருமென காத்திருக்கிறேன்
காற்றினூடே கலந்திருக்கிறேன்,
உன்வாசம் வருமென காத்திருக்கிறேன்
என்ஒற்றை ரோஜா
உனக்காகத்தான்!
என் ஏங்கும் இதயமும்
உனக்காகத்தான்!
இந்த காத்திருப்பும்
உனக்காகத்தான்!

காலை நிலவே வருவாயா
காதல் ஏக்கம் தனிப்பாயா
நிலவே நிலவே வருவாயா
உன் புன்னகைகொஞ்சம் தருவாயா
இசையே நீயும் வருவாயா
என் மனதைகொஞ்சம் கரைப்பாயா
பனியே பனியே களைவாயோ
அவளின் கனிமுகம் அருள்வாயா
1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

நான்

No comments
விந்தை எடுத்து
அண்டத்தில் குழைத்து
இருட்டில் வரைந்த
ஓவியம் நான்!
மண்ணில் விழுந்து
விண்ணை இடித்து
ஓங்கி வளர்ந்த
கற்பகவிருட்சம் நான்!
சொல்லை எடுத்து
தேனில் குழைத்து
காற்றில் எழுதிய
கவிதை நான்!

சொல்லை தாண்டிய சொல்லும் நான்
கற்பனைக்கு எட்டாத கற்பனை நான்
இருளில் கலந்த இருளும் நான்
ஒளியை தாண்டிய ஒளியும் நான்
தாகத்தில் கலந்த தண்ணீர் நான்
பசியில் கலந்த வறுமை நான்

காக்கை சிறகினில் நான்
குயிலின் குரலில் நான்
குளிர்ந்ததென்றல் காற்றும் நான்
கடும் பாலை நிலமும் நான்
எல்லைகடந்த எல்லை நான்

மூச்சும் நான்
சுவாசம் நான்
மண்ணும் நான்
விண்ணும் நான்
கண்டதும் நான்
காணபோவதும் நான்
தெடுவதும் நான்
தெடுபொருளும் நான்
உண்மை நான்
உயிரும் நான்
நானும் நான்
நீயும் நான்

அண்டம் அதிர
பிண்டம் குலுங்க
உலகை படைத்த
கடவுளும் நான்!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

படங்களும் சில கிறுக்கல்களும்

No comments
விழியின் இருகரைகளிலும்
கண்ணீர் வெள்ளம்
பயம்கரையை கடப்பது எப்போது?


 மனம்கனந்த நிலையில்
மரத்தின் மடியில்!
இலையுதிர்காலம் போல்
சோகம்யுதிர்காலம் வராதோ!

 எவ்வளவு எரித்தும்
சாம்பலாகாத பெண்கொடுமை
இன்னும் எவ்வளவுகாலம்
பார்வையால் எரிக்கவேண்டுமோ?

 அடிவயிற்றிலோ ஆனந்தம்
மேலேமனதிலோ சோகம்
என்னேஇந்த இருதலைகொள்ளி வாழ்க்கை!


 சோகங்களை எவ்வளவு நாள்தான்
ஆற்றங்கரைகளில் கரைப்பது? வாழ்க்கையை கரைக்க நினைப்பவர்களின்
கடைசிவாசத்தலம் ஆலமர நிழல்.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

புதுகாதல் ஜோடி

No comments
இருஜோடி கால்தடங்கள்
கடற்பரப்பில் கால்பதிக்க
மேலும் ஒருகாதலை
பதிந்துகொண்டால் கடல்அன்னை!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

முல்லை பெரியாறு

3 comments
அணையில் விழவேண்டிய விரிசல்
இப்போது மக்கள் மனதில்
நீர்கசிய வேண்டிய இடத்தில்
இரத்தம் கசிகிறது!

3 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கடற்கரை

No comments
அலைக்கும் கரைக்கும்
இடையேயான காதல்விளையாட்டு!
யாரும் இல்லாதபோதும்
தொடர்கிறது தொட்டுவிளையாட்டு!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கண்ணீர்! தண்ணீர்!

2 comments
இனம் வேண்டாம்
மொழி வேண்டாம்
மதம் வேண்டாம்
எல்லாம் கடந்த அன்பு வேண்டும்

ஈசல் கூட அரைநொடி ஆயுலில்
அற்புதமாய் வாழ்கிறதே!
வரலாறாய் வாழும் மானிடா
ஏன் இந்த போராட்டம்?
ஏன் இந்த சண்டை?
தாய்மொழியென்று மார்தட்டும் நீ
அன்பின் மொழி மறந்ததென்ன?
என்னுடன் பிறந்தவர்கள் மட்டுமல்ல
பக்கத்து மாநிலத்தில் பிறந்த
நீ கூட என் சகோதரன்தான் என்று
தேசியகீதம் பாடும்போது
உறுதிமொழி கூறினேனடா.

உன்னை திட்டகூட மனம் வரவில்லை
ஆனால் நீ வெட்ட வருகிறாய்
கண்ணீர் வருகிறது, சிறு
தண்ணீருக்காக என்னை அடிக்கும்போது
உனக்கும் எனக்கும் இடையில்
ஆயிரம் தடுப்புகள் இருந்தாலும்
என்மனம் உன்னை நினைத்து அழுகிறது.

நான் கேட்பது தண்ணீர்
நீ கொடுப்பதோ கண்ணீர் ,பரவாயில்லை
என் கல்லறை மேல்
உன்மாளிகை கம்பீரமாய் எழும்பட்டும்
அப்போதும் சொல்வேன்
இவ்வுலகில் பிறந்தயாவரும்
என் உடன்பிறந்தோரென்று!!

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

உனக்காக தான்

No comments
அணைப்பதற்கு கைகள்
அழுவதற்கு கண்கள்
சாய்ந்துகொள்ள ஒரு மடி
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டும் அல்ல
உயிரையும் கொடுப்பேன்.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

காதல் கசியும் நேரம்

2 comments
அழகான மாலைநேரம்
அந்திசாயும் மாலைநேரம்
இரவே நுழைந்தாயோ
பகலே மறைந்தாயோ

என்னுள் ஏதோ மாற்றம்
சிறு மின்னலின் தோற்றம்
மனதே கரைந்தாயோ
ஈரம் கசிந்தாயோ

வானம் முழுக்க வண்ணமாற்றம்
எந்தன் வானில் அவளின் தோற்றம்
நிலவே வந்தாயோ
காதல் சொன்னாயோ

எந்தன் உணர்வு விளிம்புகளில் சிறுமாற்றம்
எந்தன் உடல் முழுதும் சிறுஏக்கம்
மனமே அழுதாயோ
அவளை நினைத்தாயோ

காதல் உணர்வுகளில் நான் திளைக்க
அவளைபற்றி என் உடல் நினைக்க
தூக்கம் வாராதோ
ஏக்கம் குறையாதோ

என் ஏக்கம் இங்கிருக்க
அவளின் ஏக்கம் அங்கிருக்க
கனவே வருவாயோ
தூரம் குறைப்பாயோ

இரவே முடியாதே!
பகலே வாராதே!
இரவே முடியாதே!
பகலே வாராதே!

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

உயிர் நண்பனே

No comments
எங்கோ பிறந்தோமடா
எங்கோ வளர்ந்தோமடா
வாழ்க்கையின் ஓட்டத்தில்
நண்பர்கள் ஆனோமடா

இன்பத்தில் இனித்தாய்
துன்பத்தில் அணைத்தாய்
என்னை எனக்கே
அடையாளம் காட்டினாய்

என் உதட்டின் வழியே நீ சிரிக்க
உன் கண்ணின் வழியே நான் அழ
உயிருக்கு உயிராய் ஆனாயடா

வறண்ட என் வானத்தில்
தேன் மழை பொழிந்தாயடா
சாறற்ற என் வாழ்க்கையில்
பின்னணி இசை ஆனாயடா
பெற்றோரை மறந்து
உடன் பிறந்தவர்களை மறந்து
நீயே என்வாழ்க்கை
என்று ஆனாயடா

சின்ன சண்டைகள்
சில்மிஷ சேட்டைகள்
ஒற்றைச் சட்டை
ஒரே படுக்கை
மொட்டை மாடி
தேனிர் விடுதி
குட்டிச்சுவரு
கோவில் சாலை
என வாழ்க்கையை
கரைத்தோமடா

விதியென வாழ்க்கை
நண்பர்கள் ஆனோம்
சதியென வாழ்க்கை
பிறிந்து விட்டோம்
உடல் இங்கே
உயிர் அங்கே
இருட்டில் நான்
ஒளியில் நீ
என்குரல் கேட்கிறதா?
மீண்டும் வருவாயா?

அழவிடமாட்டேன் என்றாயடா?
இப்போது உனக்காக அழுகிறேனடா!
நிலவுக்கு காத்திருக்கும் இரவுபோல
உனக்காக காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்துவிடு
என் உயிர் நண்பனே!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

காத்திருப்பு

No comments
முள்ளில் பூத்த அழகே
என் சொல்லில் முளைத்த கனியே
இசையாய் காற்றாய்
இனிக்கும் தேனாய்
என் உயிரில் கலந்த உணர்வே!

உன்னை நினைக்கும் போது
என் உள்மூச்சும் எரியுதடி
விழிகள் மூடினாலும்
உன் பிம்பம் தெரியுதடி
உன் ஒவ்வொரு அசைவிலும்
என்னுள் மாற்றம் நிகழுதடி

காலம் சுருங்க
இடைவெளி அதிகரிக்க
உன் ஒவ்வொரு மொளனம்
என்னைக் கொல்லுதடி
என் ஆசை குழந்தையின்
அழுகுரல் கேட்கவில்லயா?
அது காதல் கேட்கிறது
நீ மொளனம் கொடுக்கிறாய்
விண்ணை நோக்கிய மண்ணாய்
உன்னை நோக்கி காத்திருக்கிறேன்
உன் காதலுக்காக!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

என் கேள்வி ?

No comments
கேள்வியொன்னு கேள்வியொன்னு
மண்டைக்குள்ள நிக்குது
அத கேக்கனும் நினைக்கும்போது
நெஞ்சுக்குள்ள விக்குது
வந்த இடமும் தெரியல
போகும் இடமும் தெரியல
நடுவுல நின்னுக்கிட்டு
நானும் கேள்வி கேக்குறேன்

கட்டிக் கட்டா புத்தகமுண்டு
கடன் வாங்கிய அறிவுமுண்டு
புத்திசாலினு பேருமுண்டு
நல்லவனா நடிப்பும் உண்டு
நடிக்கிறேனு தெரிஞ்சிருந்தும்
நடிக்காம இருந்ததில்ல
பிடிக்கலேனு தெரிஞ்சிருந்தும்
பிடிச்சமாறி நடிச்சதுண்டு

நண்பன் இருந்தாலும்
உண்மையாக நானுமில்ல
காதல் இருந்தாலும்
அன்பாக இருக்கவில்ல
உண்மை இருந்தாலும்
உண்மை சொல்லி பழக்கமில்ல
கடவுளே வந்தாலும்
பிச்சையெடுக்காத நாளில்ல

ஒன்னும் இல்லேநாளும்
கொழுப்புக்கு பஞ்சமில்ல
மண்ண தின்னாலும்
வெறிக்கு பஞ்சமில்ல
கட்டைல போனாலும்
சபலத்துக்கு பஞ்சமில்ல
நானும் சாகும்போது
ஊருக்குள்ள அழுவாரோ?
நல்லவன் போயிட்டானு
ஊருக்குள்ள சொல்வாரோ?
நானும் அத கேட்பேனோ?
சந்தோஷமா போவேனோ?


No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கடைசி காதல் கடிதம்

No comments
ஏ பெண்ணே!
உன்மீது நான்கொண்ட உணர்வு
ஓர் உண்மை!
அதற்காக இயற்கை கற்பழித்து
காதல்,அன்பு என்ற வார்த்தைகளின்
பின்னால் ஒளியவிருப்பமில்லை.
உன் பெண்மை
என் உணர்வை உணருமானால்
என்னை ஏற்றுக்கொள்
உன்மடியில் சாய்ந்து கொள்கிறேன்
இல்லை மண்ணில் வீழ்ந்துவிடுகிறேன்.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

இன்னொரு காலை

No comments
ஊர்ஓரம் அரசமரம்
மாமனுக்கு காத்திருந்தேன்
மாமனும் வரவில்ல
மனசும்தான் இயங்கவில்ல
மாமனும் வருவாரோ?
மனச கொஞ்சம் தருவாரோ?

ஒத்த மரத்தடியில்
ஒரு நேரம் காத்திருக்கேன்
நிக்க நிழலில்ல
நீதி சொல்ல ஆளில்ல
காலைல வந்தவ
கால் கடுக்க நிக்குறேன்
ஒத்த முகம்பாக்க
ஒத்த காலில் நிக்குறேன்
சொக்கன் முகம் பார்ப்பேனோ?
சொக்கிப் போய் நிப்பேனோ>

கருத்த உடம்புண்டு
இரும்பு போல கையுண்டு
வட்ட முகமுண்டு
லட்டுபோல கண்ணுண்டு
அழக சிரிப்பாரோ?
மல்லிகைப்பூ கொடுப்பாரோ?

மாமனுக்கு பிடிக்குமுனு
மடிநெறய சோளமும்
தாகம் எடுக்குமுனு
சட்டிநெறய மோரும்
கொண்டுவந்தேன்
மாமனும் வரல
மடிபாரமும் இறங்கல

நாளும் ஓடுதடி
பொழுதும் தேயுதடி
நாளும் ஏங்குறேன்
நாளுக்கு நாள் தேயுறேன்
தினமும் தூங்கையில
நெஞ்சுக்குள்ள அழுகுறேன்
இன்னைக்குப் பார்ப்பேன்னு
காலையில முழிக்குறேன்!No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

காலை கானம்

No comments
பாடும் பறவைகளே
எந்தன் பாடலை கேளுங்கள்
கூடும் மேகங்களே
எந்தன் கூக்குரல் கேளுங்கள்
ஒரு பாடல் நானும்பாட
அதைக்கேட்டு பூக்கள் பூக்க
இதுதானோ கானம் என்று
கதிரவனோ எட்டிப் பார்க்க
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!


காலைநேரப் பனித்துளி ஒன்று
புல்லின் மீது நடனமாட
சாலையோர பூக்கள் எல்லாம்
தலையசைத்து புன்னகை சிந்த
காற்றில் மிதக்கும் ஈரஅணுக்கள்
என்னுள்ளே உரசிச் செல்ல
இருண்டுகிடந்த என்மனக் காடோ
சற்றென்று பற்றிக் கொள்ள
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!


அழகான காலைப்பொழுதே
என் மெளனம் கலைத்தாயே
சொல்லாத உணர்வுகள் எல்லாம்
சொல்லி நீ சென்றாயே
சிறு மின்னல் காட்சிமூலம்
தேடிச்சென்ற ஞானம் எல்லாம்
சிறுபுல்லில் நானும் காண
எந்தன் வானில்
இன்பச் சூரியன்!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

நானா இப்படி?

No comments
என்னில் விழுந்தாய்
காதலாய் மாறினேன்

சொல்லில் விழுந்தாய்
கவியென மாறினேன்

கண்ணில் விழுந்தாய்
கருவிழி ஆகினேன்

சிப்பியில் விழுந்தாய்
முத்தென மாறினேன்

நிலவில் விழுந்தாய்
அழகென மாறினேன்

காற்றில் கலந்தாய்
சுவாசம் ஆகினேன்

பூவில் விழுந்தாய்
வாசம் ஆகினேன்

புவியில் விழுந்தாய்
 ஜீவன் ஆகினேன்

 துளியாய் விழுந்தாய்
கடலாய் மாறினேன்

உளியாய் விழுந்தாய்
சிலையாய் மாறினேன்

என்னை என்ன செய்தாய்
இப்படி மாறினேன்!!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

சொல்லாட்டு

No comments
செவ்வானம் பூப்பூக்க
கார் இருளோ கொடை விரிக்க
கண்ணே விழித்தாயோ
கன்னித்தமிழ் கேட்டாயோ!

அப்பன் வரும் வரையில்
எந்தனிமை நீ போக்க
சோககத நான் பாட
கண்மணியே கேட்பாயோ!

மன்னன் நாடாள
மாந்தோப்பில் குயில் பாட
மண்குடிசை இல்லாமல்
மரக்கிளையில் நீயாட
பண்ணெடுத்து நான் பாட
பைங்கிளியே கேட்டாயோ!

பலகாரம் இனிக்குமென்று
ஊருசனம் சொல்லயிலே
பலகாரம் என்னவென்று
பைங்கிளியே அறிவாயோ!

நெல் குத்தும்போது
நெல்ல கொஞ்சம் பார்த்ததுண்டு
நெல்லு சோறு என்னவென்று
பைங்கிளியே நான்றியேன்!

கட்டிக் கொள்ள துணியுனில்ல
ஒட்டிக் கொள்ள சுவருமில்ல
கோட மழ பெய்யயில
கண்மணியே என்ன செய்ய?

சட்டிக்குள்ள தண்ணியுண்டு
அத சுத்தி தவளையுண்டு
சட்டியில சோறு பொங்கி
நாளு ரொம்ப நாளாச்சி!

காலம் வருமென்று
சட்டி நிறையுமென்று
கன்னீரில் நான் பாட
கண்மணியே நனைந்தாயோ?

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

சாகாவரம்

No comments
இன்னதென உலகம்
இதுவென தறியாமல்
பண்ணிய பாவங்கள்
பெற்றதொரு குழந்தை
ஓழமிட்டு அழுக,

உச்சிதனை முகர்ந்து
நெற்றியில் முத்தமிட்டு
பாலூட்டி சீராட்ட,

விதைத்தநெல் முளைக்காமல்
பருவமழை பொய்த்துவிட
பெற்றகடன் தொட்டிலிலே
பட்டகடன் வாசலிலே,

பாதிமுகம் சிரிக்கையிலே
மீதிமுகம் கோணலிலே
பாவிமகள் பிறந்தாளென்று
பார்நிரப்ப வந்தாளென்று
ஊர்ப்பேச்சு கேட்கையிலே,

கள்ளி மடிபிடித்து
பால்மணம் மாறுமுன்னே
கள்ளிப்பால் கொடுத்தாயோ
கல்நெஞ்சன் ஆனாயோ
கட்டையிலே போகுமுன்னே
சாகாவரம் கேட்டாயோ?

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

காதல் விஞ்ஞானி

No comments
கணம் கணமாய் நினைக்கிறேன்
ஒவ்வொரு கணமும் தேய்கிறேன்
என் உள்ளே உள்ளே  போராட்டம்
ஓர் உள்ளிருப்பு போராட்டம்
என்மேல் படர்கிறாய் புசிக்கிறாய்
பாய்ந்து கொல்ல துடிக்கிறாய்

நீ பெண்ணா ? இல்லை
பேர் இன்பக்கடலா?
முள்ளா ? இல்லை
முள் தாங்கிய மலரா?
கனியா ? இல்லை
கனியூரும் இதழா?
அது கண்ணா?இல்லை
கருங்குழியா?

நீ பெண்ணா? இல்லை
அணுக்களின் மாயையா?
பண்ணா? இல்லை
இரைச்சலின் ஊர்வலமா?
அலை அலையாய்
அலைமேல் நுரையாய்
கரை வருகிறாய்
காதல் சொல்கிறாய்
தொடாமல் தொட்டுவிட்டு
தூரம் நின்று சிரிக்கிறாய்


உன் ஒற்றைப் பார்வையில்
என் குவாண்டம் எண்ணும் மாறுதே!
 நீ உற்றுப் பார்க்கையில்
என் எலக்ட்ரான் எல்லாம் தேயுதே!
என் ஒற்றைப் பிரபஞ்சம்
உன் சிற்றிடை பார்த்து
சுக்கு சுக்காய் நொறுங்குதே!
அணுக்களை தேடியவன்
அணு அணுவாய் சாகிறேன்.


No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

பாட்டாளி

No comments

சுட்டு விரல் இங்கே
சுட்டு பொருள் எங்கே
பட்டபாடு எஞ்சிருக்க
புசித்த வயிறு காஞ்சிருக்க
பண்ணையவன் பழுத்திருக்க
பனம் பழமோ தனித்திருக்க
கூடியவளுக்கோ கூழில்லை
கேட்பதற்கு நாதியில்லை
கேட்காத நாளில்லை
கேட்டவனோ முடமாக
கேட்பவனோ செவிடாக
பிரார்த்தனையோ பிணமாக
வறுமையோ வறுத்தெடுக்க
பொறுமையை செல்லறிக்க
வாழவும் வழியில்லை
சாகவும் வழியில்லை
வழியில்லா வாழ்க்கையில்
வழிதெரியா வழிப்போக்கனாய்
சிதைந்து கொண்டிருக்கிறான்!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

ரோஜா

No comments
பச்சைக் குச்சியின்மேல்
கட்டழகியின் நடனம்,
காட்சி நேரம்,
காலை முதல்
மாலை வரை!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

ஊடல்

No comments
குளிரின் மஞ்சத்தில்,
குளிர்காயும் நேரத்தில்,
இதமாய் பதமாய்,
இதழோடு இதழாக,
உயிரோடு உயிராக
ஒளிவீசினாய்!
காதல் சொன்னாய்,
கவிதை தந்தேன்,
கோபம் என்றாய்,
விலகி நின்றேன்,
வளைந்து நெழிந்தாய்,
வாரி அனைத்தேன்,
கண்ணில் சிரித்தாய்,
காதில் சொன்னேன்,
அன்பே கொல்லாதே!No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

அலைபேசி காதல்

No comments
சித்திரை பல்லழகி,
ஒய்யார நடையழகி,
சிலிர்க்கும் கூந்தலுடன்,
நீல வண்ண குழாயும்,
பச்சை வண்ண சொக்காயுடன்,
பூனநடை நடந்து கொண்டு,
சாய உதட்டின் வழியே
கண்ணே மணியே
கணியமுதே கற்கண்டே என்று
தாலாட்டிக் கொண்டிருந்தாள் அலைபேசியை!
காதலின் பரிசத்தை
ஊமையாய் குருடாய்
கேட்டுக்கொண்டிருந்தது அலைபேசி.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

எதிர் உலகம்

No comments
நேசிக்கும் போது யோசிக்க முடியவில்லை,
யோசிக்கும் போது நேசிக்க முடியவில்லை,
நேசிப்பவர்களோ வாசலில்,
 யோசிப்பவனோ வீட்டிற்குள்,
அன்போ அனாதையாக ஊர்சுற்ற,
அகங்காரமோ எஜமானனாக,
யோசிப்புக்கும் நேசிப்புக்கும் இடையில்
வாழ்க்கை கரைந்து கொண்டிருக்கிறது.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

அவள் வசம் நான்!!

No comments
அன்பே
உன்னை பார்த்த நாள் முதல் என் இதயம் ,
உன் சேலையில் ஒட்டுப்புல்லாய் ஒட்டிக்கொண்டது!
திருப்பி தருவாயா?
என் வசம் இருந்த நான் இப்போது உன்வசம்!
திருப்பி தருவாயா என்னை?
நீ சிரித்தது முதல் எனக்குள் போராட்டம்,
மேலும் என்ன செய்ய காத்திருக்கிறாய்?
நீ அடித்து விளையாட
என் இதயம் ஒன்றும் கோவில் மணியல்ல.
வலிக்கிறது இதயம்
அடிப்பது நீ என்பதால் இனிக்கிறது.
நீ வலியா இல்லை வாழ்க்கையா??

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

செறுக்கு

1 comment
செறுக்குடன் சிரிக்கிறாள்
நிலா பெண்,
தன்னுடன் போட்டியிட்ட காதலிகள் எல்லாம்
கிழவிகள் ஆகுவதை கண்டு!

1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

மயங்கொலிப் பிழை

No comments
அழகான மாலை நேரம்,
நீண்ட ஓடை,
அழகான மாலை நிலா,
அருமையான காற்று,
அழகான காதலன்,
காதலியோ தூங்கிக்கொண்டு இருக்கிறாள்,
வாழ்க்கையோ கரைந்து கொண்டு இருக்கிறது.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

வெங்காய பாசம்

No comments
மனைவியின் அழுகையை நிறுத்த
ஆயிரம் சமாதானம் சொன்னான் கணவன்.
அவளோ விடாமல் அழுது கொண்டிருந்தால்.
கடைசியில் அவனும் அழ ஆரம்பித்தான், 
இதைப்பார்த்து அம்மா சொன்னாள்
வெங்காயம் நறுக்கியது போதுமென்று!

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

குழந்தையும் பொம்மையும்

No comments

நம்மை பொறுத்தவரை பொம்மைகளுக்கு உயிர் இல்லைதான்.ஆனால் ஒரு குழந்தை பொம்மையுடன் விளையாடுவதை பார்த்தால் அது தவறு என்பது புரியும்.அந்த குழந்தை பொம்மையுடன் பேசும்,சிரிக்கும்,அழும்,தான் சாப்பிடும் சாப்பாட்டை ஊட்ட முயற்சி செய்யும்,அதற்கு ஆடை அணிவிக்கும்.பொம்மை பேசாதுதான்.ஆனாலும் நாள் முழுவதும் விளையாடும்.அதற்கு யாரும் தேவை இல்லை.இரவில் அதனுடனே தூங்கும்.உண்மையில் எல்லா குழ்ந்தைகளும் கடவுள் தான்.அவர்கள் உயிரற்ற பொம்மைகளுக்கு உயிர்கொடுப்பதனால்.ஆனால் வளர்ந்தவுடன் அதே குழந்தை தன் கடவுள் தன்மையை தொலைத்துவிட்டு மனிதனாகி தான் தொலைத்த கடவுளை தேடி தேடி நொந்து சாகிறது.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கதைகேட்டு நீதி சொல்லுங்கள் - 2

No comments
ஒரு நாள் கடவுள் பூமிக்கு வர ஆசைப்பட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார்?வெளியே வந்த ஆளிடம் நான் தான் கடவுள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்?வீட்டுக்காரர் மிகுந்த கடுப்புடன் இவ்வாறு கூறினார் "முன்பு எல்லாம் கடவுளின் பெயரைச் சொல்லி பிச்சையெடுத்தீர்கள்!இப்போ கடவுள் என்று கூறி பிச்சையெடுக்க ஆரம்பித்து விட்டீர்களா? என்று சீறினார்.கோபம் கொண்ட கடவுள் கீழி இறங்கி ரோட்டில் நடக்க ஆரம்பித்தார்.வழியில் அவர் இரு குடிகார குடிமகன்களிடம் நான் தான் கடவுள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்?அதற்கு ஒருவன் சரிதான் போ நாங்கள் யார் என்று நினைத்தாய்? நான் யேசு!இவன் முகமது!என்று கூறினான்.நொந்தே போய்விட்டார் கடவுள்!!


இதன் நீதி : ?????

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

கதைகேட்டு நீதி சொல்லுங்கள் - 1

No comments
ஒரு காட்டில் வாழ்ந்த சிங்கம் ஒன்றுக்கு தீடிரென ஒரு சந்தேகம் வந்தது.காட்டில் யார் பல சாலி என்று?உடனே அது ஒரு எலியிடம் சென்று கர்ஜனையுடன் கேட்டது உடனே அது ராஜா உங்களைவிட காட்டில் யாரும் பலசாலி உண்டா என திருப்பிக்கேட்டது?இதனால் சந்தோஷம் அடைந்த சிங்கம் இன்னும் சற்று கம்பீரத்துடனும்,கர்ஜனையுடன் அந்த பக்கம் வந்த மானைக் கேட்டது.மானும் பயத்துடன் ராஜா உங்களைவிட காட்டில் யாரும் பலசாலி உண்டா என்றது.இவ்வாறாக எதிர்ப்பட்ட மிருகங்களை எல்லாம் கேட்டது.ஒரே பதில் எல்லாரிடம் இருந்து வந்தது.அந்த நேரத்தில் யானை ஒன்று அந்த பக்கம் வந்தது.அதைப் பார்த்த சிங்கம் மிகுந்த அலட்சியத்துடனும்,கர்வத்துடனும் ஏ யானையே ! இந்த காட்டில் நான் தான் பலசாலி என்பதை ஒப்புக்கொள்கிறாயா என்றது?யானை சட்டைசெய்யாமல் நடந்தது.கோபம் அடைந்த சிங்கம் முட்டாள் யானையே பதில் சொல்கிறாயா இல்லையா என்று சீரிக்கொண்டே யானையை நோக்கி சென்றது.யானை சற்றும் அசராமல் சிங்கத்தின் வாலைப்பிடித்து தலைக்குமேல் இரண்டு சுற்று சுற்றி தரையில் ஒருஅடி அடித்து தூக்கி எறிந்தது.எழுத்து நின்ற சிங்கம் என்ன கூறிவிட்டேன் என்று இப்படி கோபப்படுகிறான் என்று புலம்பிக் கொண்டே நடையை கட்டியது.


இதன் நீதி : ?????

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

miracle Antimatter!!

No comments(matter) பருப்பொருள்.நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருள்களும் அடிப்படையில் பருப்பொருளால் உருவாக்கப் பட்டவை.ஏன் நாமே அடிப்படையில் பருப்பொருளில் இருந்து வந்தவர்கள்தான்.பருப்பொருள் ஒரு பொருளுக்கு வடிவம் மற்றும் நிறையை கொடுக்கிறது.ஒவ்வொரு பொருளின் அடிப்படை அணுக்கள்(atoms).அணுக்களின் அடிப்படை துகள்கள்(புரோட்டான்,எலெக்ட்ரான்,நியூட்ரான்).இவை எல்லாவற்றிற்கும் நிறை(mass) இருக்கிறது.இவை எல்லாம் பருப்பொருள்(matter) தான்.புரோட்டான் ஒர் பருப்பொருள்(matter) .எலெக்ட்ரான் ஒர் பருப்பொருள்(matter).அணுக்களின் அடிப்படை துகள்கள் எல்லாம் ஒர் பருப்பொருள்கள்தான்(matter).

அணுக்களின் அடிப்படை துகள்கள் எல்லாவற்றிற்கும் நிறை,மின்னூட்டம்,தற்சுழற்சி என தனித்தன்மைகள் இருக்கின்றன.புரோட்டான் அதிக நிறை,நேர் மின்னூட்டம் கொண்டது,நியூட்ரானும் அதிக நிறை ஆனால் மின்னூட்டம் அற்றது.எலெக்ட்ரான் குறைந்த நிறை,எதிர் மின்னூட்டம் கொண்டது.(antimatter)எதிர்பருப்பொருள்.இதுவும் பருப்பொருள்(matter) போன்றது ஆனால் எதிர் மின்னூட்டம் கொண்டது.

எலெக்ட்ரான் ஒர் பருப்பொருள்(matter) அதன் எதிர்பருப்பொருள்(antimatter) பாசிட்ரான்.
எலெக்ட்ரானும் பாசிட்ரானும் ஒரே நிறை,ஒரே தற்சுழற்சி.ஆனால் எலெக்ட்ரான் எதிர் மின்னூட்டம் கொண்டது.பாசிட்ரான் நேர் மின்னூட்டம் கொண்டது.

புரோட்டான் நேர் மின்னூட்டம் கொண்டது அதன் எதிர்பருப்பொருள்(antimatter) நெகட்ரான் எதிர் மின்னூட்டம் கொண்டது.

இப்போது ஒரு ஆச்சர்யம் நியூட்ரான் மின்னூட்டம் அற்றது.ஆனால் அதற்கும் எதிர் பருப்பொருள் உள்ளது.ஏனென்றால் நியூட்ரானின் அடிப்படை துகள்களான குவார்க்குகளுக்கு மின்னூட்டம் உண்டு.ஒவ்வொரு அணுவுக்கும் எதி அணுவுண்டு

உதாரணமாக :
ஹட்ரஜனுக்கு ஒர் புரோட்டானும்,ஒர் எலெக்ட்ரானும் உண்டு.ஆனால் எதிர் ஹட்ரஜனுக்கு ஒர் நெகட்ரான்,ஒர் பாசிட்ரான் உண்டு.

ஆமா எலெக்ட்ரானும் ,பாசிட்ரானும் சந்திச்சா?,ஹட்ரஜனும் ,எதிர் ஹட்ரஜனுக்கு சந்திச்சா?
முழு ஆற்றலும் வெளியாகி அழிந்துவிடும்.

சாதாரணமான
வேதிவினைகளில் நாம் பில்லியனில் ஒரு பங்கைதான் ஆற்றலாக பெருகிறோம்.கரித்துண்டை எரித்தால் பில்லியனில் ஒரு பங்கைதான் ஆற்றலாக பெறமுடியும் மீதாம் சாம்பலாக மாறும்.

அணுக்கரு வினைகளில்(nuclear reaction) நூறில் ஒர் சதவீதம் தான் ஆற்றலாக பெறமுடியும் மீதம் அணுக்கதிர் வீச்சு இன்னபிறகழிவுகள் கிடைக்கும்.

ஆனால் ஹட்ரஜனும்,எதிர் ஹட்ரஜனும் அல்லது எலெக்ட்ரானும் ,பாசிட்ரானும் சந்தித்தால் 100 சதவீத ஆற்றல் குறிப்பாக அணுக்கதிர் வீச்சு இன்னபிறகழிவுகள் எதுவும் கிடையாது.

angels and demons படம் பார்த்தா இப்போ உங்களுக்கு புரியும்.அதுல (antimatter) குண்டு தான் கதையின் கரு.
பூமியில் எங்கும் எதிர்பருப்பொருள்(antimatter) கிடையாது.அப்படி இருந்தாலும் உடனே அழிந்துவிடும்.ஆனால் பிரபச்சத்தில் எதிர் ஹட்ரஜனால் ஆன பூமி இருக்கலாம்.நாம் தவறிப் போய் அங்கே நுழைய நினைத்தால் அவ்ளோதான்.angels and demons படம் பார்த்தா அதில் 'CERN' போன்ற ஆய்வுகூடத்தில் தான் இதை உருவாக்கமுடியும் என்பதை காட்டி இருப்பார்கள்.சும்மா ஒரு கைப்பிடி எதிர் ஹட்ரஜன் எடுத்து அப்பிடியே ஒரு தூவு
தூவினா பூமி அவ்ளோதான்.அப்புறம் டண்டனக்காதான்.யாராவது வேற்றுகிரகத்தில் இருந்து வந்தா பல்ல காட்டி கைய கொடுத்துடாதிங்க.அப்புறம் டண்டனக்காதான்.http://www.blogger.com/img/blank.gif
http://www.blogger.com/img/blank.gif

அணு குண்டு எல்லாம் நம்ம தாத்த காலத்து டெக்னிக்.இப்போ எல்லாம் (antimatter) குண்டு தான் latest.பயந்துராதிங்க அப்படியெல்லாம் நடக்காது ஏனா அதுக்கு ரொம்ப ரொம்ப பெரிய ஆற்றல் வாய்ந்த ஆய்வுகூடம் தேவை.ஆனால் (antimatter) தான் நம் எரிபொருள் http://www.blogger.com/img/blank.gifதேவையை நிறைவு செய்யும்.

மேலும் படிக்க

Antimatter

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

what is function in maths?

No commentsஅது என்னய்யா function? கணக்கு வாத்தியார் போர்டுல எழுதுவாரே ஒரு வார்த்தை யாருக்கும் தெரியாது ஆனா ஒரு பத்து பன்னிரென்டுவேர் மட்டும் வேகமா தலையாடுவாங்க?வாத்தியார் கிட்டகேட்டா இன்னும் புரியாத பாசைல சொல்லி நம்ல கொன்னுடுவாரு.சரி விசயத்துகு வருவோம்.நான் எப்படி படிப்பேனோ அப்படியே சொல்லிதர முயற்சி செய்றேன் .முதல் என்ன செய்யனும்னா functionக்கு அர்த்தம் பார்க்கனும்.functionக்கு தமிழ் அர்த்தம் நிகழ்வு.அப்படினா ஏதாவது ஒன்று குறிப்பிட்ட இடத்தில் அல்லது குறிப்பிட்ட பொருளின் மேல் ஏதாவது நடந்தா அது ஒரு நிகழ்வு.அட சும்மா சொன்னா ஏதாவது நடக்கனும்பா!! (marriage function,birthday function etc)இப்போ மேல படத்த பாருங்க அந்த பெரிய f இருக்கே அது மாரிதான் function ன குறிப்பிடனுமாம்.இத function of x னு சொல்லனும்.அப்படினா எதாவது x ல நடக்கனும்னு அர்த்தம்.ஏதாவதுனா என்ன அர்த்தம்னா x ஓட ஒன்ன கூட்டலாம்(x+1) .அதனால x ன் மேல் கூட்டல் நிகழ்வு நடக்கிறது.

y = f(x) னா என்ன அர்த்தம்.ரொம்ப ஈசி தான்.y மதிப்பு x ன் மேல் நடக்கும் நிகழ்வுகளுக்கு சமம்.

கவனிக்க y = x னா y மதிப்பு x மதிப்புக்கு சமம்.
y = f(x) னா y மதிப்பு x ன் மேல் நடக்கும் நிகழ்வுகளுக்கு சமம்.

அட சும்மா x ஏதாவது பன்னுங்கபா கூட்டுங்க,கழிங்க,பெருக்குங்க இல்ல விளக்கமாறால அடிச்சு அதன் மதிப்பு மாறுனா அதுவும் function தான் பா!!

உதாரணம்

f(x) = (x+1)(x*X)

f(x) = (x+1)/(x*X)

f(x) = (x)/m

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

ஏன் அழுகிறாய்?

No comments
அழுகை வந்தால்
இப்போதே அழுதுவிடு முழுவதுமாக
இதற்கு முன் ஒருமுறை அழுதாய்
பிறக்கும் போது,
இப்போதும் அழுகிறாய்,
ஏன் அழுகிறாய்?
எதற்கு அழுகிறாய்?
யாருக்காக அழுகிறாய்?
இங்கே உன் கூக்குரல்
கேட்க ஆளில்லை,
நேரமும் இல்லை,
நீ பார்த்த முகங்கள்
எல்லாம் மகமுடிகள்
என்பதை ஏன் சிந்திக்கவில்லை?
உன் கண்கள் ஏன்
உண்மையை பார்க்கும் திறனிழந்துவிட்டன?
எங்கே உன் நிமிர்ந்த நடை எங்கே?
நேர் கொண்ட பார்வை எங்கே?
யாருக்கும் அச்சாத பார்வை எங்கே?
உற்றுப்பார் எல்லாம் மூலையில்
உட்கார்ந்து ஓலமிடுகின்றன.
நேற்று சிரித்தாய்
இன்று அழுகின்றாய்
நாளை அழுவார்கள்
பொய் வேடதாரிகள்
நல்லவன் என்று!
உன்னையே கேட்டுப்பார்
ஏன் பிறந்தாய்?
எதற்காக உழைக்கிறாய்?
யாருக்காக உழைக்கிறாய்?
என்ன செய்யப்போகிறாய்?
சுயநலன் இல்லாத
உறவும் இல்லை,
பொதுநலன் கொண்ட
உழைப்பும் இல்லாத
உலகம் இது!
இதற்காகவா அழுகிறாய்?
யாருக்கும் உழைக்கப் பிறக்கவில்லை?
யாருக்கும் அடிமையும் இல்லை.
நீ பிறந்தது சாதிக்க!
இடைப்பட்ட காலத்தில்
ஏன் இந்த மயக்கம்?
ஏன் இந்த தயக்கம்?
ஏன் இந்த அழுகை?
ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?
எது இன்று உன்னுடயதோ,
அது நாளை மற்றொருவருடையாகிறது,
மற்றொரு நாள் அது வேறொருவடையதாகிறது,
இந்த மாற்றம் உலக நியதியாகும்,
என்ற மாறாத கீதை பிறந்த மண்ணில்
பிறந்தா அழுகிறாய்?

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

யாரடி நீ ?

No comments
யாரடி நீ
எங்கிருந்து வந்தாய்
ஏதேதோ பேசினாய்
என் இரவுகளை திருடிக்கொண்டாய்
கனவுகளை ஆக்கிரமித்தாய்
நேரங்களை உன் பிம்பமாக்கினாய்
எண்ணங்களில் கலந்துரையாடினாய்
கல்லாய் இருந்த என்னை
காதல் ரசம் பருக வைத்து
காதல் பித்தம் தெளியுமுன்னே
கானல் நீராய் பறந்து சென்றாய்
இறுதியில் என்னையும்
காதல்வரிகளை கிறுக்கவைத்து
காதலாய் வந்து
கவிதையாய் மறைந்து விட்டாய்.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

பீனிக்ஸ்

No comments
உலக வரை படத்தில் அது ஒரு தீவுக் கூட்டம்.எப்போதும் துன்பங்களையும் சவால்களையும் மட்டும் எதிர் நோக்கி ஒடிக்கொண்டிருக்கும் ஒர் நீரோடை.தான் செய்வது சரி என பட்டால் மலையுடனும் மோத தாயாராகியவர்கள்.இதற்காகவே இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீசி சாம்பாலாக்கினர்.சற்றும் மனம் தளராமல் சாம்பலிலும் சரித்திரம் உருவாக்காலாம் என்று நிருபித்தவர்கள்.மண்வளம் இல்லை ஆனாலும் மண்ணை கடன் வாங்கி கப்பலில் விவசாயம் செய்தவர்கள்.தான் படும் கஷ்டத்தை மற்றவர்கள் பட கூடாது என சுனாமி எச்சரிக்கை மையம் அமைத்து பல நாடுகளை காப்பாற்றியவர்கள்.90 விழுக்காடு இறக்குமதியை மட்டும் வாழும் கனிவளம் இல்லாத ஓர் அப்பாவியான நாடு.தான் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் தனி முத்திரை படைத்து "மனித வளம்" தான் எல்லாவற்றிலும் தலை சிறந்த வளம் என நிருபித்தவர்கள்.உலகின் அதிவேக ரயிலை கண்டுபிடித்தவர்கள் அதனால் தான் என்னவோ சாம்பாலாகி பத்தே வருடங்களில் உலக பொருளாதாரத்தின் உச்சத்தை அடைந்து உலக வல்லரசானது.எல்லோரும் வான்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் காலத்தில் வான்வெளிக்கு லிப்ட் வசதி யேசனை சொன்னவர்கள்.இன்றும் எந்தவித பூகம்பம் வந்தாலும் அதை தாங்கும் வசதியுடன் நவீன கட்டமைப்பு வசதி கொண்ட நாடு அது மட்டும் தான்.
இன்று நிலநடுக்கம்,சுனாமி,அணுவுலை வெடிப்பு என இவற்றின் இடையில் ஒரு சாதாரண வயதான பெண்மணி டீவி ஒன்றிற்கு தரும் பேட்டி"நாங்கள் வயதானவர்கள் சேர்ந்து நகரத்தை மறுசீரமைத்து வருகிறோம்".அது தான் "ஜப்பான்" "யாரையும் நம்பி நாங்கள் இல்லை எங்களை நாங்களே காத்து கொள்வோம்" என்று ஒவ்வொரு முறையும் வரலாற்றின் பக்கங்களை திருப்பி எழுதவைத்தவர்கள்.சாமுராய்கள் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் ஒரு வாசகம் "யாரும் இல்லை என்று நினைக்காதே!நீ இருக்கிறாய் மறந்துவிடாதே கடைசி துளி உள்ளவரை போராடு" உண்மையில் ஜப்பானில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஒரு சாமுராய் தான்!."வெறும் சாம்பலில் இருந்து சாம்ராச்சியம் படைக்கலாம் இது தான் ஜப்பான் உலகத்தில் உள்ள அனைவருக்கும் சொல்லும் பாடம்.ஜப்பான் தான் உண்மையான பீனிக்ஸ்.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

இடைவெளி

No comments
இரு மூச்சுக்கு இடைப்பட்ட இடைவெளி
வாழ்க்கை,
இரு நபர்களுக்கு இடைப்பட்ட இடைவெளி
சுதந்திரம்,
இரு வார்தைகளுக்கு இடைப்பட்ட இடைவெளி
அர்த்தம்,
மனதுக்கும் உடலுக்கும் இடைப்பட்ட இடைவெளி
குழப்பம்,
தோல்விக்கும் வெற்றிக்கும் இடைப்பட்ட இடைவெளி
தன்னம்பிக்கை,
இடைவெளிக்கும் இடைவெளிக்கும் இடைப்பட்ட இடைவெளி
பிரபஞ்சம்,

இடைவெளி அது தான் கடவுள்
ஒளிந்துள்ள இடம்.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..