எல்லாம் இழந்தவன்
Marc
7:35 PM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
poem about life
,
poems
,
tamil kavithai
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
வாழ்க்கை கவிதைகள்
10 comments
![]() |
| எல்லாம் இழந்தவன் |
தேடி தேடி வாழ்கிறேன்
பிறையில்லா வானில் ஒளி
தேடி தேடி பறக்கிறேன்
வழி சொல்வார் யாருமில்லை
ஒளி தருபார் யாருமில்லை
குருடன் கையில் விளக்காய்
பயனில்லா வாழ்க்கை வாழ்கிறேன்
அழகான வீடிது
விளையாட ஆளில்லை
சுரம் கொண்ட வீணை
சுதி சேர்க்க ஆளில்லை
இருக்கும் போது இருந்தவர்கள்
இல்லாத போது பறந்துவிட்டார்கள்
சொந்தமென்று வந்தவரெல்லாம்
நோகடித்து போனார்கள்
எல்லாம் போய்விட்டது
இல்லாமை மட்டும் இருக்கிறது
இப்போது நான்,
இந்த ஓட்டைக் குடிசை,
பழைய புல்லாங்குழல்
கனவுக்குப்பைகளோடு
தனிமையோடு இருக்கிறேன்.
மேலும் படிக்க
தனிமை கடற்பயணம்
தோள்கொடுக்க வருவீரோ?
தோழி
Subscribe to:
Post Comments
(
Atom
)

விருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
விருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
படமும் அதற்கு விளக்கமாக அமைந்த கவிதையும்
ReplyDeleteமிக் மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteவெறுமையின் வேதனையைச் சொல்லிச் செல்லும் கவிதை அதற்கு அழகு சேர்க்கும் காட்சி வாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஎல்லாம் இழந்துவிட்டால் நிலைமை இதுதான்.அழுத்தமான வரிகள் சேகரன் !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteவலி மிகும் வரிகள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஎல்லாம் இழந்தால் எந்நிலை.....
ReplyDeleteஇதை என் அழகு தமிழில் கவியில் கூறியுள்ளீர்கள்
வலிமிகு வரிகள் தோழா........
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் பரிசுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Delete