அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

மெழுகுவர்த்தி

இயற்கை வெளிச்சம் குறைந்து
மெழுகுவர்த்தி
மெழுகுவர்த்தி
செற்கைவெளிச்சம் கவிழும்
மாலை நேரம் - திடீரென
எலெக்ட்ரான் ஓட்டம் தடைபட
மீண்டும் கவிழ்ந்தது இருட்டு
இருட்டை விரட்ட அவன்
என்னோடு இருந்தான் - நானோ
கருவறை இருந்தும்
கருவில்லாத தாயைப்போல்
என்தேடலை தேடிக்கொண்டிருந்தேன்
நேரம் நகர நகர
அவன் கரைந்து கொண்டிருந்தான்
சட்டென ஓர் இருட்டு
அவன் முழுவதுமாக
கரைந்து தரையில்கிடந்தான்
ஒளி கொடுத்தவன் 
நன்றி எதிர்பார்க்காமல்
தன்னை அர்பணித்து
தரையில் கிடக்கிறான்
நானோ சுயநலமாக
அவனிடம் பேசாமல்
இருந்துவிட்டேன்
கரைந்த உடலை
தழுவிக்கொண்டே கண்ணீருடன்
நகர்ந்தது மாலைவேளை
இன்னும் எத்தனை
தியாகங்களை மறந்தேனோ!!!

பாவம்

பாவம்
பாவம்
அழகான பிறைநிலா
அதன்கீழ் ஒர் விடிவெள்ளி
இரவின் நிழலில்
நீண்ட சாலையில்
அலங்கார விளக்கெடுத்து
ஊர்திகள் விரைந்துசெல்ல
சாலையிலன் ஓரம்
என்னவளின் கைபிடித்து
குலாவிக்கொண்டிருந்த தருணம்
சற்று தூரத்தில்
பூனையொன்று ரோட்டில்பாய
ஊர்தியொன்று தலையில் ஏற
சடக்கென சத்தம்
என்னவளே அய்யோவென
இதயம் நின்றது
போல ஓர் உணர்வு
பூனையின் கால்கள் உதற
அதை கடந்த தருணம்
கல்லானது இதயம்
மனம்மட்டும் கதறியது
அய்யோ பாவம்!
அய்யோ பாவம்!

ஜென் zen

நேற்று இருந்தது
zen
zen
இன்று இருக்கிறது
நாளை இருக்கும்
போகும் போது உன்
தடத்தை விட்டுச் செல்
உன் பார்வைக் கோணத்தை
நூற்றி எண்பத்திஓராவது டிகிரிக்கு திருப்பு
எல்லாம் புத்தம்
அமைதியாக இரு
கோடையும் வரும்
புல்லும்தானாக வளரும்.

காதல் பழமொழி -- 2

நான் கொடுத்த
காதல் பழமொழி -- 2
காதல் பழமொழி -- 2
காதல் கடிதத்தை - நீ
படிக்கவும் இல்லை
கிழிக்கவும் இல்லை
ஆனால் கையில் வைத்து
பெருமைப்பட்டுக் கொள்கிறாய்
இதுவன்றோ நாய்பெற்ற
தெங்கம் பழம்!!

என்ட்ரோபி(entropy)

                              வெப்ப இயக்கவியலின்(Thermo dynamics)  இரண்டாம் விதி.உலகில் பல விஞ்ஞானிகளால் பலவித அர்த்தங்கள் சொல்லப்பட்டு இன்னும் பலரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட விதி என்றும் சொல்லலாம்.இன்னும் பல ஆராய்ச்சிகள் இந்த விதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

                              குறிப்பாக பிரபஞ்சத்தின் தோற்றம்,முடிவு சம்பந்தமான ஆய்வுகளுக்கும்,கோள்கள்,நட்சத்திரங்கள் ,மனித இனத்தின் தோற்றம் என எல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டப்பயன்படும் விதி.நோபல் பரிசுக்கென சிலர் இன்னும் இவ்விதியை வைத்து மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

விதி

என்ட்ரோபி(entropy) என்பது ஒரு அமைப்பின்(System)  ஒழுங்கற்ற அமைப்பை(Disorder) பற்றி கூறுவது.

(அல்லது)

ஒரு அமைப்பிற்கு(System) கொடுக்கப்படும் ஆற்றலுக்கும்(q) அதன் வெப்பநிலைக்கும்(T) உள்ள விகிதம் (q/T)ஆகும்


                              பள்ளியில் நாம் படித்த ஒரு சின்ன அறிவியல் விதி வெப்பம் சூடான இடத்தில் இருந்து குளிர்ந்த இடத்தை நோக்கிப் பரவும்.ஆனால் நாம் எப்போதாவது ஏன் வெப்பம் ஏன் குளிர்ந்த இடத்திலிருந்து சூடான இடத்தை நோக்கி பாயக்கூடாது என கேட்டதுண்டா? பரவாயில்லை இப்போது கேட்போம் ஏன் பாயக்கூடாது?

ஒரு சோதனை :

குளிர்ந்த பனிக்கட்டியில் உள்ள மூலக்கூறுகள்(molecules) ஒரு நிலைத்தன்னையுடன் குறைந்த பட்ச ஓர்  ஒழுங்கமைப்பில்(Order) இருக்கும்.

என்ட்ரோபி(entropy)
என்ட்ரோபி(entropy)


ஓர் சூடான  கம்பியில் உள்ள மூலக்கூறுகள்(molecules) அதிக ஆற்றலால் அதிக இயக்க ஆற்றலைப்(kinetic energy) பெற்றிருக்கும்.அதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி ஓர் ஒழுங்கற்ற அமைப்பை(Disorder பெற்றிருக்கும்.

இப்போது சூடான கம்பியை  பனிக்கட்டியில்விடும்போது கம்பியில் உள்ள அதிக ஆற்றல் மூலக்கூறுகள் பனிக்கட்டி மூலக்கூறுகளை மோத ஆரம்பிக்கும் .கம்பியின் அதிக ஆற்றல் மூலக்கூறுகள் தங்கள் ஆற்றலை பனிக்கட்டி மூலக்கூறுகளின் மீது மோதி செலுத்தும்.இதனால் வெப்பம் அதிகரித்து பனிக்கட்டி உருக ஆரம்பிக்கும் அதன் மூலக்கூறு அமைப்பும் ஒழுங்கிலிருந்து(Order)   ஒழுங்கற்ற(Disorder) அமைப்பை நோக்கி நகர ஆரம்பிக்கும்.

ஏற்கனவே  சூடான கம்பியின் என்ட்ரோபி(entropy)(ஒழுங்கற்ற தன்மை) அதிகம் இருந்தது இப்போது வெப்ப ஓட்டம் காரணமாக பனிக்கட்டியின்  என்ட்ரோபி (ஒழுங்கற்ற தன்மை) அதிகரித்து விட்டது.மொத்த என்ட்ரோபி ஏற்கனவே இருந்ததை விட இப்போது அதிகரித்துவிட்டது.

கேள்வியின் பதில் :

சூடான கம்பியின் மூலக்கூறுகள் தனது அதிகப்படியான ஆற்றலை இழந்தால் தான் சமநிலை அடையமுடியும் .அதனால் அதிகப்படியான ஆற்றலை பனிக்கட்டியின் மூலக்கூறுகளிடம் இழந்து சமநிலை(Equilibrium) அடைகிறது.இதனால் வெப்பம் அல்லது ஆற்றல் எப்போதும்  அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்தை நோக்கி பாயும்.

என்ட்ரோபி(entropy)
என்ட்ரோபி(entropy)



ஒரு அமைப்பின் என்ட்ரோபி(ஒழுங்கற்ற  அமைப்பு) எப்போதும் அதிகரிக்கும் அல்லது ஏற்கனவே இருந்த மதிப்பாக இருக்கும்.ஆனால் குறையவே குறையாது.

மிக முக்கியமான ஒரு விதி இயற்கை எப்போதும் ஒழுங்கிலிருந்து ஒழுங்கற்ற அமைப்பை நோக்கியே செல்லும்.ஆனால் ஒழுங்கற்ற அமைப்பிலிருந்து ஒழுங்கை நோக்கி செல்ல வெளியிலிருந்து ஆற்றல் அல்லது வேலை செய்ய வேண்டும்.

 உதாரணங்கள் : 

சிதறிய செங்கற்கள்  ஒழுங்கற்ற அமைப்பில் இருக்கும்.இப்போது என்ட்ரோபி அதிகம் உள்ளது.அதை ஒழுங்காக அடுக்க நாம் நமது ஆற்றலை வேலையாக செலவழித்தால் ஒழுங்காகமாறிவிடும்.இப்போது  செங்கற்களின்  என்ட்ரோபி குறைந்து விட்டது.


என்ட்ரோபி(entropy)
என்ட்ரோபி(entropy)
கவனிக்க :

என்ட்ரோபி குறையவே குறையாது என்று சொன்னேன் ஆனால் இப்போது குறைகிறதே என நீங்கள் கேட்கலாம்.இங்கு தான் பல அறியாமை தவறுகள் நடக்கின்றன.மொத்த அமைப்பை பார்க்க வேண்டும்.நாம் ,செங்கள் ,சுற்றுச்சூழல் மொத்ததையும் ஓர் அமைப்பாக கருதவேண்டும்.செங்களை அடுக்க ஆற்றலை செலவழித்து  நாம் வேலை செய்கிறோம் .வெப்பத்தினால் நமது என்ட்ரோபி அதிகரிக்கிறது.செங்களின் என்ட்ரோபி குறைக்க  நாம் அதிக வேலை செய்து நமது என்ட்ரோபியை  அதிகரிக்கிறோம்.இதனால் மொத்த என்ட்ரோபி அதிகரிக்கிறது.


முக்கியவிதி :

 என்ட்ரோபி செயல்பட ஒரு அமைப்பு(System) புறவிசை(External factors) எதுவும் பாதிக்காதாகவும்,மூடியதாகவும்(closed), தொடர்ந்து மாறிக்கொண்டே(changing)  இருக்க கூடியாதாகவும் இருக்க வேண்டும்.

புறவிசை(External factors)  எதுவும் பாதிக்காத ஒரு அமைப்பு(System)  நேரம்(Time) ஆக ஆக எப்போதும் ஒழுங்கிலிருந்து(Order) ஒழுங்கற்ற(Disorder) அமைப்பை நோக்கியே செல்லும்.

 என்ட்ரோபி(entropy)  எப்போதும் ஒழுங்கமைப்பை(Order) பற்றி கூறுகிறது ஒழுங்கைப்பற்றி(disipline) அல்ல.

மேலும் படிக்க : 






http://mapyourinfo.com

தமிழ்மகனே கண்ணுறங்கு

கண்ணே ஒரு பாடல்
தமிழ்மகனே கண்ணுறங்கு
தமிழ்மகனே கண்ணுறங்கு
காதோரம் நான் பாட
கண்ணே கண்ணுறங்கு
கன்னித்தமிழ் நீகேளு!

பூவே புதுமலரே
பூவில் மலர்ந்த பூந்தேனே
புதுராகம் நான் பாட
பூந்தேனே கண்ணுறங்கு!

மார்கழி குளிர்காத்து
உன்னை தீண்டாமல்
இதமாய் அணைப்பேன்
அந்த கதகதப்பில்
பைங்கிளியே கண்ணுறங்கு!

அம்புலி நீ விளையாட
நிலவெல்லாம் சேர்த்துவைப்பேன்
உன்பசி நான் போக்க
வட்டதோசை சுட்டு வைப்பேன்
நீதிக்கதை நான் சொல்ல
நிலவே நீ கண்ணுறங்கு!

கூடி விளையாட
அத்த மக இருக்க
ஓடி விளையாட
ஆவாரம்பூ காடிருக்கு
ஊர்க்கதைகள் நான் சொல்ல
ஊர்க்கிளியே கண்ணுறங்கு!

தாய்மொழி நான் சொல்ல
கனிமொழி நீ பேச
தமிழ்மொழிதான் வளர
தாய்மொழி நீ கற்று
தரணி ஆள்வாய்
தமிழ்மகனே!

கடவுள் வாழ்த்து

என்னுடைய இந்த 150 பதிவை கடவுளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கடவுள் வாழ்த்து
கடவுள் வாழ்த்து
அலை அலையாய்
ஆயிரம் பிறவிகள்
கரை இல்லாத
இப்பிறவி பெருங்கடலில்
கரை சேர
இப்பிறவி அளித்த
இறைவா போற்றி!

உத்தமர் தன்வரம் கொடுக்க
உத்தமி தன்மகனாய் பிறக்க
வரம் அளித்த
இறைவா போற்றி!

நான் அழ தான்அழுது
நான் விழ தான் கைதூக்கிய
உடன்பிறப்புகளை அளித்த
இறைவா போற்றி!

இவ்வுலகை இனிதாக்க
வனப்பும் வலிமையுமிக்க
உடலை அளித்த
இறைவா போற்றி!

தன்னுணர்வை தானறிந்து
உள்ளுணர்வால் உனையறியும்
அறிவைக் கொடுத்த
இறைவா போற்றி!

அறிவில் மாணிக்கமாய்
உன்னில் ஒருபாதியாய்
குருவை அளித்த
இறைவா போற்றி!

சுற்றும் உலகை சுவைத்தறிய
ஊன்றுகோலாய் ஊன்றிநடக்க
சுற்றம் கொடுத்த
இறைவா போற்றி!

பேரழகும் பெருங்குணமும்
பாருலகில் பைங்கிளியாயும்
மனைவி அளித்த
இறைவா போற்றி!

என்பெருமை தான்  தூக்க
கடைசியில் கால்தூக்க நன்
மக்கட்பேறு அளித்த
இறைவா போற்றி!

ஆயிரம்பேர் வந்தாலும்
ஆயிரம்தான் சொன்னாலும்
தன்னலம்தான் பாராமல்
என்னலம்தான் பார்க்கும்
நண்பனை அளித்த
இறைவா போற்றி!

அழகு அழகு
பைங்கிளியின் பேச்சழகு
அழகுக்கெல்லாம் அழகு
பைங்கிளியின் தமிழ் பேச்சழகு
திட்டினாலும் வாய்மணக்கும்
தமிழ்மொழி அளித்த
இறைவா போற்றி!

கல்லில் உனைக்கண்டேன்
பசும்புல்லில் உனைக்கண்டேன்
என்னில் உனைக்கண்டேன்
தமிழாய் உனைக்கண்டேன்
உருண்டோடும் பிரபஞ்சத்தில்
ஒர் ஒழுங்காய் உனைக்கண்டேன்
தாய்மையில் உனைக்கண்டேன்
அன்பில் உனைக்கண்டேன்
நட்பில் உனைக்கண்டேன்
துள்ளிவரும் நாய்க்குட்டியின்
நன்றியில் உனைக்கண்டேன்
உன்னைக்காண என்னைப்படைத்து
உன்னையறியும் உணர்வைக் கொடுத்து
உன்னைப்பாடும் அறிவை அளித்த
இறைவா உன்பாதம் பணிந்து
உன்னை வணங்குகிறேன்.






நீ மட்டுமே உண்மை

உடலை இறுக்கி
வில்லாய் வளைத்து
நரம்பை முறுக்கி
நாணாய் மாற்றி
கேள்விகணைகள் தொடுத்திடு
உன்னைச் சுற்றிய வேலிகளை
கேள்விகணைகள் உடைக்கட்டும்

மனிதா மனிதா விழித்துக்கொள்
நீ மனிதன் என்பதை ஒப்புக்கொள்
இன்னொரு வாழ்வில்லை நினைவில்கொள்
வாழ்க்கை வாழ்வதை கற்றுக்கொள்

உடைந்த கண்ணாடி
முழுபிம்பம் காட்டாது
உடைபட்ட உன்மனம்
உன்பிம்பம் காட்டாது
பிரிவினை சேற்றில்
கால் வைத்தபின்
கரைசேர்வது எப்போது

தனிமனித கொள்கைகள்
காலைப் பனித்துளி
கதிரவன் வந்ததும்
காற்றில் பறந்துவிடும்
உன்கண்ணை மூடிக்கொண்டு
அடுத்தவன் கண்ணில்
பார்ப்பது மடத்தனம்
கடன் வாங்கிய அறிவு
கரை எப்போதும் சேர்க்காது

எறும்புக்கென்ன பாடம்
குயிலுக்கேது பயிற்சி
எருமைகிருக்கும் பொறுமை
உனக்கில்லை எருமை
பெருமைபேசும் எருமை
உலகில் இருந்தால் மடமை

உன்னை விதைத்து
உன் சுதந்திரத்தை அறுவடைசெய்!
உன் தவறை நீயே செய்!
விழிப்போடு இரு!

கரை இல்லா வாழ்க்கைகடலிலே
அறிவென்னும் படகிலேறி
விழிப்பென்னும் விளக்கேற்றி
நீயே துடுப்பிட்டு கரைசேர்.

காதல் பழமொழி -- 1

பூவுக்குள் காதலை வைத்து
எனக்குள் உன்னை வைத்து
என் காதலை நீட்டினேன்
நீயோ நாற்றமுணர்ந்த மூக்கைப்போல
முகத்தை திருப்பிக் கொண்டாய்
அப்போதுதான்  உணர்ந்தேன்
கழுதைக்கு தெரியுமா
கற்பூரவாசனை என்னவென்று!!

காதல் விளம்பரம்

ஒவ்வொரு முறையும்
நிலவுக்கு வண்ணமடித்து
விளம்பரம் செய்கிறேன்
உன்னைக் காதலிகிறேன் என்று
நீ பார்க்கிறாயா?இல்லையா?