ஓர் அழகான எழுத்து முயற்சி.

என்னுடைய விருதுகள் ?

35 comments
வீசும் காற்றிற்கு விருதுகள் ஏது ?
பொழியும் மழைக்கு பரிசுகள் ஏது ?
பசி தீர்க்கும் கைகளுக்கேது
தங்கக்காப்பு ?
சூரியனைப்போல்
பகலில் சுட்டெரிப்பான்
இரவில் எதிரொலிப்பான்
யாரையும் எதிர்னோக்காமல்
தன்னாலீன்ற உதவி செய்து
தடம் தெரியாமல் தலைசாய்ப்பான்
விருதிற்காக வரிசை நின்ற ஆறெது?
பரிசிற்காக வீசிய காற்றெது?
நான் கேட்டா குயில் கூவியது?
நீ சொல்லிய மாலை புலர்ந்தது?
காலை மலர்ந்து
அழகை கொடுத்து
மாலை தலைகவிழ்ந்த
மலரின் மாண்பு
பரிசிற்கா ? இல்லை விருதிற்கா ?
பிறந்தான் வளர்ந்தான்
தன்னாலீன்ற உதவி செய்து
தடம் பதிக்காமல் மறைந்தான்
அவன் தான் மனிதன் !
அவனே மக்கட் தலைவன் !
அவனே மண்ணில் பிறந்த மாணிக்கம் !
அவனை மரியாதை செய்வதே
நன் மக்கட் கழகு !


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

எனக்கு தாங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்புக்கும் மரியாதைக்கும் என் முதற்கண் வணக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.அது போல் பலரும் எனக்கு விருதுகள் வழங்கி அதை பலருக்கும் பகிரச்சொல்லி அழைப்பு விடுத்தனர்.முக்கியமாக தோழி திரு.ஸ்ரவாணி,திரு.ஹேமா ,திரு.Esther sabi  இவர்களுக்கும் என் முதற்கண் வணக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.ஆனால் நான் வாங்கிய விருதை இதுவரை பகிரவில்லை.காரணம் நான் ஒரு நல்ல வாய்ப்பை தேடிக்கொண்டிருத்தேன்.
என்னைப் பொருத்தவரை நான் விருது கொடுக்கும் அளவுக்கு பெரிய அளவில் ஒன்றும் சாதித்து விடவில்லை.இருந்தாலும் ஒரு நல்ல ரசிகனாய் இருந்து நான் விரும்பிய எழுதிற்கு மதிப்பளிக்கும் உரிமை எனக்குண்டு என நம்புவதால் நான் தங்கப்பேனா விருதை சிலருக்கு வழங்க விரும்புகிறேன்.
இதை வாங்குபவர்கள் அனைவரும் மேலே என் கவிதையில் நான் குறிப்பிட்ட இயற்கையை ஒத்தவர்கள் .ஏனென்றால் இவர்கள் ஆறு போல் தங்கள் வழியில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.தங்களால் முடிந்ததை தங்கள் எழுத்தின் மூலமாக படைத்து கொண்டே இருக்கிறார்கள்.அவர்களை பாராட்டி ,விருது கொடுப்பதன் மூலம் நாம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

முதலாவதாக மதிப்பிற்குரிய ஐயா
அவர்களுக்கும்

இரண்டாவதாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கும்

மூன்றாவதாக மதிப்பிற்குரிய   ஐயா அவர்களுக்கும்

நான்காவதாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கும்

ஐந்தாவதாக மதிப்பிற்குரிய  அவர்களுக்கும்
 
ஆறாவதாக  மதிப்பிற்குரிய தோழி  ஸ்ரவாணி அவர்களுக்கும்

ஏழாவதாக மதிப்பிற்குரிய தோழி  சசிகலா அவர்களுக்கும்

எட்டாவதாக மதிப்பிற்குரிய தோழி    அவர்களுக்கும்

ஒன்பதாவதாக  மதிப்பிற்குரிய தோழி  கீதாமஞ்சரி  அவர்களுக்கும்

பத்தாவதாக  மதிப்பிற்குரிய   அவர்களுக்கும்


  தங்கப்பேனா விருது வழங்கி என் கவிதை சமர்ப்பணம் செய்கிறேன்.இவர்கள் அனைவரும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

35 comments :

 1. பெரிய திறமைசாலிகளின் குழுவில் எனக்கும் இடம் தந்திருக்கிறீர்கள் தனசேகரன். பெருமையாகவும், மதிப்பாகவும், கொஞ்சம் பயமாகவும் உணர்கிறேன். தங்கப் பேனா வழங்கிய தங்களுக்கு தங்கமான என் இதயம் நிறைந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. ஏற்று சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி கணேஷ் அவர்களே.

   Delete
 2. ஆஹா , என்ன ஒரு - ஜொலிப்பு !
  - கூர்மை !
  - வடிவமைப்பு !
  - பொருத்தம் !
  இதில் உங்கள் தள முகவரி இல்லாமல் தந்து இருப்பது
  உங்கள் பெருந்தன்மையையும் , திருமணத்தில் தரும் பரிசின் மீது
  பெயர் குறிப்பிடாமல் தந்தால் சங்கோசமின்றி பயன்படுத்த முடிதல் போல
  ஒரு இலகு தன்மையையும் கொண்டிருக்கிறது .
  மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டேன் தோழரே.
  இதை உவப்புடன் மனதார ஏற்று சிறப்பிக்கிறேன் .
  உங்கள் ஜொலிக்கும் 'தங்கப்பேனா' விருது வந்த வேளை
  இன்னும் சிறந்த படைப்புகள் தரும் நல் அதிர்ஷ்ட வேளையாக
  எனக்கு மட்டும் அன்றி விருது பெற்ற அனைவருக்கும் அமைவதாக!
  வாழ்த்துக்கள். மிக்க நன்றி DS !

  ReplyDelete
  Replies
  1. ஏற்று சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரவாணி அவர்களே.

   Delete
 3. சேகரன் மிக மிக அழகான மகிழ்ச்சியான விருது.உங்கள் புகைப்படம் பார்க்கும்போதெல்லாம் என் தம்பியாகவே மனம் நினைக்கும்.உங்களிடமிருந்து விருது மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோதரா.அன்போடு நன்றி சேகரன் !

  ReplyDelete
  Replies
  1. நானும் தங்களைப் போல் ஒரு சகோதரி கிடைத்தமைக்கு பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

   ஏற்று சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ஹேமா அவர்களே.

   Delete
 4. இந்த அவார்டுக்கு என்னை தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி. என்னைத்தவிர மற்ற அனைவருக்கும் இந்த அவார்டை பெற மிக தகுதியுள்ளவர்கள் என நான் நினைக்கிறேன். தங்கப்பேனா விருது என்றால் மிகச் சிறந்த எழுத்தாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் நான் அதற்கு தகுதியுள்ளவானா என்பதில் எனக்கே மிகச் சந்தேகம். தம்பி தனசேகருக்கு இதை மீண்டும் ஒரு முறை பரிசிக்க வேண்டுகிறேன். இதைப்பெற்ற மற்றவர்களோடு என்னை சேர்க்கும் போது எனக்கு தகுதியில்லை என்றாலும் மிகப் பெருமையாக இருக்கிறது. ஆனால் இதை நான் பெற்றால் தங்கமான அவர்களை தகரமான எனக்கு நிகராக அவர்களை மதித்தது போல இருக்கும் என்பது என் நினைப்பு. நான் சொல்வதை தவறாக எடுத்து கொள்ளாமல் மறுபரிசிலிக்க வேண்டுகிறேன் அன்போடு. முடிந்தால் வேறு ஒரு அவார்டு க்ரியேட் பண்ணி தாருங்கள் அன்புடன் ஏற்று கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய அன்பான விருதை நீங்கள் கண்டிப்பாக ஏற்றுதான் ஆக வேண்டும்.திறமையை மறுபரிசீலனை செய்ய முடியாது என நான் நினைக்கிறேன்.

   Delete
  2. அன்புடன் ஏற்று கொள்கிறேன். இந்த அவார்டுக்கு என்னை தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி.

   Delete
  3. எனது தளத்தில் நீங்கள் தந்த அவார்டையும் உங்கள் தளத்திற்கான லிங்கையும் இனைத்துள்ளேன்.நன்றி

   Delete
  4. ஏற்று சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி

   Delete
 5. மாப்ள உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி மாம்ஸ்!!

   Delete
 6. ஒரு சிறந்த குழுவில் என்னையும் இணைத்து விலை மதிப்பில்லா தங்கப்பேனா விருது அளித்துக் கௌரவித்த தங்கள் அன்பு உள்ளத்துக்கு என் நன்றி.மற்ற அனைவரின் ஓட்டத்துக்கும்(மன ஓட்டத்தைச் சொல்கிறேன்!) ஈடு கொடுத்து என்னால் ஓட முடியுமா என்பது சந்தேகமே.ஆனால் உங்கள் விருது அதற்கான ஊக்கத்தை எனக்கு அளிக்கும்.நன்றி தனசேகரன்.

  ReplyDelete
  Replies
  1. விருதை ஏற்று சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி சென்னை பித்தன் அவர்களே.

   Delete
 7. " ஆனந்த கூத்தடுதடா
  தாண்டவக்கோனே"

  நண்பரே.. தங்கப்பேனா பரிசு வாங்கும்
  பல ஜாம்பவான்கள் மத்தியில் இந்தச் சிறியேனும் உள்ளடக்கமா...
  எண்ணிப்பார்ப்பதிலேயே பெருமகிழ்ச்சி.
  தங்கப்பெனாவை கையில் பிடித்துப் பார்த்தேன்.

  ' வாகை சூடு படைவென்ற மன்னவன்
  வாளேந்திய ஓர் உணர்வு..'

  நன்றிகளுடன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. ஏற்று சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி மகேந்திரன் அவர்களே.

   Delete
 8. என்னை மறந்துட்டீங்களே சகோ

  ReplyDelete
  Replies
  1. தங்களை கண்டிப்பாக நான் மறக்கவில்லை தோழி.

   Delete
  2. சகோதரி ராஜி குடும்பத்திற்கு ஒரு விருதுமட்டும்தான் தனசேகரன் எனக்கு கொடுத்துவிட்டார். நான் பெற்றால் என்ன அல்லது நீங்கள் பெற்றால் என்ன இரண்டும் சமம்தான். நாம் ஒரேகுடும்பம் அல்லவா ராஜி

   Delete
 9. பரிசு மழை பொழிகிறது; பெற்றவர் நெஞ்சம் குளிர்கிறது. ஈன்றவருக்கும் , பெறுபவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

   Delete
 10. அருமையான பதிவர்கள் மத்தியில்
  நானும் இருக்குபடியாக ஒரு விருதினைக் கொடுத்து
  என்னை கௌரவித்தமைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஏற்று சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி

   Delete
 11. வாழ்த்துக்கள் சகோதரரே............

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 12. இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் வலைப்பக்கம் வரமுடிகிறது என்பதால் தாங்கள் வழங்கிய விருதினை இப்போதுதான் பார்க்கமுடிந்தது.

  தனசேகரன், உங்களுடைய அன்புக்கு மிகவும் நன்றி. நல்ல கவிஞர் நீங்கள். உங்கள் கையால் விருது வாங்குவதைப் பெருமையாகக் கருதுகிறேன். இன்னுமின்னும் எழுதும் உற்சாகத்தைப் பெறுகிறேன். மனமார்ந்த நன்றி தனசேகரன்.

  கிளை சாய்த்து கனி வழங்கும் மரம் போல் தான் பணிந்து பலருக்கும் விருது வழங்கும் தங்கள் பண்பினை மிகவும் பாராட்டுகிறேன். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு நிகராக என் எழுத்தையும் குறிப்பிட்டிருப்பது மிகவும் வியப்பாக உள்ளது. அதே சமயம் பொறுப்பும் அதிகரிக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள். இங்கு குறிப்பிடப்படாத பலருடைய எழுத்துக்கள் விருதுகளுக்கு சமமாக உள்ளது. அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஏற்று சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி

   Delete
 13. தக தக வென ஜொலிக்கும் தங்கப் பேனாவைக் காண நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வந்ததால் தாமதம் மன்னிக்கவும் . மிகப் பெரிய அனுபவமிக்க பதிவர்களுக்கு நடுவே எனக்கும் விருதளித்து மகிழ்வித்தமைக்கு எனது மனமர்ர்ந்த நன்றி .

  ReplyDelete
  Replies
  1. ஏற்று சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி

   Delete
 14. வாழ்த்துகள்.
  இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 15. வருதுகளைப் பெற்றவர்களிற்கும், கொடுத்தவர்களிற்கும் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 16. தங்களின் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..