ஓர் அழகான எழுத்து முயற்சி.

கடவுள் வாழ்த்து

6 comments
என்னுடைய இந்த 150 பதிவை கடவுளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கடவுள் வாழ்த்து
கடவுள் வாழ்த்து
அலை அலையாய்
ஆயிரம் பிறவிகள்
கரை இல்லாத
இப்பிறவி பெருங்கடலில்
கரை சேர
இப்பிறவி அளித்த
இறைவா போற்றி!

உத்தமர் தன்வரம் கொடுக்க
உத்தமி தன்மகனாய் பிறக்க
வரம் அளித்த
இறைவா போற்றி!

நான் அழ தான்அழுது
நான் விழ தான் கைதூக்கிய
உடன்பிறப்புகளை அளித்த
இறைவா போற்றி!

இவ்வுலகை இனிதாக்க
வனப்பும் வலிமையுமிக்க
உடலை அளித்த
இறைவா போற்றி!

தன்னுணர்வை தானறிந்து
உள்ளுணர்வால் உனையறியும்
அறிவைக் கொடுத்த
இறைவா போற்றி!

அறிவில் மாணிக்கமாய்
உன்னில் ஒருபாதியாய்
குருவை அளித்த
இறைவா போற்றி!

சுற்றும் உலகை சுவைத்தறிய
ஊன்றுகோலாய் ஊன்றிநடக்க
சுற்றம் கொடுத்த
இறைவா போற்றி!

பேரழகும் பெருங்குணமும்
பாருலகில் பைங்கிளியாயும்
மனைவி அளித்த
இறைவா போற்றி!

என்பெருமை தான்  தூக்க
கடைசியில் கால்தூக்க நன்
மக்கட்பேறு அளித்த
இறைவா போற்றி!

ஆயிரம்பேர் வந்தாலும்
ஆயிரம்தான் சொன்னாலும்
தன்னலம்தான் பாராமல்
என்னலம்தான் பார்க்கும்
நண்பனை அளித்த
இறைவா போற்றி!

அழகு அழகு
பைங்கிளியின் பேச்சழகு
அழகுக்கெல்லாம் அழகு
பைங்கிளியின் தமிழ் பேச்சழகு
திட்டினாலும் வாய்மணக்கும்
தமிழ்மொழி அளித்த
இறைவா போற்றி!

கல்லில் உனைக்கண்டேன்
பசும்புல்லில் உனைக்கண்டேன்
என்னில் உனைக்கண்டேன்
தமிழாய் உனைக்கண்டேன்
உருண்டோடும் பிரபஞ்சத்தில்
ஒர் ஒழுங்காய் உனைக்கண்டேன்
தாய்மையில் உனைக்கண்டேன்
அன்பில் உனைக்கண்டேன்
நட்பில் உனைக்கண்டேன்
துள்ளிவரும் நாய்க்குட்டியின்
நன்றியில் உனைக்கண்டேன்
உன்னைக்காண என்னைப்படைத்து
உன்னையறியும் உணர்வைக் கொடுத்து
உன்னைப்பாடும் அறிவை அளித்த
இறைவா உன்பாதம் பணிந்து
உன்னை வணங்குகிறேன்.


6 comments :

 1. நல்ல கவிதையை 150வது பதிவாக தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் நல்ல பதிவுகளை தொடர்ந்து தாருங்கள். நானும் உங்களை தொடர்ந்து வருகிறேன். வாழ்க வாழமுடன் நண்பா

  ReplyDelete
  Replies
  1. தஙகள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி நண்பா!!

   Delete
 2. அருமையான பதிவு பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தஙகள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

   Delete
 3. 150க்கு வாழ்த்துகள்.இறை அருள் என்றும் துணை இருக்கட்டும்.(பஞ்சு மெல்லடி தேவியே என்ற என்காலத்து வாழ்த்துப் பாடல் உங்கள் காலத்திலும் உண்டா பள்ளியில்? )

  ReplyDelete
  Replies
  1. தஙகள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

   Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..