Showing posts with label சிந்தனை நேரம். Show all posts
Showing posts with label சிந்தனை நேரம். Show all posts
எனர்ஜி டானிக்:நீங்களும் ஹீரோ தான்!!
Marc

நாம் எல்லோரும் சினிமா பார்த்து இருப்போம். அதில் ஒரு ஹீரோ இருப்பார்.படத்தின் துவக்கத்தில் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்திப்பார்.இரண்டாவது கட்டத்தில் பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெறுவார்.இந்த இரண்டு கட்டத்திற்கு இடையில் ஒரு திருப்புமுனை இருக்கும்.அந்த திருப்புமுனை தான் ஹீரோவிற்கு தன்னம்பிக்கை தரும் தருணம். நாமும் நம்மை உணர தன்னம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ள வாழ்வில் ஒரு திருப்புமுனை அவசியம்.அப்படி ஒரு திருப்புமுனை ஏற்படுத்திக்கொள்ள நம் வாழ்க்கையை நாமே பின்னோக்கி திரும்பிப் பார்க்க வேண்டும்.உதாரணமாக ஒரு பிரச்சனை வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்போது சற்று நிதானமாக நம் வாழ்க்கையை பின்னோக்கி அதுவரை சந்தித்த பல பிரச்சனைகளை நினைத்து பார்க்கவேண்டும்.அவற்றை எவ்வாறு வெற்றிகரமாக எதிற்கொண்டோம் என்பதை சிந்திக்க வேண்டும்.இதை செய்ய ஆரம்பிக்கும் போதே பிரச்சனையை பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக ,அதை தீர்க்க சிந்திக்க ஆரம்பித்து விடுவோம்.
என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய நிகழ்வு நான் பன்னிரெண்டாவது படிக்கும் போது நிகழ்ந்தது.படிப்பில் நான் சுமார் ரகம் தான்.ஆனால் முட்டாள் இல்லை.அதுவும் கணிதத்தில் தான் படுமோசம்.முதல் ஆறு மாதத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு கணித்தில் நான் எடுத்த அதிக மதிப்பெண்களே ஐந்து .இதை பார்த்த கணித ஆசிரியர் நான் தேறுவது கடினம் கடினம் என் நினைத்து என்னை தினமும் கும்ம ஆரம்பித்தார்.என்னை மாற்றுவதற்காக குட்டிக்கரணமே அடித்துப்பார்தார்.ஆனால் கணிதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.இப்போதும் ஞாபகம் இருக்கிறது.ஹால்டிக்கெட் கொடுக்கும்போது எப்படியாவது பாஸாகிவிடு என்று என் ஆசிரியர் கூறியது.அதன் பின் நடந்ததெல்லாம் ஆச்சர்யம்.ஏனென்றால் முழு ஆண்டு தேர்வு முடிவில் கணிதத்தில் நான் எடுத்த மதிப்பெண் 190.இதைக் கேட்ட என் ஆசிரியருக்கு நம்பவே முடியவில்லை.பெயில் ஆகிவிடுவேன் என அவர் கணித்த மாணவன் 190 மதிப்பெண்கள். இதைவிட நூறு மதிப்பெண்கள் எடுப்பார்கள் என ஆசிரியர் கணித்த பல மாணவர்கள் 160 கூட தாண்டவில்லை.
நடந்தது இது தான்.முழு ஆண்டு தேர்வுக்கு தயாராவதற்கு 20 நாட்கள் வரைக்கொடுத்திருந்தார்கள்.ஓராண்டில் படிக்காததை 20 நாட்களில் படிக்க ஒரு திட்டம் தீட்டினேன்.திட்டம் இதுதான்.அதுவரை வெளிவந்த அனைத்து கம்பெனிகளின் நோட்ஸ்களையும் மாதிரி வினாத்தாட்களையும் சேகரிப்பது.எதை எப்போது படித்து முடிக்கவேண்டும் என்ற விரிவான ஒரு செயல் திட்டம்.இதற்காக எத்தனையோ பழைய நோட்டு புத்தகக்கடைகளை ஏறி இறங்கினேன்.கணிதத்திற்கு மட்டும் எட்டு கம்பெனிகளின் நோட்ஸ்களை சேகரித்தேன்.
நோட்ஸ்,மாதிரிவினாத்தாட்கள் ஒரு கையில் ,எப்படி படிக்க வேண்டும் என்ற செயல் திட்டம் மறு கையில்.இருபது நாட்கள் திட்டமிட்ட கடின உழைப்பு.அந்த இருபது நாட்களில் நான் முழுவதுமாக மாறிப்போயிருந்தேன்.ஒவ்வொரு பரிட்சை எழுதும் போதும் துளிகூட சந்தேகமில்லாமல் எழுதினேன்.கணிதம் மட்டுமில்லாமல் இயற்பியல்,வேதியியல் என எல்லா பாடாத்திலும் மார்க்குகளை அள்ளிக்குவித்தேன்.அதுதான் என் வாழ்க்கையில் உண்மையாக என்னை உணர்ந்த தருணம்.வெற்றிச்சூத்திரத்தை கண்டறிந்த தருணம்.அன்றிலிருந்து எவ்வளவு பிரச்சனைகள் எனக்கு வந்தாலும் இந்த நிகழ்வை நினைத்துப்பார்பேன்.புது புத்துணர்ச்சி பிற்க்கும்.புதிதாய் பிறந்தது போல் இருக்கும்.சட்டென களத்தில் குதித்து போரட ஆரம்பித்து விடுவேன்.
திரும்பிப்பாருங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு கரடுமுரடான பாதைகள், எத்தனை சோகம்,எத்தனை கண்ணீர்,எத்தனை இன்னல்கள்.ஆனால் சோர்ந்து போகவில்லை.இதையெல்லாம் கடக்க வைத்தது யார்?இதையெல்லாம் தாங்கிக்கொண்டது யார்?கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அது வேறு யாரும் இல்லை.நீங்கள் தான். வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் நீங்களும் ஹீரோ தான்.
12:00 PM
எனது பக்கங்கள்
,
எனர்ஜி டானிக்
,
சிந்தனை நேரம்
காகிதங்களும் பேனாக்களும் - ஒரு காதல் ரொமான்ஸ்
Marc
பேனாக்கள் கண்டிப்பாக
ஆண்கள்தான் - அவை
காகிதங்களின் அங்கங்களைப் பற்றி
தன் இச்சைகளை - அதன் மேல்
பச்சை குற்றிவிடுகின்றன.
காகிதங்களும் பேனாக்களின்
காதல் பரிசுகளை
ஏற்றுக்கொள்கின்றன.
உண்மையில் எழுத்துகள்
உயிரற்ற இரு பொருட்களின்
காதல் இச்சைகள்.
எழுத்துகளுக்கு மனித இனத்தில் பெரிய வரலாறு உண்டு.எழுத்துகள் சிறந்த அறிவு கடத்திகள்.அவை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அறிவுச்செல்வத்தை கடத்திச்செல்கின்றன.மனிதன் முதலில் மணலில் குறியீடுகளாக குறிக்க ஆரம்பித்தான்.பின் களிமண்ணில் எழுதி நெருப்பில் சுட்டு, சுட்ட எழுத்துகளை பயன்படுத்த ஆரம்பித்தான்.அதன் பின் பனையோலை,எழுத்தாணி என ஆரம்பித்து காகிதம்,பேனா என அதன் வரலாறு தொடர்ந்து கொண்டே செல்கிறது.
எழுதும் முறைகளோடு மனிதனும் பரிணமித்துக்கொண்டே வந்திருக்கிறான்.இவ்வளவு பெரிய பரிணாம வளர்ச்சி ஏதோ ஒரு ஆதிமனிதன் தன் உணர்ச்சியை,கற்பனையை பதிய முயற்சி செய்தலின் விளைவாக வந்திருக்கிறது.பெரிய ஆறுகள் கூட சின்ன சுனையிலிருந்து தான் தன் பயணத்தை தொடங்கின்றன.அது போல் எங்கோ ஆரம்பித்த தனிமனித எழுத்து முயற்சி காலம் என்னும் பரிணாம ஓடையில் மெருகேற்றப்பட்டு விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.
எழுத்து முயற்சியென்பது வெறும் மைகளால் காகிதங்களை நிரப்புவது அல்ல.எழுத்துகள் தனி மனிதனின் அனுபவக்குறியீடுகள்.ஒரு எழுத்தாளன் என்பவன் மேகம் சூழ்ந்த வானிலையில் மழைக்காக காத்திருக்கும் உழவன் போல கற்பனைக்காக காத்திருக்கிறான்.சில நேரம் கற்பனையும்,அனுபவமும் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடலாம் அல்லது பொய்த்தும் போகலாம்.ஆனாலும் அவன் பொறுமையாக இருக்கிறான்.எழுதுவது செயல் அல்ல.அது ஒரு தவம் என்பது அவனுக்கு தெரியும்.அனுபவம்,சிந்தனை,ஆழந்த ஞானம் என எல்லாம் ஒரு புள்ளியில் சந்திக்கும் அந்த ஒரு கணத்திற்காக காத்திருக்கிறான்.
எழுத்துகள் வெறும் குறியீடுகள் தான்.ஆனால் எழுத்துகளால் மனித உணர்வுகளை தூண்டமுடியும்.சிலவகை எழுத்துகள் உணர்வுகளை தூண்டி அனுபவிக்கச்செய்கின்றன.சிலவகை மூளையை சிந்திக்கச்செய்கின்றன.எல்லா எழுத்துகளும் ஒருவிதத்தில் மலைப்பாதையை போன்றவை.அவைகளை பின் தொடர்ந்து செல்லும் போது உச்சியில் இருக்கும், எழில்மிகு காடுகளையும்,கோட்டைகளையும், பள்ளத்தாக்கின் ரகசியங்களையும் ரசிக்க முடியும்.
எழுத்துகள் இரண்டு உயிரற்ற பொருட்களின் காதல்பரிசுகள்.தனிமையான அறையில் எழுத்தாளன் காகிதத்தையும்,பேனாவையும் காதலிக்க விடுகிறான்.பேனாவின் கடிவாளத்தை தன்கையில் பற்றி கற்பனையோடு காத்திருக்கிறான்.சில நேரங்களில் இந்த காத்திருப்பு நீண்டுகொண்டே இருக்கும்.அடித்தலும் திருத்தலுமாய் காதல் ஆரம்பிக்கும்.பின் சிறிது சிறிதாக பேனா காகிதங்களின் அங்கங்களை பற்றி அதன் மேல் புரள ஆரம்பிக்கும்.அப்போது எழுத்தாளான் தேர்ந்த குதிரை ஓட்டி போல் பேனாவின் கடிவாளத்தை பற்றி காகிதங்களின் அங்கங்களில் பேனாவின் துணையோடு தன் கற்பனையை பச்சைகுற்றி விடுகிறான்.
ஒவ்வொரு எழுத்தாளானும் ஒருவகையில் சுயநலக்காரன்.அவன் ஒரு காதலை தன் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறான்.கண்டிப்பாக பேனாக்கள் ஆண்கள்தான்.அவைகள் தன் கூரிய நகங்களால் காகிதங்களில் அங்கங்களில் கீறிவிடுகின்றன.காகிதங்கள் அழகான காதலிகள்.அவைகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் காதலனை அரவணைத்துக்கொள்கின்றன.காகிதங்களுக்கும், பேனாக்களுக்கும் இடையேயான இடைவெளி குறைய குறைய எழுத்துகள் பரிணமிக்கின்றன.அதன் உயிர்தன்மை ,நிலைப்புத்தன்மை அவர்களின் காதல் வலிமையை சார்ந்தது.எழுத்துகள் உண்மையில் இரண்டு உயிரற்ற பொருட்களின் காதல் பரிசுகள்.எல்லா எழுத்துகளும் ஒருவகையில் தாஜ்மகால்கள்.
படிக்கவேண்டிய புத்தகங்கள்

8:41 AM
எனது பக்கங்கள்
,
கட்டுரைகள்
,
சிந்தனை நேரம்
சிந்தனை நேரம் : உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்?
Marc
உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்?
பெண்களைப்பற்றி அறிய முதல் பகுதியை இங்கு சொடுக்கி படித்துவிட்டுவரவும்.
இந்த கேள்வியை கேட்டவர் புகழ் பெற்ற மனோதத்துவ மேதை சிக்மண்ட் பிராய்டு.ஆனால் அவருக்கே இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.
சரி பெண்களுக்கு உண்மையில் என்ன தான் வேண்டும்.
அவர்களுக்கு எல்லாமே தான் வேண்டும்.இதை எப்படி புரிந்து கொள்வது.உதாரணமாக ஒரு பெண் 250 ரூபாய் சேலை எடுக்கப்போனால்.கீழ் சொன்னவாரு அவர்கள் நடந்து கொள்வார்கள்.
- எல்லா மாடல்களையும் பொறுமையாக பார்ப்பார்கள்.
- பெரிய பெரிய பூவாக இல்லாமலும் ,வெறும் கட்டம் கட்டமாக இல்லாமலும், நவீன ட்ரண்டாக இருக்க வேண்டும்.
- கண்டிப்பாக எளிமையாக இருக்கக்கூடாது.
- பட்டிக்காட்டுதனமாக இருக்கக் கூடாது.
- அடுத்தவர்கள் பார்த்தவுடன் வாய்பிளக்க வேண்டும்.
- யாருமே கட்டாத,யாருமே கற்பனை கூட கண்டிராத ஒரு சேலை
எளிமையாக சொன்னால் ஒரு ஆயிரம் ரூபாய் சேலைக்கு உரிய தகுதி இருக்க வேண்டும்.மேல் சொன்ன அனைத்து விசயங்களும் பெண்களுக்கு தகுந்த மாதிரி வேறுபடும்.இப்படிதான் அவர்கள் எல்லா தகுதிகளும் உள்ள ஒரு சிறந்த 250 ரூபாய் சேலையை தேர்ந்தெடுப்பார்கள்.
பெண்களை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?
ஏனென்றால் ஒரு பெண்ணுக்கே தான் யார்? தனக்கு என்ன வேண்டும்? என்பது தெரியாது.பிறகு நாம் எப்படி தெரிந்துகொள்வது.
மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொண்டால்.அந்த சேலை எடுக்கும் பெண்ணுக்கே தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறோம் என்பது தெரியாது.பட்டிக்காட்டுதனமான சேலை என்று ஒரு பாய்ண்ட் சொல்லி இருக்கிறேன் என்றால் உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அதற்கு ஒவ்வொரு அர்த்தம் சொல்லுவாள்.பெண்களை புரிந்து கொண்டு சேலை டிசைன் செய்தால் ஒரு பெண்ணுக்கே சேலை டிசைன் செய்வதில் நம் எல்லோருடைய வாழ்க்கையே முடிந்துவிடும்.ஏனென்றால் அவர்களுக்கே என்ன டிசைன் வேண்டும் என்பது தெரியாது.நாம் டிசைன் செய்து காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அவர்கள் உள்ளுணர்வு அதை வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும்.
ஏன் ஒவ்வொரு பெண்ணும் கையில் கைகுட்டை அல்லது பை,தனித்துவமான ஆடை அலங்காராம் செய்கிறார்கள் தெரியுமா?
ஏனென்றால் பெண்களுக்கு அடிப்படையிலே ஒரு பிடிமானமும்,ஒரு தனித்துவ குறியீடும் தேவைப்படுகிறது.உதாரணமாக எல்லா மலர்களும் ஒரே போல் இருந்தால் நமக்கு அதனதன் அழகில் வித்தியாசம் தெரியாது.அது போல் ஒவ்வொரு மலருக்கும் தனித்துவமான அடையாளங்கள் வேண்டும். அப்போது தான் வண்டுகள் குறிப்பிட்ட மலரை அடையாளம் காணமுடியும்.இப்படிதான் தான் பெண்களும் தங்களுக்கென ஒரு அடையாள குறி ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.அப்போது தான் ஆண்களால் எளிமையாக அந்த பெண்ணை அடையாளம் காண முடியும்.
பெண்கள் ஏன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்?
பெண்கள் இயல்பிலே வெளிப்படுத்தும் தன்னை கொண்டவர்கள்.அது அழகானலும் சரி அழுகையானலும் சரி.மனதில் எதையுமே வைத்துக்கொள்ள விரும்புவது இல்லை.அதை வெளிப்படுத்தியாக வேண்டும்.அதனால் தான் பெண்களுக்கு தங்கள் பேச்சை காது கொடுத்து கேட்கும் ஆண்களை ரொம்ப பிடிக்கும்.ஒரு நாள் ஒரு விசயத்தை மனதில் வைத்து வெளிப்படுத்தா விட்டால் பெண்களுக்கு தூக்கமே வராது.உண்மையில் எல்லா ஆண்களும் காதலிக்கும் போது பெண்களின் பேச்சை கேட்பது போல்,பேசிக்கொண்டே இருப்பது போல் நடிக்கிறார்கள்.ஏனென்றால் ஆண்களுக்கு இயற்கையிலே அந்த தன்மை கிடையாது.மேடைப்பேச்சாளர்கள் பாதி பேர் வீட்டில் பேசுவதே இல்லை என்பது தான் உண்மை.பேசிக்கொண்டே இருக்கும் காதல் கல்யாணத்திற்கு பின் நாறிவிடுகிறது என்பதுதான் உண்மை.
இறுதியாக பெண்களுடன் வாழ்வது எப்படி?
இந்த கட்டுரையை நான் எழுத ஆரம்பித்ததே இந்த கேள்விக்காக தான். நாம் எல்லோரும் பெண்களை தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம் இல்லை இல்லை புரிந்து கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை.ஏன்? நாம் யாரும் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை.ஒரு சேலை எடுக்க இவ்வளவு நேரமா?மேக்கப் போட இவ்வளவு நேரமா? என கோபித்துக்கொள்கிறோம்.ஆனால் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிய முயற்சி செய்வதில்லை.உண்மையில் எல்லா பெண்களுக்கும் சில விசயங்களில் ஆலோசகர் தேவைப்படுகிறார்.அவர்களும் கேட்க தயாராகவே இருக்கிறார்கள்.ஆண்கள் மனதில் ஒரு விசயத்தை நினைத்தவுடனே செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.யோசிப்பதில்லை.பெண்கள் பல வழிகளில் யோசித்துக்கொண்டே இருப்பார்கள்.செயல்படுவதில்லை.பெண்களிடம் யோசனைகளை கேட்டுக்கொண்டு ஆண்கள் செயல்பட வேண்டும்.இது தான் இயற்கையான வழி.
மற்றொரு முக்கியமான விசயம் பெண்கள் சார்ந்து வாழ்பவர்கள்.அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்,அன்பை அளிக்கும் ஆணை சார்ந்து வாழ்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு நல்ல அப்பா, நல்ல அண்ணண், நல்ல நண்பன்,நல்ல காதலன், நல்ல கணவன் என நிறைய நல்ல விசயங்கள் தேவைப்படுகிறது.இதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சரி ஏன் கடவுள் பெண்களை மட்டும் இப்படிப்படைத்தான்?
வாழ்க்கையை சுவாரசியமாக்கத்தான்.எல்லாமே புரிந்து விட்டால்,தெரிந்து விட்டால் வாழ்க்கையில் தேடல் நின்றுவிடும்.சுவாராசியம் தீர்ந்துவிடும்.அதனால்தான் கடவுள் தன்னையும் ,பெண்களையும் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு படைத்து விட்டான்.
பெண்களை உற்றுப்பாருங்கள்,கூர்ந்து கவனியுங்கள்,வாழ்க்கையே சுவாரசியமாகி கவிதைபோல் ஆகிவிடும்.
8:11 AM
எனது பக்கங்கள்
,
சிந்தனை நேரம்
சிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி? பகுதி 1
Marc
இந்த உலகில் கால காலமாக சொல்லப்பட்டு வரும் பொய்களில் ஒன்று பெண்களை புரிந்து கொள்ள முடியாது.நம்மால் ஒரு மலரையோ அல்லது பட்டாம்பூச்சியையோ ரசிக்க முடிந்தால்,புரிந்து கொள்ள முடிந்தால் பெண்களையும் ரசிக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியும்.
ஆண்களே இல்லாத, பெண்கள் ஆட்சி செய்யும் பெண்களின் உலகம் எவ்வாறு இருக்கும்?அந்த உலகத்தில் சண்டையே இருக்காது.அந்த உலகத்தில் தண்ணி, தம் இருக்காது.சண்டை வந்தால் சண்டையிடுவதற்கு பதிலாக அந்த நாடு எதிரி நாட்டுடன் பேசிக்கொள்ளாது.அந்த உலகத்தில் கொடிய செயலே கில்லுவதும்,அறைவதுமாக இருக்கும்.
ஒரு ஆங்கில படத்தில் ஒரு அருமையான காட்சி ஒன்று பார்த்தேன்.அது பெண்களின் உலகத்தை , மனதை அருமையாக படம் பிடித்துக்காட்டியது.
படத்தின் கதானாயகன் ஒரு சீன குங்பு மாஸ்டர்.ஜப்பானியர்கள் இந்த குங்பு மாஸ்டரை கொல்ல நினைக்கிறார்கள்.தன்னையும் தன் குடும்பத்தையும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற மனைவியின் வற்புறுத்துதலால் நாட்டைவிட்டே போக முயற்சி செய்கிறான்.அந்த காட்சியில் கதா நாயகன் சொல்லுவான் "நான் எவ்வளவு பெரிய குங்பு மாஸ்டர்!இருந்தும் என்னால் இந்த நாட்டுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.நான் கோழை போல் நாட்டைவிட்டு போக போகிறேன்." அதற்கு அவன் மனைவி சொல்லுவாள்.
"எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை.நீங்கள்,நான் நம் மகன் மூவரும் உயிரோடு இருக்கிறோம்."அது போதும் என்பாள்.
உண்மையில் ஆண்கள் அறிவுப்பூர்வமானவர்கள்.பெண்கள் உணர்வுப்பூர்வமானவர்கள்.ஒரு ஆணுக்கு பித்தாகரஸ் தியரம் அவசியமாக இருக்கலாம்.ஆனால் பெண்ணுக்கு தானும் தன் குடும்பமும் மிக முக்கியம்.உண்மையில் பெண்கள் தான் உலகத்தையே உறவு பாலங்களாக பின்னி பேணிக்காப்பவர்கள் பெண்கள்.
ஒரு ஆணை திட்டிவிட்டால் பத்து நிமிடத்தில் போடா போ என தன் வேலையை பார்க்கப்போய்விடுவான்.ஆனால் பெண்ணோ இடிந்து போய்விடுவாள்.அதிலிருந்து மீள நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.
எந்த டீக்கடையிலாவது பெண்கள் அமர்ந்து அரசியல் பேசியது உண்டா?
இல்லை.
ஏனென்றால் ஆண்கள் புறத்தன்மை வாய்ந்தவர்கள்.அவர்களுக்கு தங்கள் வீட்டைத்தாண்டி சமூகம்,அரசியல் என புறத்தன்மைவாய்ந்த விசயங்கள் வேண்டும்,
பெண்கள் அகத்தன்மை வாய்ந்தவர்கள்.அவர்களுக்கு தங்கள் அழகு,தங்கள் கவுரவம்,தங்கள் பிள்ளை என தங்களை பற்றிய அல்லது தங்களை சுற்றி உள்ளவர்கள் பற்றிய விசயம் மிக அவசியம்.ஒரு பெண்ணுக்கு மன்மோகன்சிங்கை விட அன்று நாதஸ்வரம் சீரியலில் என்ன நடந்தது என்பது முக்கியம்.
ஆண்கள் உடல் வலிமையானவர்கள்.அதனால் தான் ஆண்கள் ஆட்சி செய்யும் இந்த உலகம் இத்தனை வன்முறைத்தனமாக இருக்கிறது.பெண்கள் மன வலிமையானவர்கள்.பெண்களின் உடம்பே அதிக பட்ச வலிகளை தாங்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அதனால் தான் பிரசவம் போன்ற விசயங்களை இலகுவாக தாண்டிவிடுவார்கள்.அது மட்டும் இல்லாமல் ஒரு செயலை எடுத்துவிட்டால் செய்யாமல் விட மாட்டார்கள்.
ஒரு பெண்ணால் தன் எதிரே நிற்பவர்களின் உடல் மொழிகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.உதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பொய் சொல்லுகிறான் என்றால் அந்த பெண்ணால் அவன் பொய் சொல்லுகிறான்,என்பதை ஆணின் உடல் மொழியால் அறிந்து கொள்ளமுடியும்.
ஒரு பெண்ணிற்கு சமுதாயத்தின் மீதும் அதன் கட்டுப்பாடுகளின் மீது எந்த அக்கரையும் இல்லை.அவள் நினைத்தால் அத்தனைக்கட்டுப்பாடுகளையும் எளிதாக உடைத்து தாண்டிவிடுவாள்.
ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண் நண்பர்கள் இருக்க முடியும்.ஆனால் ஒரு ஆணுக்கு இரண்டு பெண் நண்பர்கள் இருந்தால் அவன் செத்தான்.
பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு உலகம்.அவர்களுக்கென பிடித்தமான விசயங்கள்,செயல்பாடுகள்,கட்டுப்பாடுகள் எல்லாம் பெண்ணிற்கு பெண் வேறுபடும்.
தன்னை மதிக்கும்,தன்னை காக்கும்,தன் மேல் அன்பைப்பொழியும் ஆண்களையே பெண்களுக்கு பிடிக்கும்.ஒரு ஆண் வலிமையற்றவனாய்,அன்பில்லாதவனாய் இருந்தாள்.உடனே அவனை விட்டு விலக ஆரம்பிப்பாள்.
பெண்களுக்கு உள்ளுணர்வு தன்மை அதிகம்.அதனால் அவர்கள் எதிரிகள் அருகில் வரும் போதே முறைக்க அல்லது எதிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஒரு ஆண் துரோகங்களையும்,அவமானங்களையும் எளிதாக மறந்து விடுவான்.ஆனால் ஒரு பெண் துரோகங்களை,அவமானங்களையும் மறக்கவும் மாட்டாள்.மன்னிக்கவும் மாட்டாள்.
தொடரும்............
மேலும் வாசிக்க
திகில் கதை : வேண்டாத வேலை
சிந்தனை நேரம் : கொடைக்கானல் துன்பச்சுற்றுலா
8:01 AM
அறிவியல் கட்டுரைகள்
,
எனது பக்கங்கள்
,
சிந்தனை நேரம்
சிந்தனை நேரம் : கொடைக்கானல் துன்பச்சுற்றுலா
Marc
எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் ஆச்சு.நானும் கல்யாணம் ஆன புதுசுல ஊட்டிக்கு போலாம்னு பிளான் பன்னி இருந்தப்ப எங்க வீட்டுல விடல.அதுக்கப்பறம் குழந்தை , வேலைனு டூர் பத்தி நினைக்கறதுக்கே நேரம் இல்லாம போச்சு,சரி இந்தவாட்டி கொடக்கானல் போலாம்னு ஒரு சின்ன பிளான் பன்னினேன்.பிளான் இது தான்.எனக்கு சனி,ஞாயிறு வார விடுமுறை.அதனால் வெள்ளிக்கிழமை மதியம் மூணு மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பி ஏழு மணிக்குள்ள கொடைக்கானல் போய் சேரனும்.அங்க போய் ரூமும் வாடகை காரும் பிடிச்சு சனி ஞாயிறு இரண்டு நாள் ரிலாக்ஸா கொடைக்கானல என்ஜாய் பன்னனும்.ஆனா என் பிளான் எப்படியெல்லாம் சொதப்பி, நான் என்ன அனுபவிச்சேன் என்பது தான் இந்த கட்டுரை.
என்னுடைய பிளான்படி சரியா மாலை 3.30க்கு நான் , என் மனைவி ஒரு வயது மகள் மூவரும் ஆரப்பாளையம் பஸ்டாண்டிற்கு ஆட்டோவில் போய் சேர்ந்தோம்.அங்கே போய் விசாரித்த பிறகுதான் தெரிந்தது அங்கிருந்து கொடைக்கானலுக்கு நேர் வண்டி 5.20க்கு என்று.சரி அங்கிருந்து வத்தலகுண்டு சென்றால் கொடைகானலுக்கு வேகமாக போய்விடலாம் என்று அங்கிருந்து டீகடைக்காரர் சொன்னதால் நேராக வத்தலகுண்டு சென்றோம்.ஆனால் வத்தல்குண்டிலும் இதே நிலைமைதான்.அங்கிருந்தும் கொடைக்கானலுக்கு அடிக்கடி பஸ் இல்லை.வத்தலகுண்டில் பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின் ஒரு வண்டி வந்தது.அந்த வண்டியில் நிற்ககூட இடமில்லை.ஆனால் வேறு வழி இல்லாமல் நாங்கள் அந்த வண்டியில் ஏறினோம்.
ஏறி பதினைந்தாவது நிமிடத்தில் என் மகள் அழ ஆரம்பித்தாள்.நானும் என் மனைவியும் நின்று கொண்டே என் மகளை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தோம்.ஆனால் அவளோ பஸ்ஸே ரெண்டாகும் அளவுக்கு கத்த ஆரம்பித்தாள்.தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவி தன் பையில் இருந்த ஒரு சாக்லேட்டை என் மகள் கையில் கொடுத்தாள்.என்மகளும் சாக்லேட் தின்னும் ஆசையில் சமாதானமானாள்.ஆனால் எல்லாம் ஐந்து நிமிடம் தான்.மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.
இதைப்பார்த்து என் மனைவி நின்று கொண்டிருந்த சீட் அருகில் இருந்த பெண்மணி கருணையோடு தன் சீட்டை என் மனைவிக்கு கொடுத்தார்.ஆனாலும் என் மகள் அழுகையை நிறுத்தவில்லை.வேறு வழி இல்லாமல் என் பையில் இருந்த டேப்லட் கணிணியை இயக்க ஆரம்பித்தாள் என் மனைவி.உடனே என் மகள் அழுகையை நிறுத்திவிட்டாள்.இதற்குள் பஸ் மலைப்பகுதியின் கால்வாசி தூரத்தை கடந்திருந்தது.திடீரென ஒரு வளைவில் பஸ் நின்றுவிட்டது.பஸ் முழுவதும் புகையால் நிரம்ப ஆரம்பித்தது.எல்லோரும் பஸ்ஸில் இருந்து வேகமாக இறங்கி சாலையில் நின்றோம்.இனி பஸ் நகராது என டிரைவர் சொல்லிவிட்டு மாற்று வண்டிக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.
வேறு என்ன செய்வது என்று தெரியாமல் நானும் என் மனைவியும் ரோட்டில் நின்று கொண்டிருந்தோம்.என் மகளும் குளிரில் அழ ஆரம்பித்தாள்.ஆனால் அவளை சாமாதானம் செய்ய முடியாமல் வெறுப்பின் உச்சிக்கே சென்றோம்.அருகில் இருந்தவர்கள் போகும் வண்டிகளிடம் லிப்ட் கேட்டு ஏற ஆரம்பித்தார்கள்.பத்து நிமிட காத்திருப்புக்கு பின் தூரத்தில் ஒரு வேன் வந்து நின்றது.அது கல்லூரி மாணவிகளை ஏற்றிவரும் வேன் என்பதால் எங்களை ஏற்ற மறுத்தார்கள்.ஆனால்கையில் குழந்தையுடன் கொட்டும் பனியில் நிற்பதை பார்த்து எங்களை ஏற்றிக்கொண்டார்கள்.என் மகளும் வேனில் ஏறியவுடன் அழுகையை நிறுத்திவிட்டாள். நான் டிரைவர் சீட் அருகிலும் என் மனைவி உள்ளே மாணவிகளுடன் போய் அமர்ந்து கொண்டாள்.
வண்டி மெதுவாக கொடைக்கானலை நெருங்கும் போது டிரைவர் என்னிடம் எங்கு இறங்க வேண்டும் என்றார்?நான் பஸ்டாண்ட் என்றேன். நீங்கள் ரூம் எடுத்துவிட்டீர்களா? என்றார். நான் இல்லை என்றேன்.உடனே அவர் ஒரு கார்டை என்னிடம் காட்டி தாங்கள் லோக்கல் கொடைக்கானல் டிரைவர்கள் என்றும் ரூம் மற்றும் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்பவர்கள் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.அது மட்டுமில்லாமல் கொடைக்கானலில் ஏமாற்றுபவர்கள் அதிகம் என்பதால் தாங்களே ரூம் ஏற்பாடு செய்யலாமா, என கேட்டார்கள்? நானும் சரி என தலையசைத்தேன்.உடனே கிளினர் யாருக்கோ போன் செய்து வரச்சொன்னார்.
வண்டி கொடைக்கானலை அடைந்ததும் அங்கே ஒருவர் எங்களுக்காக காருடன் காத்துக்கொண்டிருந்தார். நாங்கள் காரில் ஏறி பஸ்டாண்டில் இருக்கும் அவருடைய ஏஜன்ஸிற்கு சென்றோம்.அங்கே எந்த மாதிரி ரூம் வேண்டும் என்றார்.நான் சிங்கிள் பெட் உள்ள ரூம் வேண்டும் என்றேன்.அவர் தன் மேஜையின் மீது இருந்த அந்த ரூமின் போட்டோவை காட்டி இது ஓகேவா என் கேட்டார்?நானும் என் மனைவியும் ஓகே என்றோம்.அங்கிருந்து ஓட்டலுக்கு வந்த காரிலே சென்றோம்.ஓட்டலுக்கு சென்று பார்த்தால் எனக்கும் என் மனைவிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.ஆம் எங்களுக்கு போட்டோவில் காட்டிய அறைக்கும் நாங்கள் நேரில் பார்க்கும் அறைக்கும் சம்பந்தமே இல்லை.நாங்கள் ஏமாற்றப்பட்டதை நொந்து கொண்டு வேறு வழி இல்லாமல் அதே அறையில் தங்கினோம்.
மறுநாள் காலையில் மீண்டும் அந்த ஹோட்டலின் ஓனர் எங்களை வந்து சந்தித்தார்.சுற்றிப்பார்க்க கார் அல்லது வேனை ஏற்பாடு செய்யட்டுமா என கேட்டார்? நான் யோசித்துக்கொண்டே நின்றேன்.உடனே தன் சட்டை பையிலிருந்து ஒரு அட்டையை எடுத்து என்னிடம் நீட்டினார்.அதில் எந்ததெந்த இடங்களை எல்லாம் சுற்றி காட்டுவார்கள் என ஒரு லிஸ்ட் இருந்தது.அதுவும் தலைக்கு150,200,350 என பணத்தின் அடிப்படையில் மூன்று வகையாக இருந்தது. நானும் என் மனைவியும் 350 ரூபாய் வகையை தேர்ந்தெடுத்தோம்.அவர் அங்களிடம் பணத்தை வாங்கிவிட்டு வண்டி பத்து மணிக்கு வரும் என்றார்.நாங்களும் வேகமாக சாப்பிட்டுவிட்டு ரிசப்சனில் பத்து மணிக்கு காத்திருந்தோம்.மணி 10.30 ஆகியும் வண்டி வரவே இல்லை.போன் பன்னி கேட்டதற்கு பாரஸ்ட் ட்ரிப் என்பதால் காட்டிலகா அதிகாரிகளின் அனுமதி சீட்டிற்காக காத்திருப்பதாக சொன்னார்கள்.மூன்று முறை போன் செய்த பின்பு 11.30 ஒரு வேன் வந்து சேர்ந்தது.அதற்குள் ஒரு கைடு,டிரைவர் மேலும் எங்களைப்போல ட்ரிப் கேட்டிருந்தவர்களும் இருந்தார்கள்.
வண்டி சரியாக இரண்டு வளைவுகள் பயணம் செய்து ஒரு ஓரம் போய் நின்றது.அந்த இடம் தான் கோக்கர்ஸ்வாக் எனவும் ,எதிரே இருப்பது பூங்கா எனவும் அதனதன் வரலாறை ஒரு நிமிடம்கூறி எல்லோரும் இரண்டையும் சுற்றி பார்த்துவிட்டு சரியாக ஒரு மணிக்கு வண்டி நிற்கும் இடத்திற்கு வருமாறு கூறினார்கள்.அந்த இரண்டு இடங்களுமே நாங்கள் இருந்த ஹோட்டலின் அருகில்தான் இருந்தது .நாங்கள் மறுபடியும் நொந்து கொண்டு இரண்டு இடங்களைசுற்றி பார்த்துவிட்டு வேன் நிற்கும் இடத்திற்கு வந்தோம்.அங்கிருந்து வேன் வேகமாக மலைக்காட்டிற்குள் பயணம் செய்ய ஆரம்பித்தது.போகும் வழியில் வண்டியில் இருந்தவாரே எல்லா இடங்களை சொல்ல ஆரம்பித்தார்கள்.பேருக்கு இரண்டே இடங்களில் இறக்கிவிட்டார்கள்.மதியம் உணவிற்கு மலை உச்சியில் தனியாக இருந்த ஒரு கடையில் இறக்கிவிட்டார்கள்.அங்கு சாப்பாடு மட்டும் இருந்தது.பொறியல் காலியாகியிருந்தது.ஆனால் விலையோ அறுபது ரூபாய்.என்ன சொல்ல வேறுவழியில்லாமல் சாப்பிட்டோம்.
அங்கிருந்து மறுபடியும் வேனில் புறப்பட்டு சரியாக நான்கு இடங்களை வேனில் இருந்தவாறே காட்டினார்கள்.பேருக்கு குணாக்குகையில் மட்டும்
இறக்கிவிட்டார்கள்.கடைசியில் எங்களை ஏரி கரையில் இறக்கிவிட்டு தலைக்கு ஐம்பது எக்ஸ்ட்ரா ஜார்ஜ் வாங்கிக்கொண்டார்கள்.கேட்டதற்கு டிரைவர்,கிளினர் சம்பளம் என்றார்கள்.உண்மையில் ஒரு மணி நேர வேன் பயணம் இதற்கு தலைக்கு இவர்கள் வாங்கிய பணம் 400.நாங்கள் உண்மையில் வெறுப்பின் உச்சிக்கே சென்றோம்.மறுநாள் காலை நாங்கள் எந்த ட்ரிப்பும் ஏற்பாடு செய்யாமல் நாங்களே நடந்து பார்க்,ஏரி என சுற்றிப்பார்த்து கொடைக்கானலில் இருந்து கீழே இறங்கினோம்.
உண்மையில் மொத்த கொடைக்கானல் டூரிலும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதுதான் உண்மை.இதற்கு நான் செய்த முட்டாள்தனமான பிளான்தான் காரணம்.ஆனால் என் மனதை உறுத்துவது ஒன்றேதான்.மனிதன் சகமனிதனை ஏமாற்றிவாழும் அந்த வாழ்க்கைதான்.பத்து ரூபாய்க்கு எத்தனை பொய் எத்தனை புரட்டு.தங்களை நம்பிவந்தவர்களை முதுகில் குத்தும் கூட்டத்தை நான் இப்போது தான் நேரில் பார்க்கிறேன்.ஆனாலும் இவ்வளவு கெட்ட மனிதர்கள் நடுவிலும் நிறைய நல்ல மனிதர்களையும் சந்தித்தேன்.
கொட்டும் பனியில் மலை ரோட்டில் கையில் குழந்தையுடன் லிப்ட் கேட்கும் போது வண்டியை நிறுத்தி இடம் கொடுத்த வேன் டிரைவர்.என் மகளுக்காக தான் உட்கார்ந்திருந்த இடத்தை கொடுத்த அந்த பெண்.அவ்வளவு பேருந்து கூட்டத்திற்கு நடுவிலும் என் மகளின் அழுகையை சமாதானப்படுத்த தன் பையில் இருந்த சாக்லேட்டை எடுத்துக்கொடுத்த கல்லூரி மாணவி என் நிறைய நல்ல மனங்களையும் சந்தித்தேன்.
மகாபாரத்தில் துரியோதனன் தலைமையிலான கெளரவர்கள் படை எல்லாவிதத்திலும் பெரியதாகவும், திறமையானவர்களை கொண்டதாகவும் இருந்தாலும்,ஏன் போர் சொல்லிக்கொடுத்த குருதேவரே அவன் பக்கம் இருந்தும் ஏன் தோற்றார்கள் என ஓசோவிடம் ஒரு கேள்விகேட்கப்பட்டது?
அதற்கு அவர் ஒரு மனிதன் ஒரு செயலை செய்யவோ அல்லது இலக்கையோ அடையவோ திட்டமிடும் போது இது இப்படிதான் நடக்கும் மிகுந்த நம்பிக்கை கொள்கிறான்.ஆனால் கண்ணுக்கு புலனாக சக்திகள் அதில் செயல்பட ஆரம்பிக்கும் போது எல்லாம் தலைகீழ் ஆகிவிடுகிறது.நினைப்பதொன்று நடப்பதொன்றாகி விடிகிறது.துரியோதனனும் தன் முழு திறமையுடன் திறமையான ஆட்களை தன் படையில் இணைத்து வெற்றி பெருவோம் என மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டான்.ஆனால் கடவுள் கண்ணண் ரூபத்தில் வந்து எல்லாவற்றையும் மாற்றிப்போட்டுவிட்டார்.எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.தோற்கவேண்டியவன் ஜெய்த்துவிட்டான்,ஜெயிக்க வேண்டியவன் தோற்றுவிட்டான்.
உண்மையில் கொடைக்கானல் கிளம்பும்முன் இன்பச்சுற்றுலா என நினைத்தேன்.ஆனால் அதுவே துன்ப சுற்றுலாவாக மாறி நல்ல அனுபவத்தை கொடுத்தது என்பதுதான் உண்மை.
மேலும் வாசிக்க
சிந்தனை நேரம் : உடல் எடையும் ,குறைக்கும் வழிமுறைகளும்
7:42 AM
எனது பக்கங்கள்
,
சிந்தனை நேரம்
சிந்தனை நேரம் : உடல் எடையும் ,குறைக்கும் வழிமுறைகளும்
Marc
இன்றைய சூழலில் பல ஆயிரம் கோடி லாபம் தரும் தொழில் எது என்றால் அது உடல் எடையை குறைக்கும் கருவிகளை,மாத்திரைகளை தயாரிக்கும் தொழில் தான்.ஏனென்றால் மேற்கில் மூன்றில் ஒரு பங்கு ஆணும்,பெண்ணும் அதிக எடையுடன்(overweight) இருப்பதாக ஒர் ஆராய்ச்சி சொல்கிறது.அதுமட்டுமில்லாமல் இயல்பான எடையில் இருப்பவர்கள் கூட மனதளவில் தாங்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்து கவலைப்படுகிறார்கள்.
குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் தாங்கள் அதிக எடையில் இருப்பதாக நினைத்து கவலைப்படுகிறார்கள்.டாக்டர் ஜெப்ரி என்பவர் இரண்டாயிரம் பேரிடம் எடுத்த ஒரு சர்வேயில் 72 சதவீதம் பெண்கள் உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி(diet) கிடப்பதாகவும் ,44 சதவீத ஆண்கள் இயல்பான எடையில் இருப்பதாகவும் கூறிவுள்ளார்.
பட்டினி இருப்பது இன்று ஒரு நாகரீகமாகிவிட்டது.உண்மையில் இது நீண்டகாலம் நீடிக்காமல் மனஅழுத்தத்தில் கொண்டுபோய்விடுகிறது.இதில் வேதனை தரும் விஷயம் பதினைந்து வயதிற்குட்பட்ட மூன்றில் ஒரு பள்ளி குழந்தை உடல் எடையை காக்கிறேன் என்று பட்டினி கிடக்கிறது.
நான் குண்டாக(Obesity) இருக்கிறேன்.அதிக எடையில் அசிங்கமாக இருக்கிறேன்,இது போன்ற மன அழுத்தங்கள் தோன்றி பட்டினி கிடந்து,மருந்து சாப்பிட்டு வாழ்வை சீரழிக்கின்றன.உண்மையில் மன அழுத்தம் உள்ளவர்கள் தான் அதிகமாக உண்டு உடல் எடையினால் அவதிப்படுகிறார்கள்.
இவற்றில் இருந்து வெளியேறி ஆரோக்கியமான உடல் எடையை எப்படி தக்கவைப்பது?
- நாம் எல்லா விசயத்தையும் முதலில் மனதளவில் புரிதளோடு தொடங்க வேண்டும்.
- முதலில் நாம் அதிக எடையுடன் இருக்கிறோம் என்ற மன அழுத்தத்தில் இருந்து வெளியேருங்கள்.இதை எப்படி செய்வது?
- உங்கள் எடை கூடியதற்கு நீங்கள் நீண்டகாலம் மேற்கொண்ட தவறான உணவு பழக்கவழக்கம் தான் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.
- அதே போல் உடல் எடைகுறையவும் நீண்டகாலம் ஆகும் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.
- உடலின் செயல்முறைகளை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்.உண்மையில் நம் உடல் ஓர் அற்புதம் என்பதை உணருங்கள்.
- நாம் பட்டினி கிடக்கும் போதோ அல்லது பத்தியம் இருக்கும் போதோ உடல் இயங்க தேவையான ஆற்றல் குறைந்து உடல் தன் இயக்கத்தை மெதுவாக்குகிறது,இது கொழுப்பை கரைக்கும் செயலையும் மெதுவாக்குகிறது. நீங்கள் நன்றாக சாப்பிடும் போது கொழுப்பை கரைக்கும் உடலின் செயல் துரிதமாகிறது.எனவே நன்றாக சாப்பிடுங்கள்.
- அறிவியல்ஆய்வுகள் சொல்கின்றன வருடத்திற்கு ஒரு மனிதன் அதிகபட்சமாக ஆறுகிலோ வரைக்கும் குறைக்கலாம் என்று. நீங்களோ உங்கள் நண்பரோ ஆறுகிலோவை ஒரு மாதத்தில் குறைத்தால் பக்கவிளைவுகள் நிச்சயம்.அடுத்தடுத்த மாதத்தில் மீண்டும் உடல் எடை வேகமாக கூட ஆரம்பிக்கும்
- எந்த மருந்தும் உடல் எடையை நீண்ட நாள் குறைத்து தக்கவைக்க முடியாது என்பதை உணருங்கள்.
- இரவில் கொழுப்பு உணவை தவிர்த்து விடுங்கள்.ஏனென்றால் இரவில் உடல் தன் இயக்கத்தை குறைத்து உணவை கொழுப்பாக மாற்றுகிறது.
- நீண்ட காலம் கடைபிடிக்க முடிந்த ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.உதாரணமாக காலையில் ஐந்து இட்லி,மதியம் இரண்டு கப் உணவு,இரவு ஒரு கப் உணவு அல்லது இரண்டு சப்பாத்தி என்று உடல் உழைப்பிற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
- சிலர் திரவ உணவுகளை மட்டும் உட்கொள்வதால் உடலுக்கு போதிய ஆற்றல் இல்லாமல் உடனே பசி ஏற்படுகிறது.
- தண்ணீர் அதிகம் குடியுங்கள்.ஏனென்றால் தண்ணீர் அதிகம் குடிக்காமல் பசிக்கும் தாகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுகிறது.
- உணவை பற்றியும்,உடல் எடை பற்றியும் அதிகம் சிந்திப்பதை நிறுத்துங்கள்.
- உணவை மெதுவாகவும்,அணுஅணுவாகவும் ரசித்து சாப்பிடுங்கள்.
- ஒரு நாள் அதிகம் சாப்பிட்டுவிட்டால் கவலைப்படுவதை விட்டு அடுத்த நாள் இரண்டி நிமிடம் அதிகம் உடற்பயிற்சி செய்து குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
- யோகா,தியானம் போன்ற நல்ல விசயங்களில் கவனம் செலுத்துங்கள்.
- இறுதியாக உடல் எடை குறையாவிட்டால் உங்களை நினைத்து கவலைப்படுவதை விட்டு, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
http://www.fatmatters.com/top-10-dieting-mistakes/
http://www.fatmatters.com/tag/psychology-of-dieting/
http://www.fatmatters.com/how-to-stay-committed-to-losing-weight/
8:34 AM
அறிவியல் கட்டுரைகள்
,
சிந்தனை நேரம்
சிந்தனை நேரம் : டிப்பிங் பாய்ன்ட்(tipping point)
Marc
ஒரு பொருள் அல்லது செயல் அதன் உச்சகட்ட அளவை எட்டுவதை ஆங்கிலத்தில் டிப்பிங் பாய்ன்ட்(tipping point) என்பார்கள்.சில நேரங்களில் சமுதாயத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் ,சில பொருள்கள் அதன் உச்சகட்ட அளவை எட்ட காரணமாகலாம்.உதாரணமாக விளம்பரம் இல்லாமல் சாதாரணமாக வெளிவரும் ஒரு சிறு முதலீட்டு திரைப்படம் மவுத்டாக்(mouth talk) எனப்படும் வாய்வழி விளம்பரங்களாலும் ,இனணயதள விளம்பரங்களாலும் அதன் உச்சகட்ட வெற்றியை பெற்று சக்கைபோடு போடும்.ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலும் டிப்பிங் பாய்ன்ட்(tipping point)க்கு ஒரு சிறந்த உதாரணம். அவர் மக்களிடம் திடீரென்று பிரபலமாகி டெல்லி முதல்வர் ஆகிவிட்டார்.
சரி இப்படி திடீரென்று ஒரு பொருள் அல்லது செயல் சந்தையில் பிரபலமாகி அதன் உச்சகட்ட வளர்ச்சியை அடைய காரணம் என்ன?இதை நாம் நம் வளர்ச்சிக்கோ அல்லது நாம் சார்ந்த தொழிலுக்கோ பயன்படுத்த முடியுமா?
கண்டிப்பாக முடியும் .நம்மால் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் சிறு மாற்றங்களை செய்ய முடியுமானால் நாம் உச்சகட்ட அளவு வெற்றியை எட்டமுடியும்.
நாம் முதலில் சொன்ன சிறு முதலீட்டு படத்தை எடுத்துக்கொள்வோம்.படம் வெளியாகி சரியாக 6 மணி நேரம் கழித்து ஒரு பத்து பேர் சேர்ந்தார் போல் படம் நன்றாக இருக்கிறது என்று இணையத்தில் எழுதினால் போதும்.அப்புறம் வாய்வழியாக ஒரு பத்து பேரிடம் படம் சூப்பர் என்று சொன்னால் போதும்.கண்டிப்பாக இது படத்தின் லாபத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.இதே போல் சில நல்ல படங்கள் கூட மோசமான விமர்சனங்களால் ஓடாமல் கூட போயிருக்கிறது.
இதற்கு காரணம் செயல்களின் பரவும்தன்மை.உண்மையில் ஒவ்வொரு செயலும் வைரஸ் போல் பரவும்தன்மை கொண்டவை.நான் கொட்டாவி என்று சொல்லும் போதும் சரி அல்லது கொட்டாவி விடும் சத்தத்தை நீங்கள் உங்கள் மொபைலில் பதிவு செய்து கேட்கும் போதும் சரி உங்களுக்கு கொட்டாவி வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு செயல்களின் பரவும்தன்மை மிக முக்கியமான ஒன்று.
'வதந்திகள்' பரவும்தன்மைக்கு அருமையான உதாரணம்.பிள்ளையார் பால் குடிக்கிறார் என்ற வதந்தி காட்டு தீ போல பரவி எல்லோரும் அருகே உள்ள பிள்ளையார் கோவிலுக்கு படையெடுத்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.
சில நேரங்களில் சமுதாயங்களில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட மிக பெரிய விளைவை ஏற்படுத்தலாம்.உதாரணமாக இன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திடீரென அதன் உச்ச அளவை எட்டி இருக்கின்றன.இதற்கு சமுதாயத்தில் ஏற்பட்ட இரண்டு முக்கியமான காரணங்கள் தான்.ஒன்று இணையதளம் சுருங்கி ஒவ்வொருவர் உள்ளங்கைகளிலும் கைபேசியாக அமர்ந்திருப்பது.மற்றொன்று பாலியல் குற்றங்கள் பற்றிய செய்திகள் இணையதளம் மற்றும் செய்திதாள்கள் வழியாக மக்களிடம் வேகமாக பரவுவது.இவை இரண்டும் மக்களிடம் பாலியல் விசயங்களை குறையாமல் பரப்புவதுதான்.
ஒரு தனிமனிதனின் செயல்கள் கூட அவர்கள் வாழ்வில் உச்சகட்ட மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கு ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் சிறந்த உதாரணம்.அவருக்கும் அன்னஹசாரேவுக்கும் இடையேயான சிறு கருத்து வேறுபாட்டையும்,ஊழலுக்கு எதிரான மக்களின் உறுதியான மனப்பாங்கையும் அவர் வழுவாக பயன் படித்திக்கொண்டார்.டெல்லி முதல்வர் ஆனார்.தன் வாழ்வின் உச்சகட்ட வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கிறார்.
ஒரு நாள் சுப்பர் மார்க்கெட்டில் நூடுல்ஸ் வாங்க போயிருந்தேன்.ஆனால் எந்த கம்பெனி நூடுல்ஸ் வாங்கனு தெரியல.டக்னு மனசு டாப் ராமன்(top raman) னு மனசு சொல்லுச்சு. நான் ஏன் டாப் ராமன் வாங்குனேனு யோசிச்சா! டிவியில தினமும் அந்த கம்பெனி விளம்பரம் தான் ஓடிட்டு இருக்கு.அது என் மனசுல எப்பவோ பதிஞ்சு போயிருந்தது. நான் எதை வாங்கனு குழப்பமா இருந்த போது எனக்குள்ள இருந்த டாப் ராமன்(top raman) விளம்பரம் அதோட வேலைய காட்டிருச்சி.ஒரு விளம்பரம் எப்படி எல்லாம் வேலை செய்யுது பாருங்க.
வாழ்க்கையில் அல்லது தொழிலில் வெற்றி பெற நாம் பெரிய மாற்றங்கள் செய்ய தேவையில்லை.சிறு மாற்றங்களே போதும் என்பதை சொல்வது தான் இந்த டிப்பிங் பாய்ன்ட்(tipping point).

7:53 AM
அறிவியல் கட்டுரைகள்
,
சிந்தனை நேரம்
Subscribe to:
Posts
(
Atom
)