அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

பேசாத பக்கங்கள் : விடலைப் பருவமும் உணர்வு தூண்டல்களும் 1

No comments
எதை எதையோ பேசிவிட்டு,பேச வேண்டிய சில விசயங்களை பேசாமல் மறந்து விடுவது மனிதனின் இயல்பு.வாழ்க்கையென்னும் புத்தகத்தில் எல்லா பக்கங்களையும் எல்லோரும் படிப்பதில்லை.படிப்பதில்லை  என்பதைவிட படிக்க விரும்புவதில்லை.அப்படியெல்லோரும் பேச மறுக்கும் பக்கங்களில் ஒன்று விடலைப் பருவமும் அப்போது ஏற்படும் உணர்வு தூண்டல்களும்.



விடலைப்பருவம் என்றவுடன் முதல் காதல் ,நண்பர்கள் அரட்டை என மேம்போக்காக மட்டுமே பேசிக்கொண்டே போவோம்.அந்த பருவத்தில் ஏற்பட்ட எதிர்பாலின ஈர்ப்பு, உடல் மாற்றங்கள்,உணர்வு மாற்றங்களை என முக்கியமான விசங்களை பேச மாட்டோம்.அவை ஏன் ஏற்படுகின்றன?அவற்றை எப்படி சமாளிக்க வேண்டும் என்று நமக்கு யாரும் சொல்லி தருவதில்லை.

இன்று செய்திதாள்களை படிக்கும் போது பாலியல் சம்பந்தமான குற்றங்களே அதிகமாக காணப்படுகின்றன.பாலியல் குற்றங்கள் என்றாலே,குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் என்று உடனே போர்க்கொடி தூக்கிவிடுகிறார்கள்.உண்மையில் எல்லா குற்றங்களுக்கும் ஏதோ ஒருவகையில் இந்த சமூகமும் காரணமாக உள்ளது.பசிக்கும் போது எப்படி சாப்பிட்டு பசியை போக்க வேண்டும் என்று சொல்லி தரும் சமூகம்,ஒரு மனிதனின் உடலில் காமம் தலை தூக்கும் போது அதை எப்படி போக்க வேண்டும் என்று சொல்லி தருவதில்லை.அதற்கு வடிகாலும் அமைத்து தருவதில்லை.

மனிதனும் இந்த பிரபஞ்சத்தால் படைக்கப்பட்டஒரு மிருகமே.என்ன வித்தியாசம் என்றால் மனிதன் சிந்திக்க தெரிந்த மிருகம்.பசியெடுத்தால் அதை எப்படி முறைப்படி போக்கி கொள்ள  வேண்டும் என சட்டதிட்டங்கள் வகுத்து அதன் படி வாழும் மிருகம்.ஆனால் எல்லா மிருகங்களுக்கும் உயிர்வாழ அடிப்படையான மூன்று விசயங்கள் தேவை.
  1. உணவு
  2. பாதுகாப்பு
  3. காமம்
மேற்சொன்ன மூன்று விசயங்களும் இயற்கையான  உணர்வுகள். இதில் எது ஒன்று குறைந்தாலும் மனிதன் மிருக நிலைக்கு தள்ளப்பட்டு போராட ஆரம்பிப்பான்.உலகத்தில் நடக்கும் பாதிக்கு மேல் குற்றங்களுக்கு இவையே காரணம்.அதிலும் விடலைப்பருவத்தில் ஏற்படும் காம உணர்வுகள் கட்டுப்பாடில்லாமல் இருக்கும்.அந்த பருவத்தில்தான் உடலும்,மனமும் தனது முழுபலத்தையும் காமத்தின் பக்கம் திருப்பும்.இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கை கொடுக்கும் ஒரே பணி காமத்தின் வழியே சந்ததியை பெருக்குவது.விடலைப் பருவத்தில் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு இனம் புரியாத தடுமாற்றத்தில் இருப்பான்.கவிஞர்கள் சொன்ன மாதிரி கல்லுக்கு சேலைகட்டி தொட்டுப்பார்க்கும் வயது அது.

காமம் ஒரு குற்றம் என்றால் அந்த உணர்வை படைத்த கடவுளும் ஒரு குற்றவாளிதான். நாம் காமத்தையும் குற்றம் என்கிறோம்,அதை பற்றி பேசு பவர்களையும் குற்றவாளி என்கிறோம்.உண்மையில் மனிதன் மட்டுமே ஒரு நாளில் பாதி நேரமும்,வருடத்தில் எல்லா நாளும் காமத்தை பற்றி நினைக்கிறான்.பொய்யென்றால் நாய்களைப் பாருங்கள்.அதற்கான மாதத்தை தவிர வேறு மாதத்தில் இணை சேருவதில்லை.எந்த நாயும் இன்னொரு நாயை கற்பழித்து கொல்லுவதில்லை.அந்த பெண் நாயின் அனுமதி கிடைக்காத வரையில் அதை தீண்டுவதில்லை.சாதாரண நாய்களுக்கே அழகான சட்டம் இருக்கும் போது மனிதர்களுக்கு ஏன் இல்லாமல் போனது.இதற்கான காரணத்தை கண்டுபிடித்தால் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம்.

நாய்களைப் பொறுத்தவரை உணவு மற்றும் பாதுகாப்பு என்பது அன்றாடம் போராடி பெற வேண்டிய ஒரு நிலை.எனவே வாழ்வின் பெரும்பகுதியை உணவு மற்றும் பாதுகாப்புக்காக செலவிட வேண்டிய நிலை.விடலை பருவத்தை எட்டுவதே அதிசயமான ஒன்று.அப்படி எட்டிவிட்டால் சம்மதிக்கும் துணையுடன் இணையலாம்.

ஆனால் மனிதனைப் பொறுத்தவரை விடலைப் பருவம் என்பது ,படிப்பு, பொறுப்பு என கடக்க வேண்டிய முக்கியமான கட்டம்.ஆனால் ஏற்கனவே உணவு ,பாதுகாப்பு என்பது இயல்பாக எல்லோருக்கும் இயல்பாக கிடைப்பதால் மூன்றாவது நிலையான காமமே மேலோங்கி இருக்கும்.தற்போது ஏற்பட்டுள்ள கையடக்க தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் நாகரீக கவர்ச்சி வாழ்க்கை காரணமாக கனியாக மாறவேண்டிய காமம்.வெறியாக மாறிவிடுகிறது.அடைந்தே தீர வேண்டும் என்று இயற்கையான உணர்விற்கு எதிராக தடை ஏற்படும் போது வெறி உச்சமாகி மிருகத்தின் நிலையை விட கீழாக போகிறான்.

இயற்கையிலே ஆண் பெண்ணை தேடுபவன்.பெண் ஆணை தேர்வு செய்பவள்.மற்றவையெல்லாம் வெறும் பசப்பு வேலைதான்.ஆனால் என்னென்ன வழிகளில் முடியுமோ, அவ்வளவு வழிகளிலும் ஒரு ஆணுக்கு  மறுக்கப்படும் போது அவன் இயல்பாகவே போராடுவான்.விடலைப்பருவத்தில் இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு ஆணின் காமத்தை உச்ச நிலைக்கு எவ்வளவு தூண்ட முடியுமோ அவ்வளவு தூண்ட வசதிகள் வந்துவிட்டன.ஆனால் அதை அவன் முறையாக தீர்த்துக்கொள்ள வேண்டிய வடிகால் கிடைக்காத காரணத்தினால் இளம் வயது குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

------------------------------------------தொடரும்----------------------------------------------------------





No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..