கதை நேரம் : நாமே புத்தர்கள்
ஜென் தத்துவமோ அல்லது கோட்பாடோ அல்ல.எல்லா
தத்துவக்குப்பைகளையும் துடைத்தெரிந்து விட்டு விழிப்புணர்வுடன் இயற்கையோடு வாழ்வது தான்.
நாம் எல்லோரும் காலையில் விழிக்கிறோம், மூன்று வேளை சாப்பிடுகிறோம்,இரவில் தூங்குகிறோம்.இவற்றிற்கிடையில் சாப்பாட்டிற்காக உழைக்கிறோம்.ஆனால் இவற்றில் எதையும் என்ன செய்கிறோம் என்ற விழிப்புணர்வோடு செய்வதில்லை.
காலையில் கண்விழித்த போது மீண்டும் ஒரு வாய்ப்பளித்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லவில்லை.குளிக்கும் போதும் நம் உடலை தொட்டு தழுவி நம்மை சுத்தமாக்கும் தண்ணீருக்கு நன்றி சொல்லவில்லை.
சாப்பிடும் போதும் சாப்பாட்டை வாயில் இட்டு ரசித்து சுவைத்து சாப்பிடுவதும் இல்லை. அதற்காகபாடு பட்டவற்களுக்கு நாம் நன்றி சொல்வதும் இல்லை.இரவிலும் அன்றைய தினம் முழுவதிற்கும் நமக்கு உதவியவர்களுக்கும், நமக்கு வாய்ப்பளித்தவர்களுக்கும் நாம் நன்றி சொல்வதில்லை.என்ன ஒரு நன்றி கெட்ட வாழ்க்கையை வாழுகிறோம்.உண்மையில் ஒரு செக்கு மாட்டைப்போல் வாழ்கிறோம்.
வாழ்க்கையை இனிமையாய் வாழ நாம் என்ன செய்கிறோம் என்ற சின்ன விழிப்புணர்வு போதும்.அப்புறம் வாழ்க்கை இனிக்கத்தொடங்கி விடும்.
ஒரு சின்ன விழிப்பென்னும் தீப்பொறி அறியாமை காட்டிற்குள் விழும் போது என்ன ஆகும் என்பதை பாரதியார் பாடுகிறார்..
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
விழிப்பென்னும் சிறு தீப்பொறியை அறியாமை நிரம்பிய மனமென்னும் காட்டிற்குள் வைத்த போது ,மனமென்னும் காடு எரிந்து சாம்பலாகி,விழிப்பென்னும் உயர் நிலையை அடைகிறது.அப்போது அவர் மனம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என ஆனந்த கூத்தாடுகிறது.
மனதில் ஏற்படும் ஒரு சின்ன மாற்றம்,சின்ன கீறல் போதும் ஞானம் உதயமாகிவிடும்.அப்புறம் வாழ்க்கையே இனிமையாகிவிடும்.அற்பமெல்லாம் அற்புதமாகிவிடும்.
ஒருவன் பெரிய ஜென் மடாலயத்திற்கு சென்று அங்குள்ள குருவிடம் "நான் புத்தனாக வேண்டும்" என்றான் ஒருவன்.
அவர் உடனே கோபத்தில் ஓங்கி அறைந்து விட்டார்.அவனும் அதிர்ச்சியில் கன்னதை தடவிக்கொண்டே அங்கிருந்த தலைமை குருவிடம் "இவர் ரொம்ப மோசம். நான் புத்தனாக வேண்டும் என்றுதானே கேட்டேன்?" இதற்காக ஏன் இப்படி அறைகிறார்? என்றான்.
உடனே தலைமை குரு சொன்னார்.
"அவர் ரொம்ப கருணையானவர். நீ ரொம்ப இளம் வயதுக்காரன் என்பதால் உன்னை அறைவதோடு நிறுத்திக்கொண்டார்.இல்லையென்றால் கத்தியெடுத்து வெட்டி இருப்பார்".
ஏன் என்னை இப்படி கோபப்படுகிறார்? என்றான் வந்தவன்.
அதற்கு குரு சொன்னார் பிறகு "புத்தனாக இருந்து கொண்டே புத்தனாவது எப்படி என்று கேட்டால் யாருக்குதான் கோபம் வராது."
இதையே தான் இந்து மதமும் சொல்கிறது "அயம் ஆத்மா பிரம்மம் – இந்த ஆத்மாவே பிரம்மம் "
நானே புத்தனென்றேன்
ஆனவமாய் ஆகி நின்றேன்.
நாமே புத்தர்களென்றேன்
புத்தனாய் ஆகிவிட்டேன்.
இன்னொரு கவிதை
வாழ்க்கையென்னும் பிச்சைப்
பாத்திரத்தில் விழுந்ததை சாப்பிடு
கிடைத்ததற்கு நன்றி சொல்
பசியாறிய வயிறு
உடலை மறைக்க தூண்டும்
உடலை மறைத்த மனம்
துணையை தேட சொல்லும்
எல்லாம் கிடைத்த மனம்
திமிர் பிடித்து திரியும்
மீண்டும் பசிவந்தால்
எல்லாம் மறைந்து போகும்
ஒரு ஜான் வயிறு - அதான்
இயக்கத்தின் மூலம்
மலை உச்சியில் பார்த்தால்
பள்ளத்தாக்கில் நடப்பது புரியும் !
விழிப்பின் உச்சியில் பார்த்தால்
நடப்பது புரியும் ! நடக்கப் போவதும் புரியும் !
வந்த வழி சிறியது !
போகும் வழி பெரியது !
வந்த வழியில் திரும்பிப்
போக முடியாது !
போகும் வழி எங்கு போய்
முடிவதோ தெரியாது ?
வந்துவிட்டாய் , போகப் போகிறாய் !
சலனம் வேண்டாம்
ஓடல் வேண்டாம்
மனக் குளத்தில் கல்லெறிந்து
கொண்டே இருக்காதே !
ஓடிக் கடக்க முடியாது - உலகம்
அமைதியாக உட்கார்
உன்னைத்தேடி வரும் !
நீ தான் அது !
அதான் நீ !
கண்ணாமூச்சி புரிந்து விட்டால்
தேடல் நின்றுவிடும் !
ஆன்ம சுதந்திரம் பிறந்துவிடும்
அமைதியோடு அமைதியாகி
அன்பு வெள்ளம் பெருகி
உன்னை அழித்து
புத்தம் பிறக்கும் !
மேலும் படிக்க

சிந்தனை நேரம் : உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்?
கதை நேரம் : கடவுள் (போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்)
சிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி? பகுதி 1
Subscribe to:
Posts
(
Atom
)
2 comments :
Post a Comment
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..