அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

miracle Antimatter!!

No comments



(matter) பருப்பொருள்.நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருள்களும் அடிப்படையில் பருப்பொருளால் உருவாக்கப் பட்டவை.ஏன் நாமே அடிப்படையில் பருப்பொருளில் இருந்து வந்தவர்கள்தான்.பருப்பொருள் ஒரு பொருளுக்கு வடிவம் மற்றும் நிறையை கொடுக்கிறது.ஒவ்வொரு பொருளின் அடிப்படை அணுக்கள்(atoms).அணுக்களின் அடிப்படை துகள்கள்(புரோட்டான்,எலெக்ட்ரான்,நியூட்ரான்).இவை எல்லாவற்றிற்கும் நிறை(mass) இருக்கிறது.இவை எல்லாம் பருப்பொருள்(matter) தான்.புரோட்டான் ஒர் பருப்பொருள்(matter) .எலெக்ட்ரான் ஒர் பருப்பொருள்(matter).அணுக்களின் அடிப்படை துகள்கள் எல்லாம் ஒர் பருப்பொருள்கள்தான்(matter).

அணுக்களின் அடிப்படை துகள்கள் எல்லாவற்றிற்கும் நிறை,மின்னூட்டம்,தற்சுழற்சி என தனித்தன்மைகள் இருக்கின்றன.புரோட்டான் அதிக நிறை,நேர் மின்னூட்டம் கொண்டது,நியூட்ரானும் அதிக நிறை ஆனால் மின்னூட்டம் அற்றது.எலெக்ட்ரான் குறைந்த நிறை,எதிர் மின்னூட்டம் கொண்டது.



(antimatter)எதிர்பருப்பொருள்.இதுவும் பருப்பொருள்(matter) போன்றது ஆனால் எதிர் மின்னூட்டம் கொண்டது.

எலெக்ட்ரான் ஒர் பருப்பொருள்(matter) அதன் எதிர்பருப்பொருள்(antimatter) பாசிட்ரான்.
எலெக்ட்ரானும் பாசிட்ரானும் ஒரே நிறை,ஒரே தற்சுழற்சி.ஆனால் எலெக்ட்ரான் எதிர் மின்னூட்டம் கொண்டது.பாசிட்ரான் நேர் மின்னூட்டம் கொண்டது.

புரோட்டான் நேர் மின்னூட்டம் கொண்டது அதன் எதிர்பருப்பொருள்(antimatter) நெகட்ரான் எதிர் மின்னூட்டம் கொண்டது.

இப்போது ஒரு ஆச்சர்யம் நியூட்ரான் மின்னூட்டம் அற்றது.ஆனால் அதற்கும் எதிர் பருப்பொருள் உள்ளது.ஏனென்றால் நியூட்ரானின் அடிப்படை துகள்களான குவார்க்குகளுக்கு மின்னூட்டம் உண்டு.ஒவ்வொரு அணுவுக்கும் எதி அணுவுண்டு

உதாரணமாக :




ஹட்ரஜனுக்கு ஒர் புரோட்டானும்,ஒர் எலெக்ட்ரானும் உண்டு.ஆனால் எதிர் ஹட்ரஜனுக்கு ஒர் நெகட்ரான்,ஒர் பாசிட்ரான் உண்டு.

ஆமா எலெக்ட்ரானும் ,பாசிட்ரானும் சந்திச்சா?,ஹட்ரஜனும் ,எதிர் ஹட்ரஜனுக்கு சந்திச்சா?
முழு ஆற்றலும் வெளியாகி அழிந்துவிடும்.

சாதாரணமான
வேதிவினைகளில் நாம் பில்லியனில் ஒரு பங்கைதான் ஆற்றலாக பெருகிறோம்.கரித்துண்டை எரித்தால் பில்லியனில் ஒரு பங்கைதான் ஆற்றலாக பெறமுடியும் மீதாம் சாம்பலாக மாறும்.

அணுக்கரு வினைகளில்(nuclear reaction) நூறில் ஒர் சதவீதம் தான் ஆற்றலாக பெறமுடியும் மீதம் அணுக்கதிர் வீச்சு இன்னபிறகழிவுகள் கிடைக்கும்.

ஆனால் ஹட்ரஜனும்,எதிர் ஹட்ரஜனும் அல்லது எலெக்ட்ரானும் ,பாசிட்ரானும் சந்தித்தால் 100 சதவீத ஆற்றல் குறிப்பாக அணுக்கதிர் வீச்சு இன்னபிறகழிவுகள் எதுவும் கிடையாது.

angels and demons படம் பார்த்தா இப்போ உங்களுக்கு புரியும்.அதுல (antimatter) குண்டு தான் கதையின் கரு.
பூமியில் எங்கும் எதிர்பருப்பொருள்(antimatter) கிடையாது.அப்படி இருந்தாலும் உடனே அழிந்துவிடும்.ஆனால் பிரபச்சத்தில் எதிர் ஹட்ரஜனால் ஆன பூமி இருக்கலாம்.நாம் தவறிப் போய் அங்கே நுழைய நினைத்தால் அவ்ளோதான்.angels and demons படம் பார்த்தா அதில் 'CERN' போன்ற ஆய்வுகூடத்தில் தான் இதை உருவாக்கமுடியும் என்பதை காட்டி இருப்பார்கள்.சும்மா ஒரு கைப்பிடி எதிர் ஹட்ரஜன் எடுத்து அப்பிடியே ஒரு தூவு
தூவினா பூமி அவ்ளோதான்.அப்புறம் டண்டனக்காதான்.யாராவது வேற்றுகிரகத்தில் இருந்து வந்தா பல்ல காட்டி கைய கொடுத்துடாதிங்க.அப்புறம் டண்டனக்காதான்.http://www.blogger.com/img/blank.gif
http://www.blogger.com/img/blank.gif

அணு குண்டு எல்லாம் நம்ம தாத்த காலத்து டெக்னிக்.இப்போ எல்லாம் (antimatter) குண்டு தான் latest.பயந்துராதிங்க அப்படியெல்லாம் நடக்காது ஏனா அதுக்கு ரொம்ப ரொம்ப பெரிய ஆற்றல் வாய்ந்த ஆய்வுகூடம் தேவை.ஆனால் (antimatter) தான் நம் எரிபொருள் http://www.blogger.com/img/blank.gifதேவையை நிறைவு செய்யும்.

மேலும் படிக்க

Antimatter

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..