ஓர் அழகான எழுத்து முயற்சி.

பட்டமரம்

12 comments
பட்டமரம்
பட்டமரம்
அழகான கானகத்தே
கரையில்லா அழகினூடே
அசிங்கமாய் காட்சியளிக்கிறேன்.
இன்பரசம் குடித்துக்கொண்டு
வாழ்க்கையை கரைத்தவன் - வெறும்
சக்கையாய் நிற்கிறேன்.


வைகறையும் வரும்
காலைஒளி கதவைத்தட்டும்
தத்தம் பறவைகள்
தன்குஞ்சுகளை என்பாதுகாப்பில் விட்டு
இரை தேடச்செல்லும்.
குஞ்சுகளோ என்மீது
ஆடிப்பாடி விளையாடும்.
அவைதம் பிஞ்சு நகங்களால்
என் கிளைகளை
பற்று ஆனந்தம்
வார்தையின் பார்பட்டது.


அதற்கு பலனாய்
இளவேனிற் காய்காத்து
கோடையில் பழுத்து
இலையுதிற் காலத்தே
விருந்து படைப்பேன்.
அவைகளும் விருந்துண்டு
என் தோல்மேலே
ஓடி விளையாடும்.



உச்சிவந்தால்
ஓடிவருவர் -  என் மடிதேடி.
வந்தவர்க்கு பழம்கொடுத்து
படுக்க மடிகொடுப்பேன்.
மாலை வந்தால்
சிறுவர் கூட்டம்
துள்ளி வந்து
என்னை தொத்தி
என்மேல் ஊர்ந்து
என்னை அணைத்து
ஆனந்தமாக விளையாடுவர்.


இரவு வந்தால்
இருட்டு அரக்கனிடமிருந்து
என் பிள்ளைகளை காப்பேன்.
அந்த நிலவின் ஒளி
ஆற்றில் எதிரொளிக்கும்.
அதன்  வெளிச்சத்தில்
பசியுண்ட குஞ்சுகளுக்கு
தாயினம் உணவூட்டும்
தாய்மையை பார்த்து ரசிப்பேன்.


அணுஅணுவாய் துளி சாறுகூட
மிச்சமில்லாமல் வாழ்க்கையை ரசித்தேன்!
இன்றோ ஒருதுளி
இலைகூட இல்லாமல்
பட்டமரமாய் எஞ்சியிருக்கிறேன்!
யாரும் என்மீது
கூடிகட்டுவதில்லை!
யாரும் என்மீது
ஏறி விளையாடுவதில்லை!
நான் என்ன
பாவம் செய்தேன்?
எதுவும் எதிர்பார்க்காமல் வாழ்த்தவன்!
யாருக்கும் பயன்படாமல்
சக்கையாய் நிற்கிறேன்!
காய்ந்த சருகாய்
காயத்துடன் நிற்கிறேன்.







12 comments :

  1. அழகான அழுகை..

    ReplyDelete
  2. பட்ட மரத்தின் ஏக்கம்!
    கவிதையின் ஆக்கம்
    அருமை!
    சா இராமாநுசம்

    ReplyDelete
  3. பட்டாலும் பலருக்கு உதவும் மரம் அது பட்டமரம் அல்ல உங்கள் கவிதை அழகாய் இருக்கு சகோ!

    ReplyDelete
  4. பட்ட மரத்தின் வேதனை போல எத்தனை மனித பட்ட மரங்களும் உண்டு...

    ReplyDelete
  5. திரும்பத் திரும்ப கல்லடி படும் மனிதர்களைப்போல, ஆதங்கத்தில் குமையும் இந்த பட்ட மரத்தின் வேதனையை எழுதியிருக்கும் விதம் அருமை!!

    ReplyDelete
  6. பணம் இல்லாமல் தனி மனிதன் வேண்டுமானால் யாருக்கும் பயன்படாமல் போகலாம்... இலைகள்,கிளைகள் உதிர்ந்தாலும்... ஏன்? வேர்களே மண்ணை விட்டு பிரிந்தாலும்... மரம் என்றுமே பயன்படாமல் போவதில்லை மனிதனுக்கு... பட்ட மரத்தின் பட்டைகளும், அதன் கட்டைகளும் என்றும் உதவும்...

    பட்ட மரத்தின் வேதனை உங்கள் மனத்தின் வழியே இங்கே வரிகளாய் மரத்திற்கு உயிர்கொடுத்து கொண்டு... வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. மரமொன்று புலம்புவதாகவே உணர்ந்தேன்.ஆனலும் பயனற்றுப்போவதல்ல மரம்.மனிதனைத்தான் மரம் என்று திட்டுவதை நிறுத்தவேண்டும் !

    ReplyDelete
  8. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_18.html

    ReplyDelete
  9. தண்ணீர் பந்தல் வே.சுப்பிரமணியம் எனக்கு வழங்கிய Liebster Blog விருதை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். எனது வலைப்பதிவிற்கு வருகை தந்து விருதை ஏற்றுக்கொளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    http://tnmurali.blogspot.com

    ReplyDelete
  10. பட்டுப் போனபோதும் உதவ முடியாத நிலைகுறித்தே அதிகம் புலம்பும்
    பட்ட மரத்தின் உயர்ந்த குணம் மனம் கவர்ந்தது
    தங்கள் சிந்தனைத் திறனும் படைப்பின் நேர்த்தியும் உள்ளம் கவர்ந்தது
    மனம்தொட்ட்ட பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மரத்தின் சோகம்!அருமை!

    ReplyDelete
  12. பட்ட மரத்திற்கும் உயிர் இருக்கிறது! அதோ அது ஏங்குகிறது!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..