அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

தன்னம்பிக்கை

1 comment
அந்த அறை முழுவதும் ஒரே அமைதி ஒரே சோகமயம் எடுத்திருப்பதோ வெறும் 183 ரன்கள் அறையில் நுழையும் போது அறையின் முழு சூழ்நிலையையும் புரிந்து கொண்டு எல்லோரையும் அழைத்து சிரித்த முகத்துடன் பேசத்துவங்குகிறார் கபில்தேவ்
"நம்மைப் போன்ற சிறந்த வீரர்களை அவர்களால் 183 ரன்களுக்கு அவுட் செய்ய முடியுமென்றால் நம்மாளும் முடியும் நம்பிக்கையோடு விளையாடுங்கள்" என்றார்.

அன்றைய ஆட்டம் இந்தியாவுக்கு உலககோப்பை பெற்று தந்த ஆட்டம்.

உலகமுழுவதும் பொருளாதார பெருமந்தம் எங்கு பார்த்தாலும் வேலை நீக்கம்,பங்கு சந்தைவீழ்ச்சி.இது தீர 5 வருடங்கள் ஆகும் என் உலக வல்லுனர்கள் எல்லாம் கை விரித்தனர்.ஆனால் ஒரு மூலையில் மட்டும் "வெற்றி உனது(jaiho) வெற்றி உனது(jaiho)"
என ஒரே ஆனந்த தாண்டவம் ஒரு சின்ன நம்பிக்கை சுடர் மட்டும் உலகத்தை துளைத்தெடுத்தது.ஆறே மாதத்தில் உலகம் மீண்டெழுந்தது.அதற்காகவே அது இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்றது.

தோல்வியின் மத்தில் நின்று கொண்டு வெற்றி நமதே என் சொல்வது மட்டும் தன்னம்பிக்கையில்லை.தோல்வியே அடைந்தாலும் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பது தான் தன்னம்பிக்கை.

சர்ச்சிலிடம் பத்திரிக்கை நண்பர்கள் கேட்டார்களாம் "ஏன் உங்களால் காந்தியை ஒன்றும்
செய்ய முடியவில்லை என்று".அவர் சொன்னார் காந்தி கத்தி எடுத்திருந்தால் நான் துப்பாக்கி கொண்டு அடக்கி இருப்பேன். துப்பாக்கி எடுத்திருந்தால் பீரங்கியால் அடக்கி இருப்பேன்.ஆனால் அவர் சத்தியத்தை ஆயுதமாக தாங்கி வருகிறார். சத்தியத்தை தோற்கடிக்க இது வரை ஒரு ஆயுதமும் கண்டுபிடிக்கப் படவில்லை அதனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

சத்தியம் மட்டுமே இந்தியாவின் ஆயுதமாக, தன்னம்பிக்கை அதை வழி நடத்த இந்தியாவின் சுதந்திரம் உதயமானது.

உலகம் முழுவதையும் வென்ற அலெக்சாண்டரையும்,டெஸ்டில் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டுவந்த ஆஸ்திரேலியாவையும் தடுத்து நிறுத்தியது இந்தியா தான்.காரணம் போராட்டம் குணம் விட்டுகொடுக்க மாட்டேன் என்கிற போராட்டம் குணம்.

யாருக்காகவும் எதற்காகவும் கொண்ட கொள்கையிளும் ,எடுத்த முடிவுகளையும் விட்டுகொடுக்காதிர்கள்.

உலகத்தின் நம்பர் ஒன் பணக்கார வாரியம் இந்தியா கிரிக்கட் வாரியம்.ஆனால் இந்தியா வெற்றி பெறுவது எப்போதாவது தான்.பிறகு எப்படி நம்பர் ஒன் பணக்கார வாரியம்.தெரிந்து கொள்ளுங்கள் வெற்றி பெறுவதை விட எப்படி தோற்றீர்கள் என்பது தான் முக்கியம்.இந்தியா விளையாண்டால் கடைசி பந்து வரை போராட்டம் தான்.

வெற்றியாளனாக இருப்பதை விட தோற்றாலும் சிறந்த எதிரணியாக இருப்பது தான் தன்னம்பிக்கை.

அவனை அன்றுதான் பள்ளியில் தாய் சேர்த்தால் ,சேர்ந்த சில நாட்களில் அவன் பள்ளி குறிப்பேட்டில் ஆசிரியர் இப்படி எழுதி அனுப்புகிறார்."இவனைப் போன்ற முட்டாளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று."அதைப் பார்த்த தாய் அழுது கொண்டே சொல்கிறாள்"என் மகன் முட்டாள் அல்ல,அவனை நான் புத்திசாலி ஆக்குகிறேன் என்று"இன்று அவனைப் பற்றி எல்லா குழந்தைகளும் படிக்கின்றனர்.அவன் தான் இருட்டில் உழன்ற உலகத்திற்கு வெளிச்சம் காட்டிய தாமஸ் ஆல்வா எடிசன்.

உலகம் தனக்கென்று ஒரு வரையறை வைத்துள்ளது அதன் படி நீ இருந்தால் நீ புத்திசாலி, இல்லை என்றால் முட்டாள்.தன்னம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் முட்டாள்கள் ஏன் என்றால் அவர்கள் வரையறை மட்டும் அல்ல உலகையே மாற்ற பிறந்தவர்கள்.

அந்த கூட்டுகுடும்பத்தில் பிறந்த அவனுக்கு பிறந்தநாள் அவன் பாட்டி குடும்ப ஏட்டில் இப்படி எழுதினால் "எனக்கு ரவியின் எதிர்காலம் நினைத்தாலே பயமாக இருக்கிறது"என்று.ஆனால் அவனோ இன்று இரு நாடுகளுக்கு தேசிய கீதம் பாடி,நோபல்பரிசும் பெற்றான்.அவன் தான் ரவீந்திரநாத் தாகூர்.

நம்மை பற்றி உலகம் என்ன நினைக்கிறது என்பது முக்கியம் அல்ல, நம்மை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது தான் "தன்னம்பிக்கை".

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இது தான் தன்னம்பிக்கையின் கானம்.

1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

எதார்த்தம்

No comments
எறும்புத் தோலை உரித்துப் பார்த்தேன் யானை வந்ததடா
நான் இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா என்றான் கண்ணாதாசன்.

அருமையான் வரிகள் ஆழ்ந்த ஞானமும் கூட.ஆனால் இவை எதார்த்தமான வரிகளா?
எதார்த்தம் என்றால் என்ன?இயல்பு நிலையை அல்லது இயற்கையில் நிகழ வாய்ப்பு உள்ள ஒரு நிலையை நாம் எதார்த்தம் என்று மொழி வழியில் பொருள் கொள்கிறோம்.இங்கே "எறும்பு" ஒரு இயல்பு நிலை அல்லது இயற்கை நிலை,"தோல்" இயல்பு நிலை,"உரித்தல்" இயற்கையில் நிகழ வாய்ப்பு உள்ள ஒரு நிலை ஆக ஒவ்வொரு வார்த்தையையும் பிரித்துப் பார்த்தால் "இயல்பு நிலையை அல்லது இயற்கையில் நிகழ வாய்ப்பு உள்ள ஒரு நிலையை" குறிக்கிறது.
ஆனால் சேர்த்துப் பார்த்தால் எறும்பை பார்ப்பதே கஷ்டம் அதன் தோலை உரித்தல் என்றால்?இதில் யானை வேறு?அடுத்து இதயத்தோலை உரிப்பது. முடியல இப்பவே கண்ண கட்டுதே!! முடிவாக ஞானம் என்பது எதார்த்தில் இல்லை என்பது தான் கண்ணாதாசன் சொல்ல வரும் கருத்தா?

தாகூர் மரணப் படுக்கையில் இருக்கும் போது யாரோ ஒருவர் கேட்டாராம் "இந்த உலகிலே சிறந்த கவி நீங்கள் தான் ஏன் என்றால் நீங்கள் தான் 6000 கவிதைகள் எழுதி உள்ளீர்கள்.யாரும் இவ்வளவு கவிதைகள் எழுதியது இல்லை.நீங்கள் சொல்ல வந்தெல்லாம் சொல்லிவிட்டீர்கள் தானே?"அவர் அழுது விட்டார்.யாருக்கு தெரியும் எல்லா கவிகளும் தான் சொல்ல வருவதை ஒரு பாடலில் சொல்ல முடிவதில்லை.அவர் சொல்ல வந்ததை
சொல்லவில்லை என்பது தான் அர்த்தம்.

நுண்ணுலக எதார்த்தில்(quantum reality) ஒரு துளையில் இருந்து வரும் ஒளியில் ஒரு எலெக்ட்ரான் எல்லா இடத்திலும் உள்ளது.நம்மால் சரியான இடத்தை சொல்ல முடியது.
இதை முதல் முறை கேட்ட ஐன்ஸ்டைன் இதெல்லாம் மடத்தனம் என்றார்.ஒரு கட்டத்தில்
நண்பரிடம் நான் என் கண்கள் வழியே நிலவை பார்க்கிறேன் இது எதார்த்தமா அல்லது கனவா? என்றார்.

யானி இந்த நூற்றாண்டின் மாபெரும் இசை ஞானி அவருடய "tribute" இசைக்கோவை
சர சர வென ஓடும் மின்னல் குதிரை.ஆனால் பிரித்துப் பார்த்தால் ஒரு சாதாரண இசைக்கோவை.இதை அவர் எழுதியதின் பின் காரணம் அவர் நாட்டில் பூகம்பம் அதன் முழு அனுபவத்தைதான் அவர் இசைக்கோவையாக மாற்ற நினைத்தார்.

இங்கு எல்லோரும் தாங்கள் கண்ட ஓர் அனுபவத்தை தங்கள் திறமையின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.அது தான் இங்கு பிரச்சனை.சாதாரணமான நம் வாழ்வில் காதல்,காதல் தோல்வி,அன்பு,கருனை என நுழையும் போது மிக பெரும் அனுபத்தை சந்திக்க நேரிடுகிறது.சாதாரணமாக நாம் எல்ல அனுபவங்களையும் எழுத்தின்
மூலமாகவும்,பேச்சின் மூலமாகவும் பெறுகிறோம்.ஆனால் அனுபவம் என்பது அனுபவிக்க பட
வேண்டியது.காதல் தோல்வி என்பது அனுபவம் அப்போது நாம் நமக்கு தெரிந்த வழியில்
எழுதவோ அல்லது பேசவோ ஆரம்பித்து விடுகிறோம்.ஆனால் நம்மால் முடிவதில்லை.

தாகூர் மொழிப் புலமை மிக்கவர்,யானி இசை புலமை மிக்கவர்,ஐன்ஸ்டைன் அறிவியல் புலமைமிக்கவர்.எல்லோரும் அனுபத்தை தங்களுக்கு தெரிந்த வழியில் வெளிப்படுத்த முயன்றிரிக்கிறார்கள்.அது எதார்த்ததில் இல்லை.

சிகரம் வைத்தார் போல் பாரதியின் பாடல் வரிகள்
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு- தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'"

முழுமையான அனுபவ பாடல் வரிகள்.அனுபவம் மட்டுமே எதார்த்தம்.அது மட்டுமே எதார்த்தம்.நாம் நம் மொழியின் வாயிலாக இயற்கையை ரசிக்கலாம் ஆனால் கட்டுப்படுத்த முடியாது.

"தனிமையில் காணம்
சபையினில் மொளனம்
அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்.
"

ஏஸ் தம்மோ ஸ்னந்தனோ

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

மூக்கு கண்ணாடி காணவில்லை

No comments
மூக்கு கண்ணாடி காணவில்லையென்றால் கண்டு பிடிக்கலாம்
ஆனால் மூக்கே காணவில்லையென்றால்,
விதையில் மரமுள்ளதுதான்
ஆனால் அதை பிரித்தால் ,
எழுத்துகள் அர்த்தமுள்ளதுதான்
அதை பிரித்தால்,
கண்ணாடியில் நம்மைக் காணலாம்
கண்ணாடியில்லாமல் பார்க்க முடிந்தால்

இதை தியானம் செய் என்கிறது சென்.

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..