அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

love is enough - அன்பு மட்டும் போதும்

அன்பு மட்டும் போதும்
 அன்பு மட்டும் போதும்
அழுவது நீயாகட்டும்
துடைப்பது நானாகட்டும்
உறவு தேவையில்லை
உரிமை தேவையில்லை
கண்ணீரைத் துடைப்பதற்கு
அன்பு மட்டும் போதும் !
அன்பு இருந்தால்
கல்லையும் கரைக்கலாம்
பசும் புல்லிலும்
கடவுளைக் காணலாம் !

காதல் பயம் - Love Fear

காதல் பயம்
காதல் பயம்
காதல்வரா வானத்தினூடே
சத்தமில்லாமல் பறந்தேன்
காதல்வரா தெருவினூடே
தடமில்லாமல் நடந்தேன்
கன்னியர் பாதையில்
கண்மூடி நடந்தேன்
அலைபாயும் நேரத்தில்
கீதை படித்தேன்
சுவைமிகும் நேரத்தில்
சோகம் படித்தேன்
மகிழ்ச்சி விற்று
காவி வாங்கினேன்
காதலும் என்னை கவ்விடுமோ ?
காதல் நஞ்சைக் கக்கிடுமோ ?
இந்நஞ்சுக்கும் முறிவு உண்டோ ?
சொல்லிவிட்டு காதல் செய்வீர் ?
காதல் தோழர்களே !

அன்பால் கொல்லாதே

அன்பால் கொல்லாதே
மென்மையே மென்மையென
பொன்னிற மேனியென
அழகியதொரு பட்டாம்பூச்சி
தோட்டத்தில் பறக்கக்கண்டேன்
மலர்களின் மேலமர்வதுமாய்
மகரந்தம் குடிப்பதுமாய்
இடுப்பில் கயரில்லாமல்
சுதந்திரமாய் பறக்கக்கண்டேன்

உணர்வுகள் தடுமாற
அன்புவெள்ளம் பொங்கிவர
இதயத்தில் இடமொதிக்கி
அன்பென்னும் கூட்டிலடைத்தேன்
அன்பென நினைத்து
நான் செய்த காரியங்கள்
சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்க
நிறையிழந்த இலையென
அன்பில் கருகி
பிணமாய் காட்சியளித்தது
அன்புகூட கொல்லுமென
கடைசியாய் வந்த ஞானம்
கண்ணீர்த்துளிகளுடன் சொன்னது
அன்பால் கொல்லாதே!

கருச்சிதைவு

கருச்சிதைவு
கருச்சிதைவு
வரிகள் தெரியாமல்
வலிகளுடன் மட்டும் - வயிற்றில்
வளர்ந்த என் கவிதை
கையில் கிடைத்தது
உருகுலைந்த நிலையில்
இதற்காகவா இத்தனை வலிகள் !

புத்தம் buddha

புத்தம்
புத்தம்
வாழ்க்கையென்னும் பிச்சைப்
பாத்திரத்தில் விழுந்ததை சாப்பிடு
கிடைத்ததற்கு நன்றி சொல்
பசியாறிய வயிறு
உடலை மறைக்க தூண்டும்
உடலை மறைத்த மனம்
துணையை தேட சொல்லும்
எல்லாம் கிடைத்த மனம்
திமிர் பிடித்து திரியும்
மீண்டும் பசிவந்தால்
எல்லாம் மறைந்து போகும்
ஒரு ஜான் வயிறு - அதான்
இயக்கத்தின் மூலம்

மலை உச்சியில் பார்த்தால்
பள்ளத்தாக்கில் நடப்பது புரியும் !
விழிப்பின் உச்சியில் பார்த்தால்
நடப்பது புரியும்  ! நடக்கப் போவதும் புரியும் !
வந்த வழி சிறியது !
போகும் வழி பெரியது !
வந்த வழியில் திரும்பிப்
போக முடியாது !
போகும் வழி எங்கு போய்
முடிவதோ தெரியாது ?
வந்துவிட்டாய் , போகப் போகிறாய் !
சலனம் வேண்டாம்
ஓடல் வேண்டாம்
மனக் குளத்தில் கல்லெறிந்து
கொண்டே இருக்காதே !
ஓடிக் கடக்க முடியாது - உலகம்
அமைதியாக உட்கார்
உன்னைத்தேடி வரும் !
நீ தான் அது !
அதான் நீ  !
கண்ணாமூச்சி புரிந்து விட்டால்
தேடல் நின்றுவிடும் !
ஆன்ம சுதந்திரம் பிறந்துவிடும்
அமைதியோடு அமைதியாகி
அன்பு வெள்ளம் பெருகி
உன்னை அழித்து
புத்தம் பிறக்கும் !


காதலை வெறுக்காதீர்

காதலை வெறுக்காதீர்
காதலை வெறுக்காதீர்
காதல்
கவிஞர்களின் அகரம்
கிறுக்கல்களின் காவியம்
அழகியலின் ஆரம்பம்
சிணுங்களின் சிகரம்
அறிவியலின் உயர்பரிமாணம்
கலையின் ஆரம்பம்
மொழியின் அடையாள அட்டை
கடவுளின் சுரங்கப்பாதை
மனிதனைக் கவிஞனாக்கி
கவிஞனைக் கடவுளாக்கும்
ரசாயண மாற்றம்
காதல் இல்லா மனிதன்
காமத்தின் ஓவியம்
காதல் இல்லா எழுத்து
அசிங்கத்தின் நிர்வாணம்
காதல் உங்களை ரசிக்க வைக்கும்
காதல் உங்களை கிறுக்க வைக்கும்
இறுதில் உங்களை கவிஞனாக்கும்
ஆதலால் காதலை வெறுக்காதீர்!!


 





யார் தந்தோ காதலோ ?

யார் தந்த காதல்
யார் தந்த காதல்
யார் தந்தோ காதலோ
யாரிடம் சொன்னதோ
யாருக்கும் தெரியாமல்
இதயத்தை கிழித்ததோ ?

சுகம் தந்தோ காதலே
சுமையாகிப் போனதோ
சுமைதாங்க முடியாமல்
தடுமாறி விழுந்ததோ ?

ஒளிதந்த காதலே
இருளாகிப் போனதோ
இமைமூடும் நேரத்தில்
காற்றினிலே பறந்ததோ ?

சொல்லாத காதல்கள்
சோகங்கள் தந்ததோ
சுவைகூடும் இரவினிலே
சுதிமாறிக் கத்தியதோ ?

அவன் தந்த காதலோ
அடி நெஞ்சில் ஒட்டியதோ
அவனில்லா வேலையிலும்
அசைபோடச் சொல்கிறதோ ?


மேலும் படிக்க


மின்னனு காதலர்தினம்

 Happy Digital Lovers Day

இலைகளை மேயும் ஆடுகளாய்
வலைதளங்களை மேயும் இளைஞர்கள்
கிளைகளில் பூத்த மலர்கள்
வலைதளங்களில் பூக்கின்றன
புல்தரையில் காத்திருந்தவர்கள்
கணிணி திரையில் காத்திருக்கிறார்கள்
காதலை சொல்ல பயந்தவர்கள்
கணிணி அரட்டையில் கதைக்கிறார்கள்
புறாக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு
குறுஞ்செய்திகள் தூது செல்கின்றன
கணப்பொழுதின் பிரிவை தாங்கமுடியாதவர்கள்
அலைபேசியின் மடியில் தவழ்கிறார்கள்
ஏக்கத்தில் புரண்டவர்கள்
தொடுதிரையில் தொட்டுக்கொள்கின்றனர்
சந்திக்காத இதயங்கள்
பேஸ்புக்கில் சந்தித்துவிட்டு
ட்வீட்டரில் நலம்விசாரித்து
அலைபேசியில் காதலை தொடர்கின்றன
கல்லெடுத்த காலத்திலும்
காதல் வந்தது
கணிணி காலத்திலும்
காதல் வருகிறது
காதல் மனிதனின் ஆன்மா
மனிதன் வாழும் வரை வாழும்!
வாழ்க காதல் !
வளர்க மின்னனு காதலர்தினம்!

மேலும் படிக்க


தனிமை கடற்பயணம்

 lonely sea travel
அவன் கொடுத்த திசைமானியை
தொலைத்து விட்டேன்
காற்றடிக்கும் திசைகளிளெல்லாம் என்
பாய்மரம் நகர்ந்து கொண்டிறிக்கிறது
lonely sea travel
lonely sea travel
அலைகளின் அசைவுகளுக்கிடையே
மெல்ல மெல்ல என் வாழ்க்கை
ஊர்ந்து கொண்டிருக்கிறது
அகல் விளக்கின் துணைகூட இல்லாமல்
இரவில் தவிக்கிறேன்
பகலில் காய்கிறேன்
சுற்றி நீரிருந்தும்
நீர் வற்றி தவிக்கிறேன்
இந்த நீல வானமும்
நீலக்கடலும் என்னை
நிலைகுலையச் செய்கின்றன
அழகெல்லாம் பயமுறுத்தும்
பேய்களென தெரிகின்றன
என் பாடலே எனக்கு
மரண ஓலமாய் கேட்கிறது

என்னுளிருந்த கலைஞன்
முழுவதுமாக கருகிவிட்டான்
கலைதாகத்தோடு பயணம் மேற்கொண்டேன்
கரை என்னை ஏமாற்றிவிட்டது
உன்னை அழகென காட்டிவிட்டது
நீயோ சத்தமில்லாமல்
பலரைக் கொன்று
உன்காலடியில் புதைத்து
கரையில் உள்ளவர்களிடம்
அமைதியென புன்னகைக்கிறாய்
என்னை விட்டுவிடு
என் கவிதைப்பயணத்தை
இறுதிப்பயணம் ஆக்கிவிடாதே

Develop an Honesty philosophy

 வாக்குறுதியை காப்பாற்றுங்கள்
Develop an Honesty philosophy
Develop an Honesty philosophy

நித்தம்  நித்தம் வாழ்வு
சத்தியம் இல்லா பெருவாழ்வு
வருவேன் என்பார் வரமாட்டார்
தருவேன் என்பார் தரமாட்டார்
உடைந்த வாக்குறுதிகள் கொடுத்து
உறவுகளை உடைப்பார்
கேட்பீர் தோழர்களே
வாக்குறுதி சொல்லின் உறுதி
வாக்குறுதி நம்மீதான மதிப்பு
மதிப்புகளை உடைத்து
உறவுகளை அறுக்காதீர்
சொன்னதை செய்து
செய்வதை சொல்லி
வாக்குறுதிகளை காப்பாற்றும்
உயர் தத்துவத்தை கைகொள்வீர்
பேச்சைக் குறைத்து
செயலைக்கூட்டும் தத்துவத்தை
பழகிக் கொள்ளுங்கள்

மேலும் படிக்க