ஓர் அழகான எழுத்து முயற்சி.

நீ மட்டுமே உண்மை

9 comments
உடலை இறுக்கி
வில்லாய் வளைத்து
நரம்பை முறுக்கி
நாணாய் மாற்றி
கேள்விகணைகள் தொடுத்திடு
உன்னைச் சுற்றிய வேலிகளை
கேள்விகணைகள் உடைக்கட்டும்

மனிதா மனிதா விழித்துக்கொள்
நீ மனிதன் என்பதை ஒப்புக்கொள்
இன்னொரு வாழ்வில்லை நினைவில்கொள்
வாழ்க்கை வாழ்வதை கற்றுக்கொள்

உடைந்த கண்ணாடி
முழுபிம்பம் காட்டாது
உடைபட்ட உன்மனம்
உன்பிம்பம் காட்டாது
பிரிவினை சேற்றில்
கால் வைத்தபின்
கரைசேர்வது எப்போது

தனிமனித கொள்கைகள்
காலைப் பனித்துளி
கதிரவன் வந்ததும்
காற்றில் பறந்துவிடும்
உன்கண்ணை மூடிக்கொண்டு
அடுத்தவன் கண்ணில்
பார்ப்பது மடத்தனம்
கடன் வாங்கிய அறிவு
கரை எப்போதும் சேர்க்காது

எறும்புக்கென்ன பாடம்
குயிலுக்கேது பயிற்சி
எருமைகிருக்கும் பொறுமை
உனக்கில்லை எருமை
பெருமைபேசும் எருமை
உலகில் இருந்தால் மடமை

உன்னை விதைத்து
உன் சுதந்திரத்தை அறுவடைசெய்!
உன் தவறை நீயே செய்!
விழிப்போடு இரு!

கரை இல்லா வாழ்க்கைகடலிலே
அறிவென்னும் படகிலேறி
விழிப்பென்னும் விளக்கேற்றி
நீயே துடுப்பிட்டு கரைசேர்.

9 comments :

  1. நீயே துடுப்பிட்டு கரைசேர்.
    தன கையே தனக்குதவி அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்பு மற்றும் ஊக்கத்துக்கு நன்றி சசிகலா அவர்களே

      Delete
  2. ””உடைந்த கண்ணாடி
    முழுபிம்பம் காட்டாது
    உடைபட்ட உன்மனம்
    உன்பிம்பம் காட்டாது
    பிரிவினை சேற்றில்
    கால் வைத்தபின்
    கரைசேர்வது எப்போது””

    மனம் லயித்த வரிகள் நண்பா
    அருமையான நடையில்
    அழகிய கவிதை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்பு மற்றும் ஊக்கத்துக்கு நன்றி A.R.ராஜகோபாலன் அவர்களே

      Delete
  3. எழுச்சி ஊட்டும் கவிதை !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்பு மற்றும் ஊக்கத்துக்கு நன்றி ஸ்ரவாணிJ அவர்களே

      Delete
  4. பொருள் பொதிந்த வரிகள்.அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்பு மற்றும் ஊக்கத்துக்கு நன்றி சென்னை பித்தன் அவர்களே

      Delete
  5. அருமை அருமை தனசேகரன்.குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை.நிச்சயமாக மனதில் பதிகிறது வரிகள்.உணர்ந்தால் மனிதன் உருப்படுவான் !

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..