ஓர் அழகான எழுத்து முயற்சி.

தமிழ்மகனே கண்ணுறங்கு

6 comments
கண்ணே ஒரு பாடல்
தமிழ்மகனே கண்ணுறங்கு
தமிழ்மகனே கண்ணுறங்கு
காதோரம் நான் பாட
கண்ணே கண்ணுறங்கு
கன்னித்தமிழ் நீகேளு!

பூவே புதுமலரே
பூவில் மலர்ந்த பூந்தேனே
புதுராகம் நான் பாட
பூந்தேனே கண்ணுறங்கு!

மார்கழி குளிர்காத்து
உன்னை தீண்டாமல்
இதமாய் அணைப்பேன்
அந்த கதகதப்பில்
பைங்கிளியே கண்ணுறங்கு!

அம்புலி நீ விளையாட
நிலவெல்லாம் சேர்த்துவைப்பேன்
உன்பசி நான் போக்க
வட்டதோசை சுட்டு வைப்பேன்
நீதிக்கதை நான் சொல்ல
நிலவே நீ கண்ணுறங்கு!

கூடி விளையாட
அத்த மக இருக்க
ஓடி விளையாட
ஆவாரம்பூ காடிருக்கு
ஊர்க்கதைகள் நான் சொல்ல
ஊர்க்கிளியே கண்ணுறங்கு!

தாய்மொழி நான் சொல்ல
கனிமொழி நீ பேச
தமிழ்மொழிதான் வளர
தாய்மொழி நீ கற்று
தரணி ஆள்வாய்
தமிழ்மகனே!

6 comments :

  1. தாலாட்டிலும் தமிழ்ப்பற்று ஊட்டுவது
    நன்று.

    ReplyDelete
    Replies
    1. தஙகள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

      Delete
  2. நான் சொல்ல நினைத்தைத் தான் சகோதரி மேலே சொல்லி விட்டார்.சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. தஙகள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

      Delete
  3. தாலாட்டு... தாலாட்டு...

    //தாய்மொழி நான் சொல்ல
    கனிமொழி நீ பேச
    தமிழ்மொழிதான் வளர
    தாய்மொழி நீ கற்று
    தரணி ஆள்வாய்
    தமிழ்மகனே!//


    என்னை ஈர்த்த வரிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..