மனமார்ந்த வாழ்த்துகள்
Marc
என் அருமைத் தோழர்களே மற்றும் கவிகளே
என் மனமென்னும்
தோட்டத்தில் பூத்தமலர்களை
நானிங்கு விற்றேன்
உங்கள் மனக்கதவு திறந்திருந்ததால்
உங்கள் வீட்டை வாசம் செய்தது
உபயமாக தங்கள்
மனமென்னும் மலை உச்சியில்
பூத்த அன்பென்னும் குறிஞ்சிப்பூக்களை
எமக்களித்தீர் ஆனால்
அதையும் தாண்டி
நீர் அளித்த பரிசு
என்னை மகிழச்செய்கிறது
என்னை மேலும்
செயலாற்ற உந்துகிறது
எல்லாம் அவன்
வெறும் பேனா நான்
இந்த பேனாவை
பெருமைப்படுத்தியமைக்கு நன்றி!!
இக்கவிதையின் வாயிலாக திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னை அவர் தம் மனதிற்கினிய அந்த 5 இளம் பதிவாளர்கள் பட்டியல் சேர்த்து லீப்ச்டர் (இளம் வலைப்பதிவாளர்களுக்கு
வழங்கப் படும் ஒரு ஜெர்மானிய விருது) விருது வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் .
ஸ்ரவாணி அவர்களின் மனதிற்கினிய அந்த 5 இளம் பதிவாளர்கள் பட்டியல் :
1 . தன் தரமான , கனமான பதிவுகளால் மனதை சுண்டி இழுக்கும் கீதா அவர்கள் !
http://geethamanjari.blogspot.in/
2 . நகைச்சுவையும் , பல்சுவையும் கலந்து கலக்கல் பதிவுகள் தரும் கணேஷ் அவர்கள்!
http://minnalvarigal.blogspot.in/
3 . வனப்பை ரசித்து அதை மேலும் மெருகூட்ட அருமையான அழகுக் குறிப்புகள் தரும் சந்திரகௌரி அவர்கள் !
http://kowsy-vanappu.blogspot.in/
4 . ஏறக்குறைய ஒரு பத்திரிகைப் போல் இந்த நாளில் இன்னின்ன பதிவுகள் என்று அழகாகத் திட்டமிட்டு
அருமையாகப் பதிவுகள் தரும் மதுமதி அவர்கள் !
http://writermadhumathi.blogspot.in/
5 . மனதை இலகுவாக்கி அழகியக் காதல் கவிதைகள் தந்து நெஞ்சள்ளிப் போகும் தனசேகரன் அவர்கள் !
http://sekar-thamil.blogspot.in/
மேலும் என்னோடு விருது பெற்ற கீதா,கணேஷ்,சந்திரகௌரி ,மதுமதி ஆகியவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தெரிந்து கொள்ள
லீப்ச்டர் விருது
என் மனமென்னும்
தோட்டத்தில் பூத்தமலர்களை
நானிங்கு விற்றேன்
உங்கள் மனக்கதவு திறந்திருந்ததால்
உங்கள் வீட்டை வாசம் செய்தது
உபயமாக தங்கள்
மனமென்னும் மலை உச்சியில்
பூத்த அன்பென்னும் குறிஞ்சிப்பூக்களை
எமக்களித்தீர் ஆனால்
அதையும் தாண்டி
நீர் அளித்த பரிசு
என்னை மகிழச்செய்கிறது
என்னை மேலும்
செயலாற்ற உந்துகிறது
எல்லாம் அவன்
வெறும் பேனா நான்
இந்த பேனாவை
பெருமைப்படுத்தியமைக்கு நன்றி!!
இக்கவிதையின் வாயிலாக திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னை அவர் தம் மனதிற்கினிய அந்த 5 இளம் பதிவாளர்கள் பட்டியல் சேர்த்து லீப்ச்டர் (இளம் வலைப்பதிவாளர்களுக்கு
வழங்கப் படும் ஒரு ஜெர்மானிய விருது) விருது வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் .
ஸ்ரவாணி அவர்களின் மனதிற்கினிய அந்த 5 இளம் பதிவாளர்கள் பட்டியல் :
1 . தன் தரமான , கனமான பதிவுகளால் மனதை சுண்டி இழுக்கும் கீதா அவர்கள் !
http://geethamanjari.blogspot.in/
2 . நகைச்சுவையும் , பல்சுவையும் கலந்து கலக்கல் பதிவுகள் தரும் கணேஷ் அவர்கள்!
http://minnalvarigal.blogspot.in/
3 . வனப்பை ரசித்து அதை மேலும் மெருகூட்ட அருமையான அழகுக் குறிப்புகள் தரும் சந்திரகௌரி அவர்கள் !
http://kowsy-vanappu.blogspot.in/
4 . ஏறக்குறைய ஒரு பத்திரிகைப் போல் இந்த நாளில் இன்னின்ன பதிவுகள் என்று அழகாகத் திட்டமிட்டு
அருமையாகப் பதிவுகள் தரும் மதுமதி அவர்கள் !
http://writermadhumathi.blogspot.in/
5 . மனதை இலகுவாக்கி அழகியக் காதல் கவிதைகள் தந்து நெஞ்சள்ளிப் போகும் தனசேகரன் அவர்கள் !
http://sekar-thamil.blogspot.in/
மேலும் என்னோடு விருது பெற்ற கீதா,கணேஷ்,சந்திரகௌரி ,மதுமதி ஆகியவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தெரிந்து கொள்ள
லீப்ச்டர் விருது
6:32 PM
kavithai
,
kavithaigal
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
புரிந்து கொள்ளடா
Marc
| புரிந்து கொள்ளடா |
உனக்காகத்தான் உள்ளதடா
நெல்லி போன்ற உருவமடா
நெழியும் சூழ்ச்சிகள் உள்ளதடா
தன்னைத்தானே சுற்றுமடா
உன்னை இழுத்துக் கொள்ளுமடா
கொள்கையில்லா பல பேரை
மூடிப்புதைக்கும் கல்லறையடா
மனிதப் பூச்சிகள் வாழுமடா - அது
தன்னைதா னடித்துக் கொல்லுமடா
மாயப்பேய்கள் வாழுமடா - உன்
குறிக்கோள்ளெல்லாம் அழிக்குமடா
போட்டியென்று சொல்லுமடா - உன்
வாழ்வை முழுதும் கரைக்குமடா
சட்டமென்று சொல்லுமடா அதுதான்
நியாயமென்று சொல்லுமடா
பகைவனென்று சொல்லுமடா
நெஞ்சில் குத்தி கொல்லுமடா
அன்புயென்று சொல்லிவிட்டு
ஆர்ப்பாட்டம் பன்னுமடா
காதலென்று சொல்லுமடா
கழட்டிவிட்டு ஓடுமடா
காவியென்று சொல்லுமடா
காமப்பசி காட்டுமடா
வாழென்று சொல்லுமடா
வாழவிடாமல் கொல்லுமடா
போகும்போது அழுகுமடா
நல்லவனென்று கூறுமடா
அன்பே வருவாயா ?
Marc
![]() |
| அன்பே வருவாயா ? |
என்னைத் தொலைத்தேனடி
உன் விரல்களின் இடையில்
என் விரல் கோர்த்தேனடி
நீயில்லா நானுமே
நீரில்லா மேகமே
மழை தூவும் வானமே
காதல் மழை பொழிவாயா?
இரவில்லா வானத்தில்
குயில்பாடும் கானத்தில்
காலைப்பனி நனைந்தேனடி
காதல்சுகம் கண்டேனடி
இரவெல்லாம் நீண்டிருக்க
கனவெல்லாம் காத்திருக்க
கனியே நீ வருவாயா?
காதல்சுகம் தருவாயா?
வழியெல்லாம் விழிவைத்து
விழிக்குள்ளே உன்னை வைத்து
உனக்காக காத்திருப்பேன்
பூவாக பூத்திருப்பேன்
சொல்லாத சொல்லெடுத்து
குத்தாத முள்ளெடுத்து
மணமாலை நான் செய்து
மணமாற சூட்டுவேன்.
தோழி
Marc
![]() |
| தோழி |
கோடையிலும் ஓர் வசந்தம்
பாலையிலும் ஓர் சோலைவனம்
பருவமடையா வயதில்
ரெட்டை ஜடையுடன்
கைகோர்த்து நடந்தது
ஒருகை இலந்தைப்பழத்தை
இருகைகள் பகிர்ந்துண்டது
டியூசன் வகுப்புகளுக்கு
துணையாய் வந்தது
யாரோ உன்னையடிக்க
எனக்கு கோபம்வந்தது
விடுமுறை நாட்களில் வந்த
இழந்தது போன்ற உணர்வு
அண்ணணை சாக்காய் வைத்து
உன்னைப் பார்த்தது
நட்பையும் தாண்டிய
நாகரீகப் பேச்சுகள்
இடையறாத பேச்சுக்களின்
நடுவே நீ காட்டும் மெளனம்
எல்லை தாண்டியபோதும்
நட்பாய் ஏற்றுக்கொண்டது
இவைகளை நினைத்தால்
இமைகளும் வலிக்கினறன
உடல்கள் நடுங்குகின்றன
கண்கள் குளமாகின்றன
ஆயிரம் வசந்தம்
ஆயிரம் கோடை
கடந்து விட்டேன்
நீயிட்ட கோலமட்டும்
மனதில் பசுமையாய்
நிழலாடுகிறது தோழி
உன் சுவடுகள் என் நெஞ்சில்
அதை ஒவ்வொருநாளும்
படிக்கிறேன் அழுகிறேன்
மெழுகுவர்த்தி
Marc
இயற்கை வெளிச்சம் குறைந்து
செற்கைவெளிச்சம் கவிழும்
மாலை நேரம் - திடீரென
எலெக்ட்ரான் ஓட்டம் தடைபட
மீண்டும் கவிழ்ந்தது இருட்டு
இருட்டை விரட்ட அவன்
என்னோடு இருந்தான் - நானோ
கருவறை இருந்தும்
கருவில்லாத தாயைப்போல்
என்தேடலை தேடிக்கொண்டிருந்தேன்
நேரம் நகர நகர
அவன் கரைந்து கொண்டிருந்தான்
சட்டென ஓர் இருட்டு
அவன் முழுவதுமாக
கரைந்து தரையில்கிடந்தான்
ஒளி கொடுத்தவன்
நன்றி எதிர்பார்க்காமல்
தன்னை அர்பணித்து
தரையில் கிடக்கிறான்
நானோ சுயநலமாக
அவனிடம் பேசாமல்
இருந்துவிட்டேன்
கரைந்த உடலை
தழுவிக்கொண்டே கண்ணீருடன்
நகர்ந்தது மாலைவேளை
இன்னும் எத்தனை
தியாகங்களை மறந்தேனோ!!!
![]() |
| மெழுகுவர்த்தி |
மாலை நேரம் - திடீரென
எலெக்ட்ரான் ஓட்டம் தடைபட
மீண்டும் கவிழ்ந்தது இருட்டு
இருட்டை விரட்ட அவன்
என்னோடு இருந்தான் - நானோ
கருவறை இருந்தும்
கருவில்லாத தாயைப்போல்
என்தேடலை தேடிக்கொண்டிருந்தேன்
நேரம் நகர நகர
அவன் கரைந்து கொண்டிருந்தான்
சட்டென ஓர் இருட்டு
அவன் முழுவதுமாக
கரைந்து தரையில்கிடந்தான்
ஒளி கொடுத்தவன்
நன்றி எதிர்பார்க்காமல்
தன்னை அர்பணித்து
தரையில் கிடக்கிறான்
நானோ சுயநலமாக
அவனிடம் பேசாமல்
இருந்துவிட்டேன்
கரைந்த உடலை
தழுவிக்கொண்டே கண்ணீருடன்
நகர்ந்தது மாலைவேளை
இன்னும் எத்தனை
தியாகங்களை மறந்தேனோ!!!
பாவம்
Marc
![]() |
| பாவம் |
அதன்கீழ் ஒர் விடிவெள்ளி
இரவின் நிழலில்
நீண்ட சாலையில்
அலங்கார விளக்கெடுத்து
ஊர்திகள் விரைந்துசெல்ல
சாலையிலன் ஓரம்
என்னவளின் கைபிடித்து
குலாவிக்கொண்டிருந்த தருணம்
சற்று தூரத்தில்
பூனையொன்று ரோட்டில்பாய
ஊர்தியொன்று தலையில் ஏற
சடக்கென சத்தம்
என்னவளே அய்யோவென
இதயம் நின்றது
போல ஓர் உணர்வு
பூனையின் கால்கள் உதற
அதை கடந்த தருணம்
கல்லானது இதயம்
மனம்மட்டும் கதறியது
அய்யோ பாவம்!
அய்யோ பாவம்!
Subscribe to:
Posts
(
Atom
)









விருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
விருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.