ஓர் அழகான எழுத்து முயற்சி.

அன்பே வருவாயா ?

10 comments
அன்பே வருவாயா ?
அன்பே வருவாயா ?
உன்னைப் பார்த்த நொடியில்
என்னைத் தொலைத்தேனடி
உன் விரல்களின் இடையில்
என் விரல் கோர்த்தேனடி
நீயில்லா நானுமே
நீரில்லா மேகமே
மழை தூவும் வானமே
காதல் மழை பொழிவாயா?

இரவில்லா வானத்தில்
குயில்பாடும் கானத்தில்
காலைப்பனி நனைந்தேனடி
காதல்சுகம் கண்டேனடி

இரவெல்லாம் நீண்டிருக்க
கனவெல்லாம் காத்திருக்க
கனியே நீ வருவாயா?
காதல்சுகம் தருவாயா?

வழியெல்லாம் விழிவைத்து
விழிக்குள்ளே உன்னை வைத்து
உனக்காக காத்திருப்பேன்
பூவாக பூத்திருப்பேன்

சொல்லாத சொல்லெடுத்து
குத்தாத முள்ளெடுத்து
மணமாலை நான் செய்து
மணமாற சூட்டுவேன்.

10 comments :

 1. வழியெல்லாம் விழிவைத்து
  விழிக்குள்ளே உன்னை வைத்து
  உனக்காக காத்திருப்பேன்
  பூவாக பூத்திருப்பேன்
  அழகான வரிகள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 2. இசையோடு பாட ஏதுவான பாட்டு
  கருத்தும் சொற்களைக் கோர்த்தவிதமும் அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 3. மனதை இனிமையானத் தென்றலாய் வருடும்
  ஒரு அழகான காதல் கவிதை. மிக ரசித்தேன்.

  ReplyDelete
 4. உன்னைப் பார்த்த நொடியில்
  என்னைத் தொலைத்தேனடி
  >>
  முதல் பார்வையிலேயே காதல்ல தொபுக்கட்டீர்ன்னு விழுந்திட்டீங்களா

  ReplyDelete
 5. ஏக்கமும் காதலும் கலந்து கவிதையானதோ !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 6. சொற்களால் கோர்த்தெடுத்த அழகான மாலை யாருக்கு கொடுப்பினை உண்டோ ?

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..