ஓர் அழகான எழுத்து முயற்சி.

ஏ பெண்ணே !

22 comments
ஏ பெண்ணே
ஏ பெண்ணே !
மடிதாங்கி பெற்றாய்
அம்மா என்றேன்,
எனக்கு முன்னே பிறந்தாய்
அக்கா என்றேன்,
எனக்கு பின்னே பிறந்தாய்
தங்கை என்றேன்,
தலைகோதி நடந்தாய்
தோழி என்றேன்,
தனிமையை போக்க
கைபிடித்து வந்தாய்
மனைவி என்றேன்,
பிறந்தது முதல் கடைசி வரை
என்னோடு இருக்கிறாய்
உனக்கு உலகையே
தரலாமென நினைத்தேன் - நீயோ
சிரித்தமுகம்
அன்பான வார்த்தை
இதமான அரவணைப்பு
கனிவான பேச்சு
என தெரியாததை கேட்கிறாய்.
கொஞ்சம் பொறு
நானும் கற்றுக்கொள்கிறேன்
இந்த மிருகத்தோளை கிழித்துவிட்டு
நுண்ணுணர்வுகளின் பிரபஞ்சத்திற்குள்
கைவீசி நடக்கலாம்
முன்னே சென்று விடாதே
அக்காவாகி விடுவாய்
பின்னே சென்று விடாதே
தங்கையாகி விடுவாய்
என்னோடு சேர்ந்து வா
இன்பம் தரும் தோழனாகவும்
துன்பம் போக்கும் கணவனாகவும்
கைகோர்த்து வருகிறேன்.


22 comments :

 1. ஒன்றைப் போற்ற இன்னொன்றைக் குறை சொல்ல வேண்டுமா.? பெண்மையைப் போற்றுவோம்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 2. பெண்ணின் உணர்வுகளைக் கூறும் அழகான மகளிர் தின கவிதை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 3. \\\மடிதாங்கி பெற்றாய்
  அம்மா என்றேன்,
  எனக்கு முன்னே பிறந்தாய்
  அக்கா என்றேன்,
  எனக்கு பின்னே பிறந்தாய்
  தங்கை என்றேன்,
  தலைகோதி நடந்தாய்
  தோழி என்றேன்,
  தனிமையை போக்க
  கைபிடித்து வந்தாய்
  மனைவி என்றேன்,///

  நன்றாக இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 4. பெண்ணின் பெருமை போற்றும் அழகான கவி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 5. நண்பரே, பெண்ணை பற்றி அருமையாக எழுதிவிட்டீர்கள்....கவித்துவம் சகஜமாக வரும் போல இருக்கே...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 6. //சிரித்தமுகம்
  அன்பான வார்த்தை
  இதமான அரவணைப்பு
  கனிவான பேச்சு
  என தெரியாததை கேட்கிறாய்.
  கொஞ்சம் பொறு
  நானும் கற்றுக்கொள்கிறேன்//
  தன்னாலே வராதா என்ன அவள் அண்மை தரும் சுகத்தில்!
  அருமை தனசேகரன்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 7. கொஞ்சம் பொறு
  நானும் கற்றுக்கொள்கிறேன்
  இந்த மிருகத்தோளை கிழித்துவிட்டு
  நுண்ணுணர்வுகளின் பிரபஞ்சத்திற்குள்
  கைவீசி நடக்கலாம்///
  ரசித்த வரிகள் .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 8. மகளிர்தின கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள் சகோதரா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 9. அருமை சகோ. வரிகள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 10. பெண்களை எவ்வளவு தூரம் மதிக்கிறீர்கள் என்று உங்கள் அன்பும் அழகும் கலந்த இந்தக் கவிதை சொல்கிறது !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 11. ''என தெரியாததை கேட்கிறாய்.
  கொஞ்சம் பொறு
  நானும் கற்றுக்கொள்கிறேன்..''
  மனிதனுக்குள் இன்னொன்று இருப்பதை மிக எளிய முறையில் கூறப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..