அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

போய்வா 2011

தூக்கம் கலைந்து
துயிழெழும் நேரம் வந்த
கனவினைப் போல
கடந்து சென்றாயே!
பல கனவுகள்
பல சபதங்களுடன்
உன்னை தொடர ஆரம்பித்தேன்!

என்னோடு நீயிருந்த 
365 நாட்களில்
இன்பத்தில் சிலநேரம்
துன்பத்தில் சிலநேரம்
ஏற்றத்தில் சிலகாலம்
இறக்கத்தில் பலகாலம்
அடடா என்னே
நீ கொடுத்த அனுபவம்!

கனத்த இதயத்துடன் சில கணங்கள்
இறகைப்போலே  சில கணங்கள்
கண்ணீருடன் சில நேரம்
கவிதையுடன் சில நேரம்
சொல்லிய வார்த்தைகள்
சொல்லாமல் சென்றவர்கள்
திரும்பிப் பாக்கையில்
எத்தனை பதிவுகள்
என் பதிவேட்டில்!
ஓடிக்கொண்டே இருந்துவிட்டாய்.

இந்த 365 நாட்கள்
என் காதேரம், கனவுகள்,
தனிமை, கவிதை
கண்ணீர் என
என்னோடு இருந்தாய்!
இப்போது செல்லப் போகிறாய்!
மீண்டு வரமுடியாத
இடத்திலிருந்து வந்து
திரும்பிபெற முடியாதவற்றை
தந்துவிட்டு செல்கிறாய்!
உன் காலடி தடம்
என் நெஞ்சில் மாறா இரனமாய்இருக்க
என்னை விட்டு செல்கிறாய்!
பரவாயில்லை!
போய்வா நண்பனே!
போய்வா 2011!!





அவள்

காம்பின்மேல் வரைந்த
அற்புத ஓவியம் மலர்,
பூமியின் மேல் மலர்ந்த
அற்புத மலர் அவள்!


நியாயமா?

ஒவ்வொருமுறையும் உன்னை
பெண்ணாக படைக்கிறான் கடவுள்,
ஒவ்வொருமுறையும் உன்னை
தேவதை ஆக்குகிறேன் நான்,
நீயோ கடவுளை வணங்குகிறாய்
என்னை முறைக்கிறாய்
இது நியாயமா?


காதலின் வலி

காதலின் சின்னம் ரோஜா என்பதற்காக
நான் கொடுக்கும் செம்பருத்தியை மறுக்காதே!

காதலின் பரிசு நிலவு என்பதற்காக
நான் கொடுக்கும் கைகுட்டையை மறுக்காதே!

காதலின் நிறம் சிகப்பு  என்பதற்காக
என் உடலை கிழிக்கச் சொல்லாதே!

காதலின் பார்வை குருடு என்பதற்காக
என்னைப்பார்த்து கண்களை மூடிக்கொள்ளாதே!

காதலுக்கான இடம் இதயம் என்பதற்காக
என் இதயத்தை கிழிக்காதே!

காதலின் மொழி மெளனம் என்பதற்காக
என்னிடம் பேசாமல் கொல்லாதே!

காதல்வெறும் சொல்  என்பதற்காக
உன்காதலை சொல்லாமல் கொல்லாதே!




சொல்லாத பார்வைகள்

உருகும் மெழுகோ இங்கிருக்க
எரியும் தீயோ அங்கிருக்க
உன் சொல்லாத பார்வைகள்
என்னை உருக்கிச் செல்லுதே
உன் கொல்கின்ற மெளனங்கள்
என்னை சுழட்டிச் செல்லுதே!

சாலையோரம் வீற்றிருக்கிறேன்
காதல்வருமென காத்திருக்கிறேன்
காற்றினூடே கலந்திருக்கிறேன்,
உன்வாசம் வருமென காத்திருக்கிறேன்
என்ஒற்றை ரோஜா
உனக்காகத்தான்!
என் ஏங்கும் இதயமும்
உனக்காகத்தான்!
இந்த காத்திருப்பும்
உனக்காகத்தான்!

காலை நிலவே வருவாயா
காதல் ஏக்கம் தனிப்பாயா
நிலவே நிலவே வருவாயா
உன் புன்னகைகொஞ்சம் தருவாயா
இசையே நீயும் வருவாயா
என் மனதைகொஞ்சம் கரைப்பாயா
பனியே பனியே களைவாயோ
அவளின் கனிமுகம் அருள்வாயா




நான்

விந்தை எடுத்து
அண்டத்தில் குழைத்து
இருட்டில் வரைந்த
ஓவியம் நான்!
மண்ணில் விழுந்து
விண்ணை இடித்து
ஓங்கி வளர்ந்த
கற்பகவிருட்சம் நான்!
சொல்லை எடுத்து
தேனில் குழைத்து
காற்றில் எழுதிய
கவிதை நான்!

சொல்லை தாண்டிய சொல்லும் நான்
கற்பனைக்கு எட்டாத கற்பனை நான்
இருளில் கலந்த இருளும் நான்
ஒளியை தாண்டிய ஒளியும் நான்
தாகத்தில் கலந்த தண்ணீர் நான்
பசியில் கலந்த வறுமை நான்

காக்கை சிறகினில் நான்
குயிலின் குரலில் நான்
குளிர்ந்ததென்றல் காற்றும் நான்
கடும் பாலை நிலமும் நான்
எல்லைகடந்த எல்லை நான்

மூச்சும் நான்
சுவாசம் நான்
மண்ணும் நான்
விண்ணும் நான்
கண்டதும் நான்
காணபோவதும் நான்
தெடுவதும் நான்
தெடுபொருளும் நான்
உண்மை நான்
உயிரும் நான்
நானும் நான்
நீயும் நான்

அண்டம் அதிர
பிண்டம் குலுங்க
உலகை படைத்த
கடவுளும் நான்!

படங்களும் சில கிறுக்கல்களும்

விழியின் இருகரைகளிலும்
கண்ணீர் வெள்ளம்
பயம்கரையை கடப்பது எப்போது?














 மனம்கனந்த நிலையில்
மரத்தின் மடியில்!
இலையுதிர்காலம் போல்
சோகம்யுதிர்காலம் வராதோ!













 எவ்வளவு எரித்தும்
சாம்பலாகாத பெண்கொடுமை
இன்னும் எவ்வளவுகாலம்
பார்வையால் எரிக்கவேண்டுமோ?













 அடிவயிற்றிலோ ஆனந்தம்
மேலேமனதிலோ சோகம்
என்னேஇந்த இருதலைகொள்ளி வாழ்க்கை!














 சோகங்களை எவ்வளவு நாள்தான்
ஆற்றங்கரைகளில் கரைப்பது?















 வாழ்க்கையை கரைக்க நினைப்பவர்களின்
கடைசிவாசத்தலம் ஆலமர நிழல்.

புதுகாதல் ஜோடி

இருஜோடி கால்தடங்கள்
கடற்பரப்பில் கால்பதிக்க
மேலும் ஒருகாதலை
பதிந்துகொண்டால் கடல்அன்னை!

முல்லை பெரியாறு

அணையில் விழவேண்டிய விரிசல்
இப்போது மக்கள் மனதில்
நீர்கசிய வேண்டிய இடத்தில்
இரத்தம் கசிகிறது!

கடற்கரை

அலைக்கும் கரைக்கும்
இடையேயான காதல்விளையாட்டு!
யாரும் இல்லாதபோதும்
தொடர்கிறது தொட்டுவிளையாட்டு!