ஓர் அழகான எழுத்து முயற்சி.

புத்தாண்டு வாழ்த்துகள் -2014

2 comments
வருடங்கள் கடப்பதை மனம் மறந்தாலும் ,
உடல் காட்டி கொடுத்துவிடுகிறது.
இழப்புகள் வலித்தாலும்,
வாழ்க்கை திருப்பங்கள் இனிக்கின்றன.
இருள் பயமூட்டினாலும் ,
ஒளி நம்பிக்கையளிக்கிறது.
அவரவருக்கொரு கொள்கை,அதற்கொரு பயணம்,
எங்கோ சந்தித்தோம் ,எங்கோ போகிறோம்?
இளைப்பாறும் நேரம் சந்தித்துக்கொள்கிறோம்,பகிர்ந்துகொள்கிறோம்.
வாழ்க்கை நம்மை எங்கோ அடித்து செல்கிறது.
சில நேரம் அழுகிறாம்,சில நேரம் சிரிகிறோம்,
சில நேரம் தோற்கிறோம்,சில நேரம் ஜெய்க்கிறோம்.
திரும்பி பார்க்கும் போது,
இந்த கூத்து வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
முகங்கள் மாறினாலும் அன்பு மாறுவதில்லை,
எல்லைகள் தாண்டினாலும் நட்பு மாறுவதில்லை.
தோல் கொடுக்க தோழர்கள் உண்டு,
அன்பு பாராட்ட உறவுகள் உண்டு.
வாழ்க்கையை வாழ்ந்து அழிப்போம்,
சாகும் வரைபோராடுவோம்,பயமில்லை ,கலக்கமில்லை.
காலனையும் காலத்தையும் சிரித்துக்கொண்டே வரவேற்போம்.

2 comments :

  1. நம்பிக்கையூட்டும் வரிகள். மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.படித்துப் பாருங்களேன் “என்னை நானே உணர வை” gmbat1649.blogspot.in/2011/11/blog-post_27.html

    ReplyDelete
  2. வரும் ஆண்டில் அனைத்தும் மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..